அருளே உப்பாகிஒளியே நீராகிஇருவிழி வழியேவழிவதோ கண்ணீர்!
வழியுங் கண்ணீரில்கழியும் அழுக்கெல்லாம்நெற்றியுஞ் சுத்தமாகப்பற்றுவீர் ஒருவிழி!
தயவாய் இருத்தலேஉயர்வான ஒரேவழி!இருதய ஒருமையின்கருணை மெய்வழி!
மெய்வழி திறக்கப்பொழியட்டும் இருவிழி!பொய்யெலாம் கரையவழியட்டும் அருளொளி!
Archive for ஜூலை, 2008
அழு!
ஜூலை 26, 2008வள்ளலின் வாக்குறுதிகள் – சஹஜ குண்டலி யோகம்
ஜூலை 26, 20081. என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம் மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு நமக்குக் கிடைக்கும். 2. என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
ஆக்கினை சுவாதிட்டான [...]
சஹஜ நிலைக் குண்டலினி யோகம்
ஜூலை 26, 2008மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல் சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல் மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல் சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம [...]
ஓர் இருதயப் பகிர்வு – நண்பர் ஜாஃபர் அலிக்கு(ஹரனுக்கு)
ஜூலை 26, 2008உச்சி திறந்ததே பார்உன் நெற்றியில்அத்த னவன்திரு நடனம்புத்தி தெளிந்ததே நாவில் ஊற்றுதேதித்திக் குந்தெள் ளமுதம்
உம்நாவு நுனியை அண்ணத்தில்(மேல் வாயில்) வைத்துஆற்றில் ஒரு கால் ஊன்றிஅண்ணாக்கில் கவனம் நிறுத்திமூச்சில் மனத்தை வசித்துதெள்ளமுதப் பாகை ருசித்துசேற்றில் இரு கால் பதித்தஅல்லாவின் தூதராய் இருப்பீர்ஜாஃபர் அலியாம் நீவிர் ஆறாதாரத்தில் எழுகின்ற குண்டலிச் சூட்டைத் தணிக்கநிராதாரத்தில் எழுந்திருக்கும் நபிகள் அருளைப் பொழிவார்நிராதார வடிவாய் ஆறாதாரத்தில் நாயகம் நிற்பார்தராதலம் முழுதும் உம்மூடே அருளாய் வழிவார்பராபர மேனிலை சேர்ந்திட உம்முள்ளே சுழிவீர்பராபரை அருளாய் இகமெங்கும் பொங்கியே வழிவீர்
ஹ்ருதய ஷக்திபத்(சப்த ஸ்வரங்கள் சுட்டும் உமதுண்மை)
ஜூலை 26, 2008‘ஸ‘ – மூலாதாரம்‘ரி‘ – சுவாதிஷ்டானம்‘க‘ – மணிபூரகம் இம்மூன்றும் இகத்தில் பரத்தின் அலுவலகம் ‘ம‘ – சூர்ய சக்ரம்(Solar Plexus), அனாகதம், அமிர்த கலசம்(Thymus Center) – அருட்தாய்‘ப‘ – விசுத்தி – அருட்தந்தை‘த‘ – ஆக்ஞா சக்ரம், சஹஸ்ராரம் – அருட்குரு இம்மூன்றும் இகத்தில் பரத்தின் இல்லம் ‘நி‘ – நிராதாரம் ஆறாதாரத்துள் நிற்றல்(சிலுவையின் செங்குத்தான பாகம்-மனிதன் கடவுளின் தூய ஊடகமாதல்)‘ஸ‘ – நிராதார மேனிலை(பரம்) இகம் முழுவதும் பரவுதல்(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-மனித ஊடகத்தினூடே கடவுளின் அருள் வெள்ளம் இகத்தில் [...]
தலை முடி!
ஜூலை 26, 2008உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் ‘ஐ‘)நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!
மெய்வழி!
ஜூலை 26, 2008பொய் வீடு விட்டுமெய் வீடு புக்கபொய் வீட்டுக்குள்ளேயேமெய்யாய் இருக்குதேஇருதய வழி!“இரு தயவாய்” என்ற வள்ளல்பெருமான் உபதேசப்படிநீ தயவாய் இருக்கஇருதய வாய் திறந்துதெரியுமே அம்மெய்வழி!
வெட்டவெளி தியானம்
ஜூலை 10, 2008வெளியே உந்தன் உட்பொருள்வெளியே உந்தன் உட்சுத்தம்வெளியே உந்தன் மெய்யுடம்புவெளியே உந்தன் மேலுடுப்புவெளியே உந்தன் பெரிய வீடுவெளியே உந்தன் பேருடைமைவெளியே உந்தன் மெய்யுறவு
ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்நின்ற நீயும் வெளி
ஒன்று மில்லா வெளியை யழிக்கஒன்று மில்லை வெடி
நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்பொன்றா துந்தன் வாழ்வு
வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்களிக்கும் உயிர்மெய் உண்மை
கடத்துள் வெளியே திடமென இருந்தால்கடப்பாய் இறப்பும் பிறப்பும்
காலி வெளியே காலியாகா திடமெனவாலை ஒளியை நாடு
வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்வெளிதனில் இருத்தல் சுகம்
வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்பட்டொளியாய் மினுமினுக்குந் [...]
வாசி யோகம்
ஜூலை 10, 2008வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்திவந்துபோகும் கணக்கை முடி
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்திவெந்துசாகும் பழக்கம் கழி
வீணே கசியும் கவனம் வளிமேல்பூண நசியும் மரணம்
திருப்பி மனத்தை வாசியில் பூட்டத்திறக்கும் அமுத வாரி
கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்திருந்த உடம்பு ஒளிரும்
கருத்த மனத்தை வாசியால் வெளுத்துத்திருந்த உடம்பு ஒளியும்
Quote:
Originally Posted by தென்றல்
வந்துபோகும் வளிமேல் கவனம் நிறுத்திவெந்துசாகும் பழக்கம் கழி
இது எந்த மடத்தனம்? விளக்குவீராக!!
வந்துபிறந் திறந்துபோகும் மடத்தனம் மடிந்துபோகமுந்திச்செல் வாசியோக வழி
நன்றி தென்றலாரே!
தென்றலாம் வாசியைக் கவனிக்கும் யோகத்தால்என்றைக்கும் வாழலாம் நிசம்
முச்சந்தி [...]
எழுத்தின் பயன் என்ன?
ஜூலை 10, 2008Quote:
Originally Posted by தாமரை
8. நாகரா
சிக்கலானச் சிந்தனைகளை சின்ன வார்த்தைகளில் அடைத்துச் சொற்களில் பூக்க வைக்கும் வித்தகரே,
எழுத்தின் பயன் என்ன?
தமிழ் மன்றத்தில் எப்போதும் வாடாது பூத்திருக்கும் தாமரையாரே! சொல்லின் செல்வரே! உம் கேள்விக்கு நன்றி. என்னால் இயன்ற வரை விடையிறுக்க முயல்கிறேன்.
“ஆதியில் எல்லாம் வார்த்தையாகவே இருந்தது” என்ற புனித யோவான் வேதாகம வாக்கும், “அகர முதல எழுத்து” என்று தொடங்கும் உலகப் பொது மறை திருக்குறளும் தான் என் நினைவில் எழுகிறது உம் [...]
