அருட்குறள் சுட்டும் மெய்ஞ்ஞான விஞ்ஞானம்

வெட்டவெளி என்ற மெய்யும்
உடம்பு என்ற மெய்யும் ஒன்று தான்
என்று ஐயமற அறிவதே மெய்ஞ்ஞானம்,
உண்மை அறிவு,
அதாவது உள் மெய் அறிவு,
அதாவது திடமான உமக்குள் காலியாக இருக்கும் சுத்தவெளியின் அறிவு.

காலியை திடமாயறிந்துணர்ந்தாலன்றி
திடம் காலியாகிப் போகும்
மறுபடி மறுபடி

அறிந்துணராமல்
அது
மறுபடி மறுபடிப்
போலியாய்க்
காலியாவதை விட
அறிந்துணர்ந்து
மெய்யாய்க்
காலியாவதே மேல்.

தமிழன்
உண்மைக்கும்
உடம்புக்கும்
மெய்யென்ற ஒரே பேரை
வைத்தது
பரிபாசை இல்லாமல்
பகிரங்கமாய்ப்
பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்காதப்
பெருவாழ்வைப்
பரைசாற்றவே.

அருவமான வெட்டவெளியாம் உண்மைக்கும்
உருவமான பருப்பொருளாம் உடம்புக்கும்
இடையே அதிர்வுகளின் வேறுபாடே
இரண்டின் தரமும் ஒன்றே.
பனிக்கட்டியான திடத்தின்
நீராவியான அருவத்தின்
தரமும் ஒன்றே போல.

அதிர்வுகளின் வேறுபாட்டால்
தரக்குறைவு தோன்றுமென்பது
மனப்பிரமை.
மாயைத் திரை உருவாக்கும்
மனப்பிரமை.
மாயத்திரை விலக
மனப்பிரமை கழிய
தெற்றென விளங்கும்
மெய்ஞ்ஞானம்

வெட்டவெளியே மெய்யென்றிருப்போர்க்கு
வெட்டிப்பேச்சு ஏதுக்கடி!

வெட்டவெளியே
மெய்யுடம்பு
இது பட்டப்பகல் வெளிச்சம்!
அருவ உருவ ஒருமையே
பூரண மெய்ஞ்ஞானம்!
உலகம் மாயமல்ல.
உலகமும்
உலகத்தின் ஆதியாம் வெட்டவெளியும்
ஒவ்வாத வெவ்வேறு
என்ற மனப் பிரமையை
உருவாக்கும் அஞ்ஞானமே
மாயை.
இந்த அஞ்ஞானம் போனால்
மெய்ஞ்ஞானம்

இந்த அஞ்ஞானத்தைப் போக்கவே
அருளொளியின் பாய்ச்சலாய்
அருட்குறள் உபதேசம்
அதை இன்னும் விளக்கும்
அருட்குறள் சுட்டும்
மெய்ஞ்ஞான விஞ்ஞானம்

அஞ்ஞான குண்டு சட்டிக்குள்
உட்கார்ந்து கொண்டு
மனக் குதிரை
நாம் ஓட்டும் வரை
இந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானம்
சுட்டுப்போட்டாலும்
நமக்கு உறைக்காது

உடம்புக்குள் உறுபொருளாய்
அன்பெனும் அருளொளி
எப்போதும் ஓடுவதை

அறியாத உறக்கம் கலைக்கவே
மெய்ஞ்ஞானி திருவள்ளுவர்
என்னை எழுதச் சொன்ன
உபதேசம்

அருளாளன் வள்ளல் பிரானைத்
தம்படிக்கு உதவுமா
உந்தன் உபதேசம் மற்றும்
வள்ளுவனின் மெய்ஞ்ஞானம்

என்றே ஓர் நாள் கேட்டபோது
வரவிருக்கும் பேராபத்திலிருந்து
தம்படிகள் மனிதனைக்
காப்பாற்றாதென்றும்
தயவொன்றே காப்பாற்றுமென்றும்
அன்பின் மிகுதியால்
என்னைக் கடிந்து
உறுதியுடன் உலகத்துக்குப்
பகிரச் சொன்னதே
அருட்குறளும்
அருட்குறள் சுட்டும்
மெய்ஞ்ஞான விஞ்ஞானமும்!

திருவள்ளுவப் பெருந்தகைக்கும்
வள்ளல் பிரானுக்கும்

ஊடகமாகி நான் வழங்கியதே
இம்மெய்ஞ்ஞான விஞ்ஞானம்.
இதை ஏற்பதும் மறுப்பதும்
அவரவர் விருப்பம்

அவ்வளவே!

