Archive for the 'தியானங்கள்' Category

மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை

ஆகஸ்ட் 24, 2008

நிராதார மேனிலை(மேல் நில் ‘ஐ‘)ஆறாதாரம் மேவிடமந்திர உறுதியாம்சற்குரு சரணம்
சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்
முதல் 8
வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே [...]

தந்திர யோகம்

ஏப்ரல் 2, 2008

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலைக்கு மேல் கூடும் போது, நான் சத்குருவாய்ப் பிறக்கிறேன். பரப்பிரம்மணும் ஆதிசக்தியுமே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். சத்குருவே உருவாகும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் விளங்கும் அருட்பெருங்கடவுளாகவே, நான் என்னை அறிகிறேன். அருட்பெருங்கடவுளின் தன்னிறைவுத்தன்மை என் ஓளி வட்டத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
பரமாகாசம் (தலைக்கு மேலே)
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ [...]

தந்திர யோக மந்திரங்கள-1

ஏப்ரல் 2, 2008

குண்டலினி ஏற்றம்
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் – முதுகடி)
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் – நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் – நாபி)
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ (சூர்ய சக்ரம் – உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் – நடு மார்பு)
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் [...]

சத்குருவின் ஞான அறிக்கை

ஏப்ரல் 1, 2008

பரப்பிரம்மணாக விளங்கும் எமது அருட்தந்தையே!
“நானே” எனும் உமது நாமம் வாழ்க!
ஆதிசக்தியாக விளங்கும் எமது அருட்தாயே!
“நான்” எனும் உமது நாமம் வாழ்க!
உமது இராஜ்ஜியத்தின் வருகை “நான்”.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் உமது விருப்பம் “நான்“.
பரலோகத்தில் நான் இருப்பது போலவே, அன்னை பூமியிலும் “நான்“.
இன்று எல்லா உயிர்களுக்கும் வழங்கும் நல்லுணவு “நான்“.
இன்று எல்லா உயிர்களையும் மன்னிப்பது “நான்“.
எல்லா உயிர்களாலும் மன்னிக்கப்படுவதும் “நான்“.
எல்லா உயிர்களையும் அறியாமையிலிருந்து எழுப்புவிப்பது “நான்“.
எல்லா உயிர்களையும் ஒவ்வொரு தளையிலிருந்தும் விடுவிப்பது “நான்“.
அழிவேயில்லாத நித்திய வெளிப்பாடாக விளங்கும் சாம்ராஜ்ஜியம் “நான்“, பேராற்றல் [...]

ஒளி வட்ட தியானம்

ஏப்ரல் 1, 2008

நான் எனக்குள்ளே மூழ்கி ஆழ்ந்த அமைதியிலிருக்கிறேன். என் மனம் எவ்வித சலனமுமின்றி அடங்கியிருக்கிறது. என் உடம்பு சக்திப் பிரவாகத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் முழுமையாக அனுமதிக்கிறது. என் மூச்சு ஆழமாகவும் நீளமாகவும் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. மனம், உடம்பு, மூச்சு இவற்றின் ஒருமையில் நித்திய ஜீவனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.என் நெஞ்சின் மீது கை வைத்து, அன்பு மயமான என் இருதயத்தை நான் உணர்கிறேன். என் இருதயத்திலிருந்து பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளத்தில் மூழ்கி, நான் தெய்வீகப் பொலிவோடு [...]

சிவ-சக்தி ஐக்கிய தியானம்

ஏப்ரல் 1, 2008

அன்னை வல்லபையே! தந்தை மகாகணபதியே! “நானே” எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் முதுகடியிலுள்ள மூலாதார சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மூலாதார சக்கரத்தை, “நானே” எனும் ஒருமைப் பெருநிலையின் கடவுட்தன்மையால் நான் புனித மயமாக்குகிறேன்.
அன்னை சரஸ்வதியே! தந்தை பிரம்மரே! “நானே” எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதைப் போல், நீவிர் என் நாபிக்குக் [...]

