மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்
Archive for the 'கட்டுரைகள்' Category
மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்
ஆகஸ்ட் 24, 2008மெய்வழியில் ஏழு வழிகளால் எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்டங்கள்
ஆகஸ்ட் 24, 2008மெய்வழியில் ஏழு வழிகளால்(Open Channels-11’s) எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்ட்ங்கள்(Figure 8 Flows)
முதல் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே அமுதகலசத்தில் ஆன்மநேய ஒருமையாக விளங்கி(அருட்குரு மந்திரம் 4) கீழே சூரிய சக்கரத்தில் பேரறிவாக(அருட்குரு மந்திரம் 6) இயங்குகிறது
இரண்டாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே விசுத்தியில் பெருவாழ்வாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 3) கீழே மணிபூரகத்தில் அருட்பேராற்றலாய்(அருட்குரு மந்திரம் 7) இயங்குகிறது
மூன்றாம் 8
நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே ஆக்கினையில் சுயம்பிரகாசமய் [...]
மெய்வழித் திறப்பு
ஆகஸ்ட் 24, 2008சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கி மெய்வழி திறக்க திருஅருட்பிரகாச வள்ளலார் வழங்கும் பத்தும் ஒரு மூன்றாம் அருட்குரு மந்திரம்
1. உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்
என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
2. நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்
என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
3. தொண்டையில் [...]
வள்ளலின் வாக்குறுதிகள் – சஹஜ குண்டலி யோகம்
ஜூலை 26, 20081. என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம் மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு நமக்குக் கிடைக்கும். 2. என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு) ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
ஆக்கினை சுவாதிட்டான [...]
சஹஜ நிலைக் குண்டலினி யோகம்
ஜூலை 26, 2008மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல் சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல் மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல் சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம [...]
ஹ்ருதய ஷக்திபத்(சப்த ஸ்வரங்கள் சுட்டும் உமதுண்மை)
ஜூலை 26, 2008‘ஸ‘ – மூலாதாரம்‘ரி‘ – சுவாதிஷ்டானம்‘க‘ – மணிபூரகம் இம்மூன்றும் இகத்தில் பரத்தின் அலுவலகம் ‘ம‘ – சூர்ய சக்ரம்(Solar Plexus), அனாகதம், அமிர்த கலசம்(Thymus Center) – அருட்தாய்‘ப‘ – விசுத்தி – அருட்தந்தை‘த‘ – ஆக்ஞா சக்ரம், சஹஸ்ராரம் – அருட்குரு இம்மூன்றும் இகத்தில் பரத்தின் இல்லம் ‘நி‘ – நிராதாரம் ஆறாதாரத்துள் நிற்றல்(சிலுவையின் செங்குத்தான பாகம்-மனிதன் கடவுளின் தூய ஊடகமாதல்)‘ஸ‘ – நிராதார மேனிலை(பரம்) இகம் முழுவதும் பரவுதல்(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-மனித ஊடகத்தினூடே கடவுளின் அருள் வெள்ளம் இகத்தில் [...]
எழுத்தின் பயன் என்ன?
ஜூலை 10, 2008Quote:
Originally Posted by தாமரை
8. நாகரா
சிக்கலானச் சிந்தனைகளை சின்ன வார்த்தைகளில் அடைத்துச் சொற்களில் பூக்க வைக்கும் வித்தகரே,
எழுத்தின் பயன் என்ன?
தமிழ் மன்றத்தில் எப்போதும் வாடாது பூத்திருக்கும் தாமரையாரே! சொல்லின் செல்வரே! உம் கேள்விக்கு நன்றி. என்னால் இயன்ற வரை விடையிறுக்க முயல்கிறேன்.
“ஆதியில் எல்லாம் வார்த்தையாகவே இருந்தது” என்ற புனித யோவான் வேதாகம வாக்கும், “அகர முதல எழுத்து” என்று தொடங்கும் உலகப் பொது மறை திருக்குறளும் தான் என் நினைவில் எழுகிறது உம் [...]
எழுத்தின் பயன்
ஜூலை 10, 2008உண்மை = உள் மெய் = உள்ள மெய்ம்மை = உள்ளிருக்கும் மெய்ம்மை = உள்ளுடம்பாம் சுத்த தேகம்(இது உம் பிறப்புரிமை, மரணமிலாப் பெருவாழ்வை நிரூபிக்கும் மகிமை)பொறுமை = பொறு மெய் = பொறையுணர்வுள்ள(பொய்யையும் பொறுக்கும் பெருந்தயவுள்ள) மெய்ம்மைநேர்மை = நேரான மெய் = உயர்நெறியான மெய்ம்மைஎளிமை = எளி மெய் = கடைப்பிடிக்க எளிய(எப்போதும் அலட்டிக் கொள்ளாத) மெய்ம்மைமேன்மை = மேல் மெய் = மேலான மெய்ம்மை(மேல் கீழ் என்று பாரபட்சம் பாராத)மெய்ம்மை = மெய் [...]
அன்பின் வழியது உயிர்
ஜூலை 10, 2008அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு
1. அன்பின் வழியது உயிர்
உயிர் என்று சொல்லப் படுவது அன்பு என்று சொல்லப்படும் அருளொளி(அருட்பெருஞ்ஜோதி-Spiritual Light) தங்கு தடையின்றி ஓடும் வழி
2. நில் ‘ஐ’ அஃது.
அன்பென்று சொல்லப்படும் அருளொளியே, நித்தியப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும் ‘ஐ’ யாம்(I AM) தனித் தலைமைப் பெரும்பொருள்(தனிப்பெருங்கருணை-Supreme Grace or Compassion)
3. இல் ஆர்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
என்புதோல் போர்த்திக் கட்டப்பட்டிருக்கும் மெய்யுடம்பாகிய திடமான இல்லம் யார்க்கு?அன்பென்று சொல்லப்படும் அருளொளியாம் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணைக்கு அன்றி [...]
நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்
ஏப்ரல் 12, 2008நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் அன்பர்களே!
நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு அடையும், இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவமாக சமாதி நிலை இல்லை.
நீங்கள் இதற்கு மாறாக எண்ணுகிறீர்களென்றால், அம்மாறான எண்ணத்தின் காரணமாகவே, சமாதி நிலையை அடைய நீங்கள் மிகவும் சிரம்ப்படுகிறீர்கள்.
அவ்வாறு மாறாக ஏன் நீங்கள் எண்ணுகிறிர்கள்?
சில கணங்கள் ஆராய்ந்து பாருங்கள். அம்மாறான எண்ணத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்பதையும், அம்மாறான எண்ணத்தை நீங்கள் ஆராயாமல் ஏற்று அதையே உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் [...]
