பருப்பொருளில் உறங்கும்மெய்க் குருப்பொருள்தான் விழிக்கும்!
அருட்பொருளாந் தன்னம்மை பரம்பொருளாந்தன் தந்தை
இருவரையுந் தன்னகத்துள் பழம்பொருளாய்த்தான் தெளியும்!
இருள்விடிய இப்புவியில் நவயுகத்தை எழுப்பும்!
சிவமே பொருளெனச் சித்தந் தெருட்டி
தவமேன் மலைமேல் என்னை ஏற்றிஎன்
அவஞ்சேர் இருவினை எல்லாங் கரைத்து
நவமாய் ஒளிர்மெய் தந்தார் சற்குரு!
அக்குருவும் இக்குருவும் எக்குருவுஞ் சாராமல்
‘உ‘க்குருவாய் உம்மில்வாழ் மெய்க்குருவைச் சார்வீரே!
பொய்க்குருமார் மடஞ்சேர்ந்து கண்ணிழந்தே வீழாமல்
மெய்யுடம்பாம் மடத்துள்ளே சற்குருவைச் சேர்ந்துய்வீர்!
(தமிழுக்கே உரித்தான ‘உ‘கரச் சுட்டு உம்முள்ளேயே உறையும் உத்தம மெய்க்குருவைச் சுட்டுகிறது!)
அல்லாவுள் அ’ரு‘ளம்மை அடக்கம்! அ’ரு‘ளம்மை
அல்லாவின் நல்லாக்கம்! அ’ரு‘ளே நின்வடிவம்!
அல்லாவே நின்மூலம்! இருவரும் ஒன்றிடும்நின்
இல்லாகும் இருதயமே [...]
Archive for the 'பகுக்கப்படாதது' Category
3. சற்குரு
ஜனவரி 7, 2009நாயகனின் பேருபதேசம் 9
அக்டோபர் 23, 2008நித்திய இயற்கையுண்மையதாய்
எங்கும் இன்புற்று விளங்கும் அன்பொன்றே
ஒவ்வொன்றிலும்
கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்று
அறியும்
எழுமையாம்
என் பெருமை.
அன்பொன்றே
எல்லாந் தழுவிய
என் முழுமை.
அன்பொன்றே
என்றும் மாறா
என் பழமை.
அன்பொன்றே
அலகிலாப் பன்மையாய்
உலகில் பரவும்
என் ஒருமை.
அன்பொன்றே
சுடச் சுடச் சுடரும்
என் புதுமை.
அன்பொன்றே
அமுதாய் வழியும்
என் தண்மை.
அன்பொன்றே
பூரணமாய் நிறைந்த
என் தன்மை.
அன்பொன்றே
தயவாய்த் தழுவும்
என் தாய்மை.
அன்பொன்றே
அருட்பேராற்றலாய் எழும்
என் ஆண்மை.
அன்பொன்றே
அறிவாய் விளங்கும்
என் குரு மெய்.
அன்பொன்றே
இருள்சேர் இருவினை அறுக்கும்
பொருள்சேர் இறைமையாம்
என் கூர்மை.
அன்பொன்றே
எல்லாம் அசைவிக்கும்
அசையா என் நிலைமை.
அன்பொன்றே
சொல்லறச் சும்மா இருக்கும்
என் மேன்மை.
அன்பொன்றே
தங்கு தடையின்றிப் பாயும்
என் நீர்மை.
அன்பொன்றே
எப்போதும் வெல்லும்
என் வாய்மை.
அன்பொன்றே
எல்லாங் கடந்தும்
எதிலும் இறைந்த
என் உண்மை.
அன்பொன்றே உன் “ஐ”
உறுதியாய் உயிரதனைப் பற்றி
“ஐ” அறிவின் கண் ஆறறிவும் ஓடுங்கி
மன ஆரவாரம் அடங்கி [...]
இ(ரு)தயம்
ஜூலை 10, 2008இ(ரு)தயத்தில் கோயில் கொண்ட இறைவனேஇதயத்தின் இரத்தச் சிவப்பு
இ(ரு)தயத்தில் வாழுந் தயாபரக் கடவுளேஇதயத்தின் உயிர்ப்பாந் துடிப்பு
இ(ரு)தயத்தில் ஒளிரும் அருட்ஜோதிப் பிழம்பேஇதயத்துள் ஒளிந்த பழமை
இ(ரு)தயவாய் திறந்து பெருந்தயவு வழிந்தோடஇதயத்துள் இன்பக் களிப்பு
இ(ரு)தயவாய் திறந்தே இருநீ தயவாய்இதயத்துக் கதுவே உயிர்ப்பு
வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி – 2
ஏப்ரல் 16, 2008என்றென்றும் என்ற ஆதியாய்த் தொடங்கி
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.
இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.
எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
“எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்“
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
“இரு தயவாய்“
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற [...]
நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்
ஏப்ரல் 12, 2008நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் அன்பர்களே!
நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு அடையும், இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவமாக சமாதி நிலை இல்லை.
நீங்கள் இதற்கு மாறாக எண்ணுகிறீர்களென்றால், அம்மாறான எண்ணத்தின் காரணமாகவே, சமாதி நிலையை அடைய நீங்கள் மிகவும் சிரம்ப்படுகிறீர்கள்.
அவ்வாறு மாறாக ஏன் நீங்கள் எண்ணுகிறிர்கள்?
சில கணங்கள் ஆராய்ந்து பாருங்கள். அம்மாறான எண்ணத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்பதையும், அம்மாறான எண்ணத்தை நீங்கள் ஆராயாமல் ஏற்று அதையே உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் [...]