1

அசையா வெறுவெளி
அசையத் தோன்றும்
அருளொளி

பாயும் அருளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பருவெளி

பருவெளி உறையப்
பளிச்செனத் தோன்றும்
வெள்ளொளி

பாயும் வெள்ளொளிப்
பாய்ச்சல் குறையத் தோன்றும்
பொருட்திரள்

(வெறுவெளி=வெட்டவெளி, சுத்தவெளி, பரமாகாசம், தனிப்பெருங்கருணை, Spiritual Space
அருளொளி=அருள்வெளி, ஜோதி வெளி, சிதாகாசம், அருட்பெருஞ்ஜோதி, Spiritual Light whose speed is Infinity
பருவெளி=பூதாகாசம், விண், Material Space
வெள்ளொளி=Material White Light whose speed is 3,00,000kilometres/second
பொருட்திரள்=Matter)

வெறுவெளிக்குள் அருளொளி அடக்கம்
அருளொளிக்குள் பருவெளி அடக்கம்
பருவெளிக்குள் வெள்ளொளி அடக்கம்
வெள்ளொளிக்குள் பொருட்திரள் அடக்கம்

எனவே
வெறுவெளிக்குள்
அருளொளியும்
பருவெளியும்
வெள்ளொளியும்
பொருட்திரளும்
ஆகிய எல்லாமே அடக்கம்

பொருட்திரள் வேகங்கூடப்
பாயும் வெள்ளொளி

வெள்ளொளி உருகிச்
சேரும் பருவெளி

பருவெளி வேகங்கூடப்
பாயும் அருளொளி

அருளொளி அசைவு நிற்க
அசையா வெறுவெளி

காலியான வெறுவெளியின்
திடப்படுதல் பொருட்திரள்

திடமான பொருட்திரளின்
காலியாதல் வெறுவெளி

2

மனிதனுக்குத்
தன் திடமான வெளி பாகமாம்
பொருளே மெய்
காலியான் உள் பாகமாம்
வெறுவெளியே
அருளொளியாம் ஜீவன்(உயிர்)
பாயும் வழி

(நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
குருநாதர் இயேசு கிறிஸ்துவின் மகாவாக்கியம்)

மனிதனுக்கு
மெய்யென்னும் திடப்பொருள்
தன்னுள் வழியாய் இருக்கும்
வெறுவெளியினூடே
அருளொளியாம்
ஜீவனின் பாய்ச்சலை
தங்கு தடையின்றி
அனுமதிக்கவே இருக்கிறது

இவ்வாறு மனிதன்
தன் மெய்யென்னும் திடப்பொருள்
அருளொளி பாயும் ஊடகமே என்று
தான் அறிந்துணர
பாயும் அருளொளியில்
தன் மெய் கரைய
வெறுவெளியில் ஒன்றுவான்.

பொருள் வெள்ளொளியிலிருந்தே
உருவாகிறது
வெள்ளொளி பருவெளியிலும்
பருவெளி அருளொளியிலும்
அடங்கியிருப்பதால்
பொருளுக்கு அருளொளியே மூலம்

அருளொளிக்கு வெறுவெளியே மூலம்

பொருளுக்கும் அருளொளிக்கும் இடையே
பருவெளியில் படர்ந்திருக்கும் மாயையே
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
மனிதனிடமிருந்து மறைக்கிறது

பொருளுலகில் வாழும்
மனிதனால் தன்னிலையில்
இம்மாயையைத் தகர்க்க முடியாது
அருளொளியொன்றே
இம்மாயையைத் தகர்க்கும் ஒரே வழி
பருவெளியில் படர்ந்திருக்கும்
இம்மாயையைத் தகர்த்து
பொருளுக்கு அருளொளியே மூலம்
என்ற பேருண்மையை
அருளொளி மனிதனுக்கு உணர்விப்பதே
மெய்ஞ்ஞானம்

பருவெளியில் மாயை கலைய
மனிதனின்
மெய்யாம் திடப்பொருளுக்காகும்
அருளொளியின் சுத்தம்

மாயை கலையாமல்
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் கரைய முடியாது

மாயை கலைந்து
அருளொளியின் சுத்தம்
கிடைக்கப்பெற்ற
மனிதனின்
மெய்யாம் திடப்பொருள்
அருளொளியில் தான் கரைய
மனிதன் வெறுவெளியில் ஒன்றுவதே
மரணமிலாப் பெருவாழ்வு

இம்மாயையின் தோற்றம்
வெறுவெளியிலோ
அருளொளியிலோ
அல்ல

ஒன்றோடொன்று அம்மையப்பனாய்
எப்போதும் புணர்ந்திருக்கும்
இவ்வொருமையை
மாயையையின் ஒரு சிறு கூறு கூட
தீண்டவே முடியாது

பருவெளியில் அஞ்ஞான இருளாக
இம்மாயை எப்படிப் படர்கிறது?

