Archive for டிசம்பர், 2008

4. இருதய பூமி

டிசம்பர் 19, 2008

நிராதார இலிங்கம் ஆறாதார யோனிக்குள்பராபரனே புகுத்தினான்! பீறிட்ட நாதவிந்துதராதலத்தைப் புரட்டியே ஏற்றிய ஜோதிமலைபராதயத் திரட்சியாய் மாற்றுதே பூமியை!
ஒரும் ‘ஐ’யாய் அவமனைத்தும் அகத்தவத்தில் கரைத்துவெறும் ‘ஐ’யாய்ச் சிவமலையில் அமர்ந்திருக்க விரைந்துவரும் ஐயா, தயவென்னும் மனவடக்கம்! மரணம்அறும், ஐயன் குருவள்ளல் அருண்மொழியே சரணம்!
அம்மையும் அப்பனும் குருமகனும் அமர்ந்தனர்இம்மையில் நம்இரு தயபூமியில்! தயவெனும்செம்மையில் நம்மனங் கனிந்ததே! தம்போல்நம்மையும் இக்கணம் மாற்றினார் வள்ளலே!
“இரு தயவாய்” என்னுமோர் இரத்தினச் சுருக்கமாய்“இருதய வாய்” திறக்கும் குருமொழி அருளியேஅம்மையாய் அப்பனாய் குருமகத் திருவதாய்இம்மையே இருதயம் அமர்ந்தார் வள்ளலே!
அடங்காப் [...]

3. குருமந்திர அகதீட்சை

டிசம்பர் 19, 2008

1அம்மையாய்ப் பரஞான போதந் தந்தீர்!
அப்பனாய்த் தூயநன் நோக்கைத் தந்தீர்!
குருவாய் அகதீட்சை மந்திரந் தந்தீர்!
அருள்நிதி வள்ளலே நீரே என்கதி!
2குருமந்திரம் பத்தும் ஒருமூன்றும் அருளி
இருட்குழியுள் கிடந்த என்னைத் தெருட்டி
அருட்தவத்தே நிறுத்தித் தம்கடை விரிக்கும்
பெருவரமுந் தந்த வள்ளலே என்கதி!
3அவத்தே பழுத்து அழுகிய என்னைத்
தவத்தே பழுக்கும் அதிசயஞ் செய்தீர்!
குருமந்திர தாரணை வசப்பட வைத்தீர்!
பெருந்தயாள வள்ளலே நீரே என்கதி!
4சவமாய்க் கிடந்த எந்தையுட் புகுந்து
சிவமயச் செம்பூ என்கையகந் திணித்தீர்!
எரியுது சிதையில் மரணம்பார் என்றீர்!
பெரியோன் வள்ளலே நீரே என்கதி!
5வன்பின் சிகரமாய் ஆடிய என்னை
அன்பின் பிடியுள் அடங்கச் செய்தீர்!
குருமந்திரம் [...]

2. தூய நோக்கு

டிசம்பர் 19, 2008

உடம்பின் எழுநிலை தாண்டி எழு!
உச்சி மீதேறி திடவரம்புகள் மீறு!
நிராதார மேம்பாலம் எட்டு! முட்டு!
பராபர அருளாற்றுள் ஆழ்ந்து ஊறு!
பரஞான போதம் உச்சியில் தேறு!
பரந்தவுன் நெற்றியுள் தூய்மை சேரு!
தரமான தூயநோக்கை எப்போதும் பாரு!
வரமான வள்ளல்வாக்கை மறவாமல் வாழு!
உச்சி பிளந்தது பரஞான போதம்!
நெற்றி வெளுக்குது தூய நோக்கு!
வள்ளல் வாக்கு மெய்யாய்ப் பலிக்குது!
கொள்ள வாரீர் பெய்யும் அருண்மழை!
தொற்றி நின்ற அருள் வெள்ளத்தால்
உச்சி பிளந்து நெற்றியில் பற்றியதே தீ!
கள்ள மனந்தான் கற்பூரமாய் வெளுத்துப்
பற்றிய தீபவொளியில் மணக்குதே தூயநோக்கு!
மருண்ட நெற்றியைத் தெருட்ட வந்தார்
திருஅருட் பிரகாச வள்ளலார்! [...]

