Archive for ஜூலை, 2008

எழுத்தின் பயன்

ஜூலை 10, 2008

உண்மை = உள் மெய் = உள்ள மெய்ம்மை = உள்ளிருக்கும் மெய்ம்மை = உள்ளுடம்பாம் சுத்த தேகம்(இது உம் பிறப்புரிமை, மரணமிலாப் பெருவாழ்வை நிரூபிக்கும் மகிமை)பொறுமை = பொறு மெய் = பொறையுணர்வுள்ள(பொய்யையும் பொறுக்கும் பெருந்தயவுள்ள) மெய்ம்மைநேர்மை = நேரான மெய் = உயர்நெறியான மெய்ம்மைஎளிமை = எளி மெய் = கடைப்பிடிக்க எளிய(எப்போதும் அலட்டிக் கொள்ளாத) மெய்ம்மைமேன்மை = மேல் மெய் = மேலான மெய்ம்மை(மேல் கீழ் என்று பாரபட்சம் பாராத)மெய்ம்மை = மெய் [...]

இ(ரு)தயம்

ஜூலை 10, 2008

இ(ரு)தயத்தில் கோயில் கொண்ட இறைவனேஇதயத்தின் இரத்தச் சிவப்பு
இ(ரு)தயத்தில் வாழுந் தயாபரக் கடவுளேஇதயத்தின் உயிர்ப்பாந் துடிப்பு
இ(ரு)தயத்தில் ஒளிரும் அருட்ஜோதிப் பிழம்பேஇதயத்துள் ஒளிந்த பழமை
இ(ரு)தயவாய் திறந்து பெருந்தயவு வழிந்தோடஇதயத்துள் இன்பக் களிப்பு
இ(ரு)தயவாய் திறந்தே இருநீ தயவாய்இதயத்துக் கதுவே உயிர்ப்பு

அன்பின் வழியது உயிர்

ஜூலை 10, 2008

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு
1. அன்பின் வழியது உயிர்
உயிர் என்று சொல்லப் படுவது அன்பு என்று சொல்லப்படும் அருளொளி(அருட்பெருஞ்ஜோதி-Spiritual Light) தங்கு தடையின்றி ஓடும் வழி
2. நில் ‘ஐ’ அஃது.
அன்பென்று சொல்லப்படும் அருளொளியே, நித்தியப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும் ‘ஐ’ யாம்(I AM) தனித் தலைமைப் பெரும்பொருள்(தனிப்பெருங்கருணை-Supreme Grace or Compassion)
3. இல் ஆர்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
என்புதோல் போர்த்திக் கட்டப்பட்டிருக்கும் மெய்யுடம்பாகிய திடமான இல்லம் யார்க்கு?அன்பென்று சொல்லப்படும் அருளொளியாம் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணைக்கு அன்றி [...]

எளிய பிரார்த்தனை

ஜூலை 10, 2008

அருவ இருதயத்தின்பரிபூரண வெளிப்பாடாய்உருவான சுத்த இதயம்நாறுமோர் மாமிசப் பிண்டமாய்த்திரிந்தது எதனால்!?அவ்வாறு திரித்த மனத்தால்அதைத் திருத்த இயலாதுவருந்தி மனந்திரும்பிஇருதயத்தில் மனமடங்கமாமிசப் பிண்டம்சுத்த இதயமாய் மாறும்!
மெய்யுடம்பாலயமாம் சுத்த தேகம்பொய்க்கிடங்காய்த் திரிந்ததேனோ!?பரமன் தந்த தங்க மெய்யைப்பாவி மனம் பங்கப் படுத்தித் திரித்ததாலே!திரித்த மனம் முழுப்பொறுப்பேற்றுவருந்தி மனந்திரும்பிப்பணிவுடன் மன்னிப்பைக் கோரப்பரமன் சட்டென வருவான்திரிந்ததைத் திருத்திமெய்யெனும் தங்கமாய் மாற்ற!ஏனென்றால் அவன் பெருந்தயாபரன்.மனிதாதிரிக்க மட்டுமேஉன்னால் முடியும்.உன்னால் திரிந்ததைச்சரி செய்யப்பரமனால் மட்டுமே முடியும்.திரித்ததற்கான முழுப் பொறுப்பேற்கும்பணிவும் வீரமும் நேர்மையும்வருத்தமும் மனத்திருப்பமும்மன்னிப்பைக் கோரும் அடக்கமும்உனக்குத் தேவையானஉன் கடமை.நீஉன் கடமை [...]

பரமானந்தம்

ஜூலை 10, 2008

சஹஸ்ரார முடிவாம் உச்சித்தாமரை திறந்ததுமூலாதார முதலாம் குண்டலிநாகம் எழுந்ததுநிராதார மேனிலை ஆறாதாரம் புகுந்ததுபராபர அருணிலை மெய்வழிப் பாய்ந்ததுஜெயராம இராஜ்ஜியம் பூமியில் மலர்ந்ததுபாரபட்சம் பாராப் பேரன்பே ஆண்டது
மன்றத்தில் விழித்தது பொன்றாத நெருப்பூகுன்றின்மேல் வைத்தது போன்றதாம் சுடர்ப்பூகண்டத்துள் விழுந்தது தெள்ளமுதக் களிப்பூபண்டத்துள் எழுந்தது மெய்யென்னுஞ் சிலிர்ப்பூமாயத்திரை கிழிந்தது நெஞ்சின்மேல் ஒளிப்பூபேயாட்ட மனமடங்கி இருதயத்தில் இருப்பூ
இருதயவாய் திறந்தது நெஞ்சின்கீழ் கதிர்ப்பூதிருக்கமலம் மலர்ந்தது நாபிக்குள் பூரிப்பூபெருந்தயவாய் விழுந்தது அருட்ஜோதி இறைப்பூஅருட்கடவுள் எழுந்தது முதுகடியில் உயிர்ப்பூஅருளாட்சி வென்றது நவயுகத்தின் படைப்பூஒருமைக்குள் வந்தது பல்லுயிர்த்திரட் தொகுப்பூ