சுருண்ட நாகம் விழிக்கும்! ஜீவ
விருட்சம் மேலே தான்வளைந் தேறும்!
திருமெய்க் கடமுந் தான்சிலிர்த் தெழவே
குருமெய் உயிர்த்துச் சக்கரஞ் சுழலும்!
Archive for ஜனவரி, 2009
12. குண்டலி நாகம்
ஜனவரி 27, 200911. குரு வித்து
ஜனவரி 27, 2009ஒருவித்தில் விருட்சமே அடங்கும்!
குருவித்தில் குவலயமே அடங்கும்!
குவிந்ததில் உள்ளாழ்ந்து ஒடுங்கி
அவியாமல் உள்ளவரை அறிவாயே!
10. சற்குரு
ஜனவரி 27, 2009பருப்பொருளில் குருப்பொருள் தான்விழிக்கும்!
அருட்பொருளாம் அம்மையும் ஆதிசிவப்
பெரும்பொருளாம் தந்தையும் தன்னகத்தே
ஒருபொருளாய் ஒன்றியுள மெய்யுணரும்!
9. அருட்தந்தை
ஜனவரி 27, 2009எந்தையின் மூச்சு தாய்க்குள் ஆடுது!
சிந்தையில் சேருது ஞானத் தேனது!
கந்தையாம் தேகமும் பானத் தூறுது!
விந்தையாம் ஜோதியாய் ஊனது மாறுது!
8. அருட்தாய்
ஜனவரி 27, 2009அன்னை பூமியாய் அருட்தாயின் இறக்கம்
எந்தை சாமியின் பெருங்கருணை இரக்கம்!
சிந்தைக் கெட்டும் அன்னையின் அருளமுதம்
மண்ணில் கொட்டும் பாலாற்றின் பிரவாகம்!
7. ஜோதி ஸ்வரூபம்
ஜனவரி 27, 2009இகம் நில் ஏழும்
பரம் நில் ஏழும்
இரண்டற ஒன்றும்
ஒளியுருத் தோற்றம்!
இரகசிய மெய்வழி
பகிரங்கமாக்கி
அதிசயஞ் செய்தார்
அருட்குரு வள்ளல்!
6. அதிசயப் பரிமாற்றம்
ஜனவரி 27, 2009அவப்புழுவாய் நெளிந்தவனை
தவக்கூட்டில் தயவுடன் இருத்தித்
தன்சூட்டால் என்னை
சத்திசிவ குருப்பொருளாய்
அதிசயமாய்ப் பரிமாற்றி
மெய்க் கூட்டை உடைக்கும்
சாக்காட்டைப் போக்கி
சாவாக் கலை நெறி உணர்த்தும்
மெய்ஞ்ஞானம் போதிக்க
மேதினியில் வைத்தாய்
வள்ளலே!
நின் திருவடிகள் சரணம்!
5. சத்திய தரிசனம்
ஜனவரி 27, 2009அன்பே இருப்பாய்ச் சிவமாய் இருந்தீர்!
அன்பின் இயக்கமாம் சத்தியாய் எழுந்தீர்!
அன்பின் விளக்கமாம் சத்திசிவ ஐக்கியமாய்
இன்பே இயல்பாய் குருநடுவாய் நின்றீர்!
சிந்தையைத் தெருட்டும் மூவர்உம் ஒருமையால்
உந்தியில் காண்கிறேன் என்சத்திய தரிசனம்!
4. இருதய பூமி
ஜனவரி 27, 2009இரும்பு மனத்தான் என்னை இளக்கித்தன்
இருதய பூமியில் தயவாய் இருத்தித்தன்
எல்லா நலமுந் தந்தெனை உயர்த்திச்சா
வில்லா நிலையில் வைத்தார் குருவள்ளல்
3. குருமந்திர அகதீட்சை
ஜனவரி 27, 2009பொய்ம்மொழி மோகம்போய் மெய்ம்மொழி தாகங்கொள
மெய்க்குரு தொண்டைக்குழி உய்ந்தார்! யோகத்தேறும்
மந்திர அகதீட்சை தந்தார்! வேகங்கூட
யந்திர எம்முடம்பும் பொன்மெய் யாய்மாறுதே!
சிரமாய் நம்தோள்மேல் பொருந்தும் குருபரன்
வரமாய்த் தொண்டையில் முழங்கும் மந்திரம்!
தரத்தில் செம்மையுறும் உடம்புமெய் யாககுரு
தருமக தீட்சையால் மரணத்தை யாம்வென்றோம்!
ஓமென முழங்கியே நபிகள் நாயகம் அல்லாவின் அருவ நிலை உணர்த்தினார்!
அஹமென முழங்கியே புனித ‘ரு’வென்னும் அருளம்மைத் திரு உருவைக் காட்டினார்!
தம்மென முழங்கியே அம்மையப்பன் ஒருமையாம் சற்குரு மெய்ஞ்ஞானம் ஊட்டினார்!
தம் பேரில் மும்மந்திரங்கள் கொண்டார் திருவடிகள் சரணம்!
ஓமென்னும் பரநாத மூல மந்திரம்!
அஹமென்னும் பரவிந்துத் திரு [...]