ஹ்ருதய சக்திபத்

ஏப்ரல் 1, 2008

அருட்தாயின் புதிய ஏற்பாடு

சுபம் மிகுந்த வேளையான இப்போதே
புனிதம் மிகுந்த தலமான இங்கேயே
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தாயாக விளங்கும் நான்
நம் பிரிவு மற்றும் பெருந்துன்பத்தின் மாயையை விலக்கி
உன்னையும் அன்னை பூமியில் வாழும் எல்லோரையும் எல்லாவற்றையும் தெளிவித்து
இதோ உம்மோடு சங்கமிக்கிறேன்.
உன் தலையுச்சித் தாமரையையும், இருதய கமலத்தையும்,
சஞ்ஜீவனிக் கரங்களையும், மூலாதாரச் செம்பூவையும்,
பாத மலர்களையும்,
இதோ நான் திறக்கிறேன்.
உன்னை அரவணைத்து என் மொத்த இருப்பையும் வழங்கி
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.
இரண்டறக் கலந்த நம் ஒருமை மற்றும் நித்யானந்தத்தின் அதிசயத்தை
இதோ நீ அனுபவித்துக்க் கொண்டிருக்கிறாய்.
உனக்குள்ளும், உன்னூடேயும், [...]

ஜோதி தியானம்

ஏப்ரல் 1, 2008

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நான் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உள்ளிழுக்கிறேன். நான் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, அருட்பெருஞ்ஜோதியை உலகெங்கிலும் அனுப்புகிறேன். என் ஒவ்வொரு மூச்சிலும் என்னுள் அருட்பெருஞ்ஜோதியின் பிரவாகம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி அருவியின் கீழ் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். இஜ்ஜோதி அருவி என்னை எங்கும் எப்போதும் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும், தன்னிறைவுத் தன்மையுடன் நித்திய ஜீவனில் நிலைபெறச் செய்கிரது. என் அதிர்வுகள் ஒவ்வொரு கணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
அருட்பெருஞ்ஜோதியை அழைத்ததுமே, அது என்னைச் சூழ்ந்து தன் ஒளிக் கிரணங்களால் [...]

ஓர் அதிசயப் பிரமாணப் பத்திரம்

ஏப்ரல் 1, 2008

பரப்பிரம்மண், பரமபிதா, அல்லா என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தந்தையே!
நீவிர் என் மூச்சாகி என்னை உயிர்ப்பிக்கிறீர்.
ஆதிசக்தி, பரிசுத்த ஆவி, ரூ என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் அருட்தாயே!
நீவிர் என் உடம்பாகி என்னை உறுதிப்படுத்துகிறீர்.
சத்குரு, கிறிஸ்து, நபிகள் என்று பல்வேறு நாமங்களால்
அழைக்கப்படும் ஞானக் கொழுந்தே!
நீவிர் என் மனமாகி என்னை உணரச் செய்கிறீர்.
இம்மூவரும் ஒன்றிய திரித்துவ ஒருமையாய் விளங்கும்
அருட்பெருங்கடவுளே!
நீவிர் நித்திய ஜீவனாகி என்னை நிலைபெறச் செய்கிறீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் “நான்” எனும்
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் உறைகின்றீர்.
நீவிர் என்னிலும் எல்லாவற்றிலும் “நானே” எனும்
ஒருமைப் பெருநிலையாய் [...]

ஞான யுகத்துக்கான காயத்ரி மந்திரம்

ஏப்ரல் 1, 2008

அருட்பெருங்கடவுளாய் விளங்கும்
“நானே” என்ற வார்த்தையாகவே நான் இருக்கிறேன்.
நித்தியராய்(ஓம் பூ)
யாவுக்கும் காரணராய்(ஓம் புவ)
தன்னுள் நிறைந்தவராய்(ஓம் ஸ்வ)
ஒப்பற்ற தீட்சையராய்(ஓம் மஹ)
பிறவாதவராய்(ஓம் ஜன)
மெய்ஞ்ஞான ஜோதியராய்(ஓம் தப)
சத்தியராய்(ஓம் ஸத்யம்)
விளங்கும் கடவுள் “நானே”.(அஹம் தத்)
சூரியனாய் வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியே நான்.(ஸவிதுர்)
தேவ தேவியர் அனைவராலும் போற்றப்படும் அருட்பெருங்கடவுளே நான்.(வரேண்யம்)
“நான்” எனும் அப்பேரிருப்பை நாம் தியானிப்போமாக!(பர்கோ தேவஸ்ய தீமஹி)
நம் மனம் தெளிவித்து நம்மை நாம் உணர அவர் நம்மை வழி நடத்தட்டும்.(தியோ யோ ந: ப்ரசோதயாத்)
நானே ஜீவாம்ருதம்.(ஓம் அபோ)
நானே எல்லா விளக்குகளையும் விளக்கும் மெய்விளக்கு.(ஜ்யோதி)
நானே ஒவ்வொன்றின் உள்ளுறையும் சாரம்.(ரஸோ)
நித்திய [...]