சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்
மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்
பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்
பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்
பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்
பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்
பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்
தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்
நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்
நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்
அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்
கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்
பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்
மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே [...]
Archive for மார்ச், 2008
சற்குரு சரணம்
மார்ச் 31, 2008ஞான யுகத்துக்கான மத நல்லிணக்க உறுதி மொழி
மார்ச் 31, 2008என் உடம்பு ஆதிசக்தியின் திருக்கோயிலாய் இருக்கிறது.
என் உடம்பு பரிசுத்த ஆவியின் புனித தேவாலயமாய் இருக்கிறது.
என் உடம்பு புனித ரூவின் பள்ளி வாசலாய் இருக்கிறது.
என் மூச்சில் பரப்பிரம்மணின் சக்திப் பிரவாகம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் பரமபிதாவின் கிருபை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் அல்லாவின் அருள் வெள்ளம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மனம் சத்குருவின் அருள்வாக்கையும் அருட்ஜோதியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் கிறிஸ்துவின் ஜீவவசனத்தையும் ஞானஒளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் நபிகளின் அருண்மொழியையும் அன்பொளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அன்னை [...]
மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை
மார்ச் 31, 2008புனித அன்னையின் தூய இருதயத்திலிருந்து உமக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த வெகுமதியே “மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை” எனும் ஆற்றல் மிக்க இத்தியானம்! இதை தினமும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால், உமது வாழ்வில் அதிசயம் நடக்கும்! இது நிச்சயம்! இது உறுதி! இது சத்தியம்! எல்லாம் வல்ல அருட்பெருங்கடவுளின் மீது ஆணை!
மத நல்லிணக்கத்துக்கான அதிசய மாலை
நிபந்தனைகளேதுமற்ற பேரன்பாய் விளங்கும்
பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் அருட்தந்தையின் பெயரால்,
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, புனித ரூ என்று [...]
சாயி பாபாவின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு
மார்ச் 31, 2008“சாயி சத் சரிதம்” என்ற சாயி பாபாவின் அருள் வாக்கை தியானித்த பின் அவரது அருள் வாக்கை ஏற்கும் வகையில் இப்பாட்டைப் பாடி மகிழ்வீராக! நன்றி.
1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பூஜ்ஜியமான என்னிலிருந்து பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இருட்கிடங்கான என்னிலிருந்து சுயம்பிரகாசமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் [...]
சாயி சத் சரிதம்
மார்ச் 31, 2008ஷிர்டி என்னும் உன் மெய்யான(உடம்பான) திருத்தலத்திற்குள்ளேயே சாயி பாபாவெனும் நான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறேன், ஒளிந்திருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான் என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் சத்குரு தீட்சையே “சாயி சத் சரிதம்” என்ற இப்பேருபதேசம்.
துவைத பக்தியின் விளைவாக நீ படைத்திருக்கும் பொய்யுலகிலிருந்து உன்னை மீட்டு உன் சுய ரூபத்தை உனக்கு உணர்த்தி “நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி” என்ற அத்வைத ஞானம் நீ பெறவே என்னையே உனக்குத் தந்து [...]
ஆன்ம நேய ஒருமையை உறுதிப்படுத்தும் வள்ளலாரின் புதிய ஏற்பாடு
மார்ச் 31, 2008உச்சியில் முளைத்து நெற்றியில் படரும்
அருட்பெருஞ்ஜோதிக் கொடியில்
செஞ்சுடர்ப்பூ.
செஞ்சுடர்ப்பூவின் வாசம்
நாசியிலோடும் வாசியில் சேர
நாவிலூறும் அருளமுதம்.
அருளமுதம் தாரையாய்த்
தொண்டைக்குள் வீழ
மெய்யெங்கும் மூளும் உயிர்த்தீ.
உயிர்த்தீ அனலால்
பரவும் மெய்யெங்கும்
நேசச் சூடு.
நேசச் சூட்டில் இருதயம் உருக
உணர்வில் பெருகும்
ஆன்ம நேய ஒருமை.
ஆன்ம நேய ஒருமையால்
கனிந்து அன்பாய்க் குழையும்
அறிவு.
அன்பாய்க் கனிந்த அறிவு
எல்லா உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாத்து வழிநடத்தும்
ஆற்றலாகும்.
ஆற்றலாகித் தொண்டு செய்யும் அறிவின் அன்புக் கனிவே
தனிப்பெருங்கருணைக்கு மூலமாகி மேலெழுந்து
அருட்பெருஞ்ஜோதிக் கொடியாய் உச்சியில் முளைக்கும்.
