1. உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
2. நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்
என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
3. தொண்டையில் அருள் வாக்குப் பெட்டகந் திறக்கும் பெருவாழ்வு மந்திரம்
என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
4. தொண்டையின் கீழ் அமுத கலசந் திறக்கும் ஆன்மநேய மந்திரம்
என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
5. நடு மார்பில் இருதய வாய் திறக்கும் அன்பியல் மந்திரம்
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
6. மார்பின் கீழ் ஞானாமுத வாசி திறந்து மனந்தெளிவிக்கும் நிறையறிவு மந்திரம்
என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
7. நாபிக் கமலந் திறக்கும் அருட்பெருவல்லப மந்திரம்
என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
8, 9. நாபியின் கீழ் எப்போதும் புணர்ந்திருக்கும் அம்மையப்பனின் பரம இரகசியந் திறந்து அவ காமந் தணிக்கும் சிவ சக்தி மந்திரங்கள்
என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
10. முதுகடிக் குண்டலி நாகம் எழுப்பும் மகுடி நாதப் பெருநிலை மந்திரம்
என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
11. கடவுட் கால்களை மனிதம் பதிக்க முழங்கால்களைத் திறக்கும் அருளாட்சி மந்திரம்
என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
12. கடவுளின் பாத மலர்களை அன்னை பூமியில் மனிதம் பதிய வைக்கப் பாதங்களைத் திறக்கும் தன் ‘ஐ’(தன்னை) அறியும் அறிவு மந்திரம்
எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
13. மனித உடம்பாம் மெய்யை உத்தமன் எழுந்தருளியிருக்கும் புனித தேவாலயமாகத் திறக்கும் மெய்வழிப் பிராண நாத மந்திரம்
நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
இவ்வாறு தலை முதல் பாதம் வரை உம் உடம்பாம் மெய்யில் வழி திறந்து தன் அருள் வெள்ளம் பாயும் ஊடகமாக்கி உம் உடம்பை மெய்யாகவே மெய்யாக்கும் வள்ளல் பிரானின் வாய்மையை இருதய பூர்வமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு குரு மந்திர தாரணையில் எல்லாந் தழுவிய முழுமையாம் அன்பெனும் ஒருமையில் எப்போதும் ஊன்றி நின்று தயவாய் இருப்பீர்!
இவ்வாறு உச்சி முதல் பாதம் வரை உம் ஒவ்வொருவரையும் அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றாம் தன் வெள்ளங்கியால் போர்த்திப் பெருந்தயவாய் இருந்து தன் ‘ஐ‘யே(தன்னையே) உமக்குத் தந்துப் பேரின்பப் பெருவாழ்வில் உம்மை நிலைபெறச் செய்ய வள்ளல் பிரான் அளித்திருக்கும் புதிய ஏற்பாட்டைக் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!