இச்சதிக்குப் பின்னிருக்கும்
மர்மம் என்ன?

அருளொளி
இம்மாயைத் திரையைக் கிழித்து
பொருளுலகில் வாழும்
மனிதனுக்கு
மெய்ஞ்ஞானம் அளிக்க
ஏன் விரைகிறது?

அடுத்து ஆராய்வோம்.

3

அருளொளியை விட்டு விலகிய
ஒரு அஞ்ஞானக் கூட்டம்
பருவெளி மற்றும் பொருட்திரள் நிலையிலேயே
தம் வாழ்வை நீட்டிக்கொள்ள வேண்டும்
என்ற தம் அஞ்ஞானத்தால் உருவாகிய
கட்டாயத்தில் இருப்பதால்
பொருளுலகில் வாழும் உயிர்த்திரளின்
குறிப்பாக மனிதனின்
உயிர்ச்சக்தியைக் கரந்து
தம் வாழ்வை நீட்டிக் கொள்ளவே
இம்மாயையைப்
பருவெளியில் படரவிட்டிருக்கிறது.

மனிதன் அஞ்ஞானத்தில் இருக்கும் வரையே
இக்கூட்டத்தால்
தம் வாழ்வை நீட்டிக் கொள்ள முடியும்.
ஆறறிவுள்ள மனிதனை
இம்மாயையின் பிடியில் சிக்க வைத்து
பொருட்திரளையும்
ஒன்று முதல் ஐந்து வரையிலான
உயிர்த்திரளையும்
பரிணமிக்க இயலாத இருளில்
ஆழ்த்தி இருக்கிறது இக்கூட்டம்.

அன்பெனும் உயிர்நிலையை
அறிய முடியாத
இருதயமில்லாத
ஆனால் மிகவும் தந்திர புத்தி கூர்மையும்
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது போன்ற
தொழில்நுட்பங்களில் தேர்ந்த இக்கூட்டம்
மனிதரை வன்பில் ஆழ்த்தி
அவர்களது குரூரச் செயல்களின் மூலம்
கசியும் குறைந்த அதிர்வுகளுள்ள
உயிர்ச்சக்தியை உண்டே
தம் வாழ்வை நீட்டிக் கொண்டிருக்கிறது.
அன்பின் உச்ச அதிர்வுகளை
இக்கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியாது
ஏனென்றால்
அவ்வுச்ச அதிர்வுகள் சுட்டும்
அருளொளியை வெறுத்தும் மறுத்தும்
அதை விட்டு விலகி வந்திருக்கும்
இக்கூட்டம்
ஆணவத்தின் முழு வடிவம்.

இக்கூட்டம் படர விட்டிருக்கும்
மாயையெனும் அஞ்ஞான இருளிலிருந்து
பொருளுலகில் வாழும்
மனிதனையும்
அதனால் மற்றெல்லா உயிர்த்திரளையும்
பொருட்திரளையும்
அருளொளி விடுவிப்பதன் மூலம்
அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருக்கும்
ஆணவத்தின் முழு வடிவமாம் இக்கூட்டம்
தம் வாழ்வை நீட்டிக்க
வேறு வழிகளைத் தேட வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு
முடிவில்
வேறு வழியின்றி
ஆணவத்தை விட்டு
அருளொளிக்குத் திரும்பும்
நல்ல சூழ்நிலையும் உருவாகலாம்.

பொருளுலகில் வாழும் மனிதன்
அருளொளி அளிக்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக்கொண்டால்
மரணமிலாப் பெருவாழ்வில்
அவன் நிலைபெறுவது திண்ணம்.

மனிதன்
அருளொளி வழங்கும் மெய்ஞ்ஞானமாம்
இக்கொடையை ஏற்றுக் கொள்வானா?
அதற்கான சூழ்நிலை வெகு வேகமாக
இஞ்ஞான யுகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: