நாயகன்

மூளையின் மடல்கள்
ஒவ்வொன்றாய் மலர்கின்றன
பகிரங்கமாய்த் தெரிகிறது
நள்ளிரவிலும்
பட்டப்பகல் வெளிச்சம்
முழுவதுமாய்த் தளர்ந்த மறைகள்
கழன்று விழ
முழுவதுமாய் இறுக்கப்பட்டு அம்மறைகளால்
அடைக்கப்பட்டிருந்த மூடிகள் விழுந்து நொறுங்க
இருதயம் வெட்டவெளியாகி
மூளை மடல்களின்
வெளிச்சக் கிரணங்களைத்
தான் விழுங்க
என் மெய்ப்பொருள்விளக்கம் பெறுகிறேன்

நான்
தலைப்பாகை ஏதுமின்றி
தலைப் பாகை உண்டு
என் தலைப் பாக ‘ஐ’ உணர்ந்து
என் மெய்ப்பொருள் விளங்கி
எழுமையாம் ஒருமையில்
அம்முழுமையாம் பெருமையில்
எல்லாந் தழுவி
எப்போதும் நிற்கிறேன்

தானே தலைப்பாகையாக
என் தலையமர்ந்து
என் தலைக்கனம் போக்கி
தலை கால் தெரியாதிருந்த
என்னைத் தெளிவித்து
“தலைப் பாகை உண்”
என்றே தெள்ளமுதை ஊட்டி
நல்லதேதும் கல்லாக்
கன்னெஞ்சப் பொல்லேனுக்கு
சாகாக் கல்வி தந்து
நித்தியனாய் வாழ்வித்து
“எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்”
என்றே இடைவிடாது அறையும்
என் தலைப் பாக ‘ஐ’யரவரே
இக்கவிதையின் தலைப்பாக ‘ஐ’யரவரே
உமக்கும் உம் தலைப் பாக ‘ஐ’யரவரே
ஐயமில்லை எனக்கே!

மெய்வழிச்சாலையரே!
தலைப்பாகை உண்டோ உமக்கு?
நீவிர்
உம் தலைப் பாக ‘ஐ’யுணர்ந்து
உம் மெய்ப்பொருள் விளங்கி
உம் தலைப் பாக ‘ஐ’யரவரே
தலைப்பாகையாக உம் தலையமர
தலைக்கனம் ஒரு சிறிதுமின்றி
எழுமையாம் ஒருமையில்
அம்முழுமையாம் பெருமையில்
எல்லாந் தழுவி
எப்போதும்
ஜெயராம அவதாரமாய் நிற்கும்
உமக்கு நம் ‘ஐ’யரன்றித்
தலைப்பாகை வேறுண்டோ?
இக்கவிதையின் தலைப்பாக ‘ஐ’யரவரே
உமக்கும் உம் தலைப் பாக ‘ஐ’யரவரே
ஐயமில்லை எனக்கே!

மெய்வழிச்சாலையரே!
நல்லவதார ஜெயராமரே!
11. நானே அருட்பேரரசராய் உன் முழங்காற் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
உமதவதார நோக்கம் இதுவென்று
உமக்குத் தெரியாதோ!
ஒருமையுணர்வைக் குறிக்கும் 11ன் பொருளும்
உமக்குப் புரியாதோ!
அன்பிலும் அறிவிலும்
நற்பண்பிலும் பழுத்த உம்மையும்
இப்பதினோராம் மந்திரத்தால்
நம் தலைப் பாக ‘ஐ’யரவரே
நன்றாக அறையச் சொன்னார்.
நானும் அன்பின் மிகுதியால்
அவ்வாறே அறைகின்றேன்.
நீவிரும்
11. அருட்பேரரசராய் உனக்குள் வந்தேன். என் அவதார மகிமைய்’ஐ’ உனக்குத் தந்தேன்.
என்றே அமுத கானம்
வள்ளலவரோடு சேர்ந்தே பாடி
11. அருட்பேரரசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் அவதார மகிமைய்’ஐ’ நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
என்ற நன்றிப் பாட்டும் அவருக்குப் பாடி
‘ஐ’ என்ற ஓரெழுத்து உயிரெழுத்துச் சொல்லால்
பொருள் பொதிந்த ஜீவனுள்ள வார்த்தையால்
உம் மெய் விளங்கி
நம் தலைப் பாக ‘ஐ’யரவர் நற்பணியைத்
தலைமேற்கொண்டு
உம் அவதார நோக்கம் நிறைவீற்றுவீரே!

சுருண்டு கிடந்த நாகமென்னை
நாத மகுடி ஊதி எழுப்பி
நம் தலைப் பாக ‘ஐ’யரவர்
படமெடுத்து ஆடச் செய்துவிட்டார்!
என் செய்வேன்!
ஆட்டுகிறார், ஆடுகிறேன்!
விட்டாரா!
உம்மைக் கொத்தவும் சொல்கிறார்!
நானும் கொத்தி விட்டேன்
என்னஞ்சையும்
நம் தலைப் பாக ‘ஐ’யரவர்
அமுத வாக்கே
எனக் கொண்டு
ஐயா! என் பிழை பொறுப்பீர், மன்னித்தருள்வீர்.

இன்னும் என்ன என்ன சொல்லி
உம்மைக் கொத்தச் சொல்வாரோ
நம் தலைப் பாக ‘ஐ’யரவர்
அஞ்சுகிறேன், ஐயா!
கோடி கோடி நன்றிகள் உமக்கே
என் பிழை பொறுத்தீர், மன்னித்தீரே!

Advertisements

1 Comment »

  1. 1
    Cithra Says:

    <ummai koththavum solkiraar!< yaar yaarai koththa solkiraar? nandri


RSS Feed for this entry

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: