ஒரு பொருளும் இல்லாத என்னைக்குருப் பொருள் தந்தே தேற்றினார்அருள் வள்ளற் பரம்பொருள்!அவர்தம் செம்பணி செய்யக் கூலியும்வெட்கமின்றிக் கேட்டேன்!அரவணைத்தென்னைஅன்போடே திருப்பொருளுந் தந்தாரே வள்ளல்!உருப்படாமல் போன என்னைஉருப்படும் மெய் சொல்லிஉருப்பட வைத்துஉலகம் உருப்படவும் உத்தி சொல்லிஉலகில் உரத்தே உரைக்கச் சொன்னார்!நானும் உரைக்கின்றேன்!நாயகன் சொல்லன்றிநான் ஏதும் அறியேன்!செவியுள்ளவன் கேட்கக் கடவன்நாயகன் தன் வார்த்தை!விழியுள்ளவன் பார்க்கக் கடவன்நாயகன் தன் காட்சி!இருதயமுள்ளவன் உணரக் கடவன்நாயகன் தன் அன்பை!மனமுள்ளவன் அறியக் கடவன்நாயகன் தன் ஞானம்!விரலுள்ளவன் தொடக் கடவன்நாயகன் தன் திரு மேனி!நாவுள்ளவன் சுவைக்கக் கடவன்நாயகன் தன் [...]
Archive for the 'வணக்கம்' Category
குரு நாதர் சரணம்!
ஜனவரி 7, 2009அலைமகளின் அருள்வாக்கு
மார்ச் 31, 2008என்னைப் போன்றே நீங்களும் தெய்வீகமானவரே!
என்னைப் போன்றே நீங்களும் வணக்கத்துக்குரியவரே!
என்னைப் போன்றே நீங்களும் வல்லமை மிக்கவரே!
எனக்கும் உமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.
நாம் உருவத்தால் பெயரால் வெவ்வேறாகத் தோன்றினாலும், உருவத்துக்கும் பெயருக்கும் அப்பால் அருவ மெய்ப்பொருளாய் விளங்கும் ஒரே கடவுளிலிருந்தே உருவாகிறோம்.
அந்தக் கடவுளுக்கும் நமக்கும் இடையில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை.
ஏனென்றால், நான் என்று நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியும் தன்னுணர்வாம் மெய்யுணர்வாகவே அந்தக் கடவுள் எங்கும் எதிலும் எப்போதும் இருக்கிறார்.
உருவமும் பெயரும் பெற்ற [...]
வணக்கம்
மார்ச் 31, 2008அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் அன்புக் குழந்தைகளே! நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் பேரருளாளர்களே! “நான் வழங்கும் மகாயோகம்” என்ற அருட்பெருங்கடவுளின் பேருபதேசம் உம்மைத் தேடி வருகிறது, படித்துப் பயன் பெறுவீர்!
நன்றியுடன் உங்கள் அன்பன்
நான் நாகரா(ந.நாகரஜன்)