அறிவின் அருளாற்றலே
தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் வீழும்
நல்வித்து.
தனிப்பெருங்கருணைப் பெருவெளியாம் நன்னிலத்தில் முளைக்கும் அருட்பெருஞ்ஜோதிக் கொடியே
மரணமிலாப் பெருவாழ்வை உலகறிய நடப்பட்ட
சர்வ சமய [...]
கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.
மார்ச் 31, 2008வள்ளலே!
பள்ளத்தில் விழுந்து
உள்ளேனென்ற உணர்வும்
ஒரு சிறிதுமின்றி
சவமாகக் கிடந்த
என்னை எழுப்பி
சொற்கடந்த மந்திரத்தை
நற்றமிழ்ச் சொல்லாக்கி
நல்லதேதும் கல்லாத
பொல்லேனுக்குத் தந்து
எவ்வழியும் நில்லேனை
மெய்வழியில் நில்லென நிறுத்தி
“சாவை வெல்லும் சாகசக் கலையை
நீ உலகுக்கு போதிப்பாய்“
என்றே பணித்தீர்.
“ஐயனே!
என் பொருள் என்று
நீவிர் தந்த குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
தன் பொருள் என்றே
நனி உவந்து
என் வீடாம் இவ்வுலகின்கண் வாழும்
என் குடும்ப உயிர்த்திரள்
ஏற்கும் நாள் எந்நாளோ?”
என்றே ஏங்கி நின்ற
என்னைத் தழுவி உறுதி சொன்னீர்.
“என் அன்பு மகனே!
பாரபட்சமின்றி
நான் உனக்கு அளந்ததை
பாரபட்சமின்றி
நீ உலகுக்கு அளக்கிறாய்.
என் கடை விரித்துக் காத்திரு
வழி மேல் விழி வைத்து.
குரு மந்திர தாரணையாம்
மகாயோகத்தில் [...]
வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு
மார்ச் 31, 2008பூரணராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னிறைவுத்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
சுயம்பிரகாசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
பேருண்மையாளராய் நித்தியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நித்திய ஜீவனை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
அமிர்தானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆன்மநேய ஒருமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
பேரன்பராய்ப் பேரருளாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இயல்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
பேரறிஞராய்ப் பேரறிவாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் நிறைவையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் [...]
திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்
மார்ச் 31, 20081. பூரணராய் உனக்குள் வந்தேன். தன்னிறைவுத்தன்மை உனக்குத் தந்தேன்.
2. சுயம்பிரகாசராய் உனக்குள் வந்தேன். சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை உனக்குத் தந்தேன்.
3. பேருண்மையாளராய் நித்தியராய் உனக்குள் வந்தேன். நித்திய ஜீவனை உனக்குத் தந்தேன்.
4. அமிர்தானந்தராய் உனக்குள் வந்தேன். ஆன்மநேய ஒருமை உனக்குத் தந்தேன்.
5. பேரன்பராய்ப் பேரருளாளராய் உனக்குள் வந்தேன். என் இயல்பையே உனக்குத் தந்தேன்.
6. பேரறிஞராய்ப் பேரறிவாளராய் உனக்குள் வந்தேன். என் நிறைவையே உனக்குத் தந்தேன்.
7. அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் வந்தேன். [...]
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மார்ச் 31, 2008மாத்ரு பூமி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் சூர்ய சக்ரம் அனாஹதம் அம்ருதகலஸம் விசுத்தி சக்ரம் ஆக்ஞா சக்ரம் ஸஹஸ்ராரம்
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்
அஹம் அஸ்மி ஐக்யம் ஓம் ஸ்ரீ ராதாக்ருஷ்ணம்
ஓம் ஸ்ரீ ஸத்குரு அவதாரம்
சுதர்ஷனசக்ர சூர்யோதயம்
மஹாப்ரளயம் பாபநாஷம் ஸர்வ ரோக நிவாரணம் ம்ருத்யுஞ்ஜயம் ஹிரண்யகர்ப்பம் புருஷோத்தமம்
ஸத் நாமம் சின்மய ரூபம் ப்ராணானந்தம்
ஸச்சிதானந்தம் நித்யானந்தம் ஜீவானந்தம்
ஸத்யம் சிவம் பராக்ரமம் சுத்த தேஹம்
சக்திப்ரவாஹம் ப்ரேமஸாகரம் கருணாம்ருதம் புத்த சித்தம்
சுந்தரம் சிவசக்தி ஐக்யம் ஸத்குரு அனுக்ரஹம் அத்வைத ஞானம் மஹாயோகம் ஸத் தர்ஷனம் ப்ராணாம்ருதம்
ஸத்யம் [...]
