“சாயி சத் சரிதம்” என்ற சாயி பாபாவின் அருள் வாக்கை தியானித்த பின் அவரது அருள் வாக்கை ஏற்கும் வகையில் இப்பாட்டைப் பாடி மகிழ்வீராக! நன்றி.
1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பூஜ்ஜியமான என்னிலிருந்து பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இருட்கிடங்கான என்னிலிருந்து சுயம்பிரகாசமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் [...]
Archive for the 'சாயி பாபா' Category
சாயி பாபாவின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு
மார்ச் 31, 2008சாயி சத் சரிதம்
மார்ச் 31, 2008ஷிர்டி என்னும் உன் மெய்யான(உடம்பான) திருத்தலத்திற்குள்ளேயே சாயி பாபாவெனும் நான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறேன், ஒளிந்திருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான் என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் சத்குரு தீட்சையே “சாயி சத் சரிதம்” என்ற இப்பேருபதேசம்.
துவைத பக்தியின் விளைவாக நீ படைத்திருக்கும் பொய்யுலகிலிருந்து உன்னை மீட்டு உன் சுய ரூபத்தை உனக்கு உணர்த்தி “நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி” என்ற அத்வைத ஞானம் நீ பெறவே என்னையே உனக்குத் தந்து [...]