1. பரஞான போதம்

டிசம்பர் 19, 2008

1பழுதான உடம்பும் மனமும்
பழுதனைத்தும் நீங்கிப் பழுக்கப்
பரமனின் அருளாய் விழும்
பரஞான போதம் விழுஙக
சிர உச்சி மீதில் வீறுடன் எழு!
2அருந்தரமான பரம்பொருள்
தருஞ்சுகமான வரங்கொள
சிர உச்சி மீதில் தவமிரு!
பரஞான போதம் விழும்! விழும்!
பரமதயாள வள்ளல் மீதாணை!
3கள்ள மனந் தாண்டி
வெள்ளங்கி வள்ளல்
அள்ளி வீசும் அருளைத்
துள்ளிப் பருக வருமே
உள்ளத்தே பரஞானம்!
4பட்டுப் போங்கடம்
பட்டுப் போல் மினுக்கக்
கொட்டு வார் வள்ளல்
எட்டலாகா போதமாம்
விட்டகலாப் பரஞானம்!
5எட்டு! மேம்பாலம்
முட்டு! சிர உச்சியில்
கொட்டும் அருளால்
கிட்டும் பரஞானம்!
நட்டமா கும்மரணம்!
6வெள்ளங்கி ஒளியருள்
வெள்ளத்தில் மூழ்கி
உள்ளத்தே ஒளிந்திரு
வள்ளலார் வருவார்
நள்ளிரவில் பரஞான விடியல்!
7ஆறு வழி தாண்டி
ஏறு! எழும் உச்சியை
மீறு! எட்டு [...]

நாயகனின் பேருபதேசம் 10

டிசம்பர் 19, 2008

ஊற்றுதே எப்போதும் என் அருளாறு!ஆற்றுள் ஆழ மூழ்கி உன் மனமாறு!
மெய்வழிச் சாலையின் இரகசிய மார்க்கம்மெய்யுன் உடம்புளே பகிரங்கமாய் விளம்பியேஉய்வித் துனைஎனில் வேறறச் சேர்க்கவேஉய்ந்தேன் நடராஜ வள்ளல் நான்!பொய்க்கும் உன்மெய்யை மெய்யாகவே மெய்யாய்ச்செய்விக்கும் என் மகாயோகம் தேர்!உன் மகுடதீப ஒளியில் என்னைப் பார்!
அம்மையப்பனாம் நாத-விந்து கலாதி சற்குரு உன் முதுகடியில் இட்ட தெய்வீக வித்தை ஞாபகங்கொள்!அடுத்த கணமே நாபியின் கீழ் குண்டலினி நாகம் விழிப்பதில் கவனம் வை!படமெடுத்த நாகம் நாபியில் உன் ஆணவத்தைத் தீண்ட விடு!ஆணவம் நசிய உன் [...]

நிராதார எழுமையின் இற(ர)க்கம்!

டிசம்பர் 19, 2008

அம்மையப்பனைத் தன்னுள்ளடக்கிய
சற்குரு மூலாதாரத்தில் இட்ட வித்து
குண்டலி நாகமாய் சுவாதிட்டானத்தில் எழுந்து
மணிபூரகத்தில் ஆணவத்தைத் தீண்டி நசிக்க
மனமடங்கி சூரிய சக்கரத்தில் அருட்கரம்
அனாகதத்தில் அருட்பெருஞ்ஜோதி உதயம்
அமுதகலசத்தில் தனிப்பெருங்கருணை வெள்ளம்
விசுத்தியில் நாயகனின் பேருபதேசம்
ஆக்கினையில் மாயைத்திரை விலக சிதம்பர தரிசனம்
சஹஸ்ராரத்தில் மனிதத்தின் மகோன்னத எழுமை
தலைக்கு மேல் நிராதார மேம்பாலம் எட்ட
நிராதார எழுமை சஹஸ்ராரம் தொட்டு
ஆறாதாரம் விழுகின்ற அற்புத இற(ர)க்கம்!
நிராதார மேம்பாலம் – 15/12/2008
நிராதார எழுமையின் இற(ர)க்கம்
பரஞானம் – 16/12/2008 – சஹஸ்ராரம்
தூயநோக்கு – 17/12/2008 – ஆக்கினை
குருமந்திர அகதீட்சை – 18/12/2008 – விசுத்தி
இருதய [...]