முகங்கள் அனைத்தும் கழன்றன
அகமொன்றே முகமாய்
வெறும் “நான்“
முகங்கள் அனைத்தும் கழன்றன
அகமொன்றே முகமாய்
வெறும் “நான்“
Archive for the 'கட்டுரைகள்' Category
அகமுகம்
April 4, 2008மரணமிலாப் பெருவாழ்வு
April 3, 2008உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டமே, இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
கடவுள் என்று சொல்லப்படுகின்ற அருவமான ஒரே மெய்ப்பொருளிலிருந்தே பல்வேறு உருவத் தொகுதிகளான அனைத்தும் உருவாகின்றன. இந்த அருவ மெய்ப்பொருளானது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன்னுள் அனுமதிக்கும் சுத்த வெளியே அருட்தந்தை. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அருளொளியால் அரவணைக்கும் ஜோதி வெளியே அருட்தாய். எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அறிவொளியால் ஒளிர்விக்கும் [...]
கடவுளோடு ஒரு மனிதனின் நேரடித் தொடர்பு
April 2, 2008கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் வெவ்வேறு என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டமே, உனது எல்லா நோய்களுக்கும், எல்லாத் தளைகளுக்கும் வேராயிருக்கிறது. இத்தவறான கண்ணோட்டத்தை வேரோடு பிடுங்கி, கடவுளாம் நானும் மனிதனாம் நீயும் பிரிக்கவே முடியாது ஒன்றியிருக்கும் மெய்ம்மையை உணர்த்தவே, நான் உன்னோடு நேரடியாகத் தொடர்பு கொள்கிறேன். இதோ. இங்கேயே..இப்போதே…
மனிதன்: கடவுளே! நீ எங்கிருந்தாலும், நான் இப்போதே உன்னோடு பேச விரும்புகிறேன்.
கடவுள்: மனிதா! இதோ இங்கேயே இப்போதே நான் உன்னோடு பேசத் தொடங்கி விட்டேன்.
ம: கடவுளே உனது பெயர் [...]
‘க’ சொல்லும் மெய்ஞ்ஞானம்
April 2, 2008நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன்.
குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரம், மேற்காட்டப்பட்டுள்ள “க” என்ற உயிர்மெய்யெழுத்தின் சமன்பாட்டில் உள்ளடங்கியிருக்கிறது. மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.
க நானே (உயிர்மெய் ஒருமை, திரித்துவ ஒருமை)
க் மெய், சத்தியம் (பரமபிதா, பரப்பிரம்மண், அல்லா)
+ வழி, உயிராம் ஜீவனும், மெய்யாம் சத்தியமும் ஒன்றும் வழி (கிறிஸ்து, சத்குரு, ரசூல் அல்லது நபிகள்)
அ உயிர், ஜீவன் (பரிசுத்த ஆவி, ஆதிசக்தி, புனித ரூ)
= இருக்கிறேன்
உயிராய் மெய்யாய் அவையொன்றும் வழியாய்
உயிர்மெய் என்றுளேன் நானே
ஒண்ணாயிருக்கக் [...]
