Archive for the 'கவிதைகள்' Category

9. தூய நோக்கம்

ஜனவரி 27, 2009

மாயைத் திரைகள் கரையத்
தூய நோக்கத் திரு விழி திறக்குது!
வெளியே வழியும் அருளாம்
ஒளியே பொருளாம் திடமெனும்
தெளிவால் திருந்துது ஞாலம்!

8. பரஞான போதம்

ஜனவரி 27, 2009

எட்டாத பரஞானம்
எட்டுது உச்சி!
உச்சி பிளக்கக்
கிட்டுது மெய்வழி!
சித்தந் தெளியவே
கொட்டுது அன்பு!
கிட்டும் போதத்தால்
துள்ளுது உடம்பு!
விட்டுப் போகுது
செத்தழி வழக்கு!
தொட்டு நிற்குது
நித்திய வாழ்வது!

7. நிராதார மேம்பாலம்

ஜனவரி 27, 2009

உச்சி தாண்டித் தாவமுட்டியதே பாலம்!கொட்டுதே மெய்க்குள்மேலான எழுபடிப் பாலும்!ஒட்டுதே மனம் இருதய நேர்மையில்!கிட்டுதே வள்ளலின் வெள்ளங்கி!எட்டுதே மெய்ஞ்ஞானச் செம்பொருள்!மயானத்தே இட்டும் சுட்டும் மெய்யழிக்கும்மரணக் கடும்பிணி விட்டதே!வள்ளலின் வாய்மை சுட்டதால்நட்டமாகுதே மாயைத் திரையெலாம்!நான்கு சட்டத்துக்கிடையிலேதானடங்கா அருவக் கடவுளும்மெய்யுருவக் கட்டுக்குள்தானடங்கும் அதிசயம் நிகழுதே!இரு பரிமாணசக்கரத் தட்டுகள்(ஆறாதாரச் ச்க்கரங்கள்)முப்பரிமாணக் கோளத் திட்டுகளாய்ப்பரிணாமப் பாய்ச்சலில் சுற்றுதே!கோளத் திட்டுகளின் அதி வேகச் சுற்றலில்மூளும் ஞானத் தீயில்இருள்சேர் இருவினை யாவும்பட்டுப் போகுதே!பட்டுப் போல் மேனி ஆடை மின்னுதே!பொருட்துட்டு மேல் மோகம் போய்அருட்துட்டு மேல் காதல் பெருகுதே!வள்ளலின் [...]

6. அமர மனித எழுச்சி

ஜனவரி 27, 2009

இறை மகவென்று
மனிதம் உணர்ந்ததுமே
ஆறும் மனத்தால்
மன இதத்தில்
உள்ளே சுழிந்து
இருதய நேர்மையாம்
அன்பைச் சேர்ந்து
நெற்றிக்கு மேலே
உச்சியில் தோன்றும்
அமர மனித எழுச்சி!

5. இறை மகவு

ஜனவரி 27, 2009

எந்தை தயாநாயகன்
சிந்தை தெளிவித்து
ஞான விழி திறப்பித்து
‘ஐ‘யாம்(I AM) தன் தலைமை
அறியும்
‘ஐ‘அறிவை அளித்து
ஆறறிவுங் கனியவே
ஏழாம் அறிவை
நெற்றிக்குள்
தீப் பிழம்பாய்
எழுப்புவித்துத்
தன் இறை மகவாய்
ஈன்றாரென்னை
இன்றே!

