Archive for ஆகஸ்ட், 2008

நாயகனின் பேருபதேசம் 8

ஆகஸ்ட் 25, 2008

மேலிருந்துங் கீழிருந்துந்தனக்குள் சுழிவதை விழுங்கிமேலுங் கீழுந்தான் வழியும்இருதய மெய்யின் ஒழுக்கம்உனக்குத்தருவதே உயிரெனும் விழுப்பம்!எனவேஉயிரினும் ஓம்புக ஒழுக்கம்!
மேலிருந்து சுழிவதை மறந்ததால்சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!
கீழிருந்து சுழிவதை மறந்ததால்தாமச முடக்க பயமானாய்!
மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!
மேலிருந்து சுழிவதை அறிந்தால்பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!
கீழிருந்து சுழிவதை அறிந்தால்இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!
மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!
இருதய மெய்யை மறைத்துஉன்னை மயக்கும்சத்துவச் சுத்த மாயைமற்றும்தாமச இராஜச அசுத்த மாயைஇவற்றால்பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்பெருவாழவாம் உயிர்ப்பைமறந்தாய்!
உன்னை மயக்கும்திரிகுண மாயை களைந்துஇருதய மெய்யை உணர்ந்துப்பிறப்பிறப்புச் சுழல் [...]

நாயகனின் பேருபதேசம் 7

ஆகஸ்ட் 24, 2008

பரமும் இகமும்சஹஸ்ராரமும் மூலாதாரமும்ஆக்கினையும் சுவாதிட்டானமும்விசுத்தியும் மணிபூரகமும்அமுதகலசமும் சூரிய சக்கரமும்வளைந்து சுழிந்து விழும்உன் இருதயக் குழியுள்நடராஜ வள்ளல்நான் ஆடுகிறேன்!
நடு நாயக அன்பாய்உன் இருதயக் குழியுள்நான் ஆடுவதாலேயேமேலேபரமாய்சஹஸ்ராரமாய்ஆக்கினையாய்விசுத்தியாய்அமுதகலசமாய்கீழேசூரிய சக்கரமாய்மணிபூரகமாய்சுவாதிட்டானமாய்மூலாதாரமாய்இகமாய்நீ மேலும் கீழும்வளைந்து வழிகிறாய்!
உன் இருதயக் குழியுள்மையங் கொண்டிருக்கும்எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களைஉன் மெய்க்குள் பார்த்துஎழும் எழுமையாம்(எழும் ‘ஐ’யாம், I AM) அருட்குரு மெய்வழியால்என்னை எட்டு!
நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றிஎன்னை எப்படி எட்டுவாய்!11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்தூய ஊடகமாய் நீ இருக்கஎட்டு வடிவில் இருதயக் குழியுள்வளைந்து வழிந்தும் சுழிந்தும்உன்னில் [...]

மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை

ஆகஸ்ட் 24, 2008

நிராதார மேனிலை(மேல் நில் ‘ஐ‘)ஆறாதாரம் மேவிடமந்திர உறுதியாம்சற்குரு சரணம்
சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்
முதல் 8
வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே [...]

மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்

ஆகஸ்ட் 24, 2008

மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்

மெய்வழியில் ஏழு வழிகளால் எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்டங்கள்

ஆகஸ்ட் 24, 2008

மெய்வழியில் ஏழு வழிகளால்(Open Channels-11’s) எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்ட்ங்கள்(Figure 8 Flows)
முதல் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே அமுதகலசத்தில் ஆன்மநேய ஒருமையாக விளங்கி(அருட்குரு மந்திரம் 4) கீழே சூரிய சக்கரத்தில் பேரறிவாக(அருட்குரு மந்திரம் 6) இயங்குகிறது
இரண்டாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே விசுத்தியில் பெருவாழ்வாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 3) கீழே மணிபூரகத்தில் அருட்பேராற்றலாய்(அருட்குரு மந்திரம் 7) இயங்குகிறது
மூன்றாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே ஆக்கினையில் சுயம்பிரகாசமய் [...]

மெய்வழித் திறப்பு

ஆகஸ்ட் 24, 2008

சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கி மெய்வழி திறக்க திருஅருட்பிரகாச வள்ளலார் வழங்கும் பத்தும் ஒரு மூன்றாம் அருட்குரு மந்திரம்
1. உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
2. நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்
என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
3. தொண்டையில் [...]

உனதுண்மை

ஆகஸ்ட் 11, 2008

இருதய அன்பு தலைக்கேறிமன அறிவை விளக்கஅருளமுதம் பாயும் மெய்யெங்கும்!அன்பறிவாற்றலாய்நீ உயிர்த்தெழுந்துதயவாய் இகத்தில் இருந்துபூமியைச் சொர்க்கமாக்குவாய்!

செதுக்கல்-2

ஆகஸ்ட் 11, 2008

இ(ரு)தய” உளியாலே மன “சுத்தி” கொண்டு கல் உன்னை சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா கடவுட் சிற்பி! அவர்தம் சச்சிதானந்த வடிவிலே உயிர்ப்புள்ள மூர்த்தியாகப் புவிமிசை நடமாடும் அரிய மனிதமப்பா நீ!

செதுக்கல்-1

ஆகஸ்ட் 11, 2008

கல் உன்னை அன்புக் கடவுளாய்ச் செதுக்கும் இருதய உளி! மன ‘சுத்தி’யுள்ள நீயே சிற்பி!

அருட்புரட்சி

ஆகஸ்ட் 11, 2008

வன்பெனும் குப்பை மேட்டில் தேங்கிய மனிதத்தைப் புரட்டி அன்பெனும் குணக் குன்றில் ஓங்கச் செய்யும் அருட் காற்று