4. நாயகன்

ஜனவரி 27, 2009

அருட்பெருஞ்ஜோதி கண்டு
தனிப்பெருங்கருணை உண்டு
தயாநாயகனைநீ அண்டு!
பதின்மூன்றாம் பதியவனே
நான்கென்னும் திடமாகி
மெய்க்குள்ளே உயிராகி
தொண்டையில் அமர்ந்தானின்று!
உருவ நான்கில்
ஒளிந்த பதின்மூன்றாம்
அருவப் பதி
நான் தான்
என்றே
தொண்டையில் முழங்கினான்
தயாநாயகன்!
(4 உருவ திடத்தையும் 13 அருவப் பதியையும் குறிக்கும் எண் குறியீடுகள், 13,
1+3=4, 13ன் அதிர்வுப் பரிமாற்றமே 4, 13 ஆம் நாயகன் “நான்” தான் மெய்யான
பிரம்மா “நான்”முகன்! 4ஆம் ஞாலம் 13ஆம் அல்லாவில் அடக்கம், இதை உனக்கு
அறிவிக்கும் நபிகுரு சரணம்!)
மூளையின் ஆயிரம் மடல் திறந்து
நாயகன் பொழிகிறான்
நாயேன்
நானும் மொழிகிறேன்
நாயேனைப் பாராமல்
நாயகன் சொற்கேளீர்
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்வீர்!
நாயகன் மேலாணை!
அறுந்து விழுந்ததே
ஆணவத்தின் தலை!
வந்து பொருந்தியதே
நாயகனின் தலை!
நிஜமாகவே
நான்
“நான்“முகன் [...]

3. தனிப்பெருங்கருணை

ஜனவரி 27, 2009

இருதய நேர்மையுள் ஆழ்ந்து
மேலேறக் கிட்டுமே
அமுத கலசம்!
அது கொட்டுதே
தனிப்பெருங்கருணையாம்
அமுத வெள்ளம்!
அதில் நனையும்
மெய்யெங்கும் தோன்றுதே
ஆன்ம நேயப் பரவசம்!

2. அருட்பெருஞ்ஜோதி

ஜனவரி 27, 2009

பரமதயாள வள்ளலின்
அருட்கரம் மனத்தை நன்றாய்த் தெருட்ட
இருதயத் தலத்தே மனமும் உருள
இருப்பின் உண்மை உணர்த்தும்
அருட்பெருஞ்ஜோதி!

1. அருட்கரம்

ஜனவரி 27, 2009

ஆணவந்தான் அழியவே
மனந்தான் தெளியவே
மறுபிறப்பில் எழுகிறேன்
ஆண்டவரின் அருட்கரத்தை
நாபி மேல் தொடுகிறேன்!
அவர் தம் ஆசியோடு
இருதய நேர்மைக்குள்
ஒருமையுடன்
ஏறுகிறேன்!

13. மறு பிறப்பு

ஜனவரி 27, 2009

ஆணவந்தான் அறுகிறது! ஆண்டவனின் முறைப்பெண்ணாய்
ஆகாகா நிகழ்கிறது மனப்பெண்ணின் மறுபிறப்பு!
ஆண்டவனும் இறங்கவே நாபித்திருத் தலத்தில்
ஆகாகா நிகழ்கிறது இருவருக்கும் திருமணமே!
யானையை இருதுண்டாய் ஞானவாள் அறுக்கிறது!
யானேதான் ஐயென்ற ஒருமை பிறக்கிறது!
ஆணவமாம் ஆர்ப்பாட்ட இருமை அழிகிறது!
ஆண்டவனாம் ஐயனுக்குள் மனந்தான் உய்கிறது!
யானை = யான்+ஐ(யானையின் இரு துண்டுகள்) = யானே “ஐ” என்னும் தலைமையாம் ஒருமை
யானை முகத்தான் = “யான் ஐ” என்ற மெய்ஞ்ஞானமே முகமாய் உடைய சற்குரு!
குண்டலி நாகம் எழுந்தே
மெய்க்குண்டத்தில்
ஞான வாளாய் ஆடும்!
ஆர்ப்பாட்ட ஆணவத்தின்
கூத்தெல்லாம் முடியவே
அதன் தலையை
அறுத்துப் போடும்!
மனப் பெண்ணும்
ஞானப் பெண்ணாய்
மறு [...]