ஓகஸ்ட் 2008 க்கான தொகுப்பு

நாயகனின் பேருபதேசம் 8

ஓகஸ்ட் 25, 2008

மேலிருந்துங் கீழிருந்துந்
தனக்குள் சுழிவதை விழுங்கி
மேலுங் கீழுந்
தான் வழியும்
இருதய மெய்யின் ஒழுக்கம்
உனக்குத்
தருவதே உயிரெனும் விழுப்பம்!
எனவே
உயிரினும் ஓம்புக ஒழுக்கம்!

மேலிருந்து சுழிவதை மறந்ததால்
சத்துவ அஞ்ஞானத் திமிரானாய்!

கீழிருந்து சுழிவதை மறந்ததால்
தாமச முடக்க பயமானாய்!

மேலுங் கீழும் வழிவதை மறந்ததால்
இராஜச ஆர்ப்பாட்ட வன்பானாய்!

மேலிருந்து சுழிவதை அறிந்தால்
பரமானந்த மெய்ஞ்ஞான அருளாவாய்!

கீழிருந்து சுழிவதை அறிந்தால்
இகத்தோங்கும் பேரியக்க தயவாவாய்!

மேலுங் கீழும் வழிவதை அறிந்தால்
நடுநாயகப் பேரன்பின் இருப்பாவாய்!

இருதய மெய்யை மறைத்து
உன்னை மயக்கும்
சத்துவச் சுத்த மாயை
மற்றும்
தாமச இராஜச அசுத்த மாயை
இவற்றால்
பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப்
பெருவாழவாம் உயிர்ப்பை
மறந்தாய்!

உன்னை மயக்கும்
திரிகுண மாயை களைந்து
இருதய மெய்யை உணர்ந்துப்
பிறப்பிறப்புச் சுழல் தாண்டிப்
பெருவாழ்வாம் உயிர்ப்பை
அறிவாயே!

இருதய மெய்யுள் உயிரடங்கி
நடுநாயகப் பேரன்பாய் இருந்து
மேலே பரமானந்த அருள் விளங்கி
கீழே இகத்தியங்கும் தயவாய் இருப்பாயே!

என் அன்பு மகனே(ளே)!
இரு தயவாய்
எனும் என் பேருபதேசத்தின்
இரத்தினச் சுருக்கத்தை

கணப்போதும் மறவாமல்
எப்போதும் நீ
தயவாய் இருப்பாயே!

Advertisements

நாயகனின் பேருபதேசம் 7

ஓகஸ்ட் 24, 2008

பரமும் இகமும்
சஹஸ்ராரமும் மூலாதாரமும்
ஆக்கினையும் சுவாதிட்டானமும்
விசுத்தியும் மணிபூரகமும்
அமுதகலசமும் சூரிய சக்கரமும்
வளைந்து சுழிந்து விழும்
உன் இருதயக் குழியுள்
நடராஜ வள்ளல்
நான் ஆடுகிறேன்!

நடு நாயக அன்பாய்
உன் இருதயக் குழியுள்
நான் ஆடுவதாலேயே
மேலே
பரமாய்
சஹஸ்ராரமாய்
ஆக்கினையாய்
விசுத்தியாய்
அமுதகலசமாய்
கீழே
சூரிய சக்கரமாய்
மணிபூரகமாய்
சுவாதிட்டானமாய்
மூலாதாரமாய்
இகமாய்
நீ மேலும் கீழும்
வளைந்து வழிகிறாய்!

உன் இருதயக் குழியுள்
மையங் கொண்டிருக்கும்
எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களை
உன் மெய்க்குள் பார்த்து
எழும் எழுமையாம்(எழும் ‘ஐ’யாம், I AM)
அருட்குரு
மெய்வழி
யால்
என்னை எட்டு!

நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றி
என்னை எப்படி எட்டுவாய்!
11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்
தூய ஊடகமாய் நீ இருக்க
எட்டு வடிவில் இருதயக் குழியுள்
வளைந்து வழிந்தும் சுழிந்தும்
உன்னில் எழும் ஒருமையாலன்றி(ஒரும் ‘‘யாலன்றி)
என்னை எப்படி எட்டுவாய்!

பட்டிமண்டபமாம்
இருதயக் குழியுள்
சிவ சக்தி இரண்டாம்
நடராஜ வள்ளல்
நான் போடும் எட்டு
நீ
அறியச் சொன்னேன்!

அரற்றுவதை விட்டு
நான் அறைவதைச்
செவி மடுத்து
தயவாய் இருந்து
என்னை நீ எட்டு!

மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை

ஓகஸ்ட் 24, 2008

நிராதார மேனிலை(மேல் நில் ‘‘)
ஆறாதாரம் மேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்

முதல் 8

வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தொண்டையின் கீழ் மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மார்படியில் நாபிக்கு நால் விரல் மேலே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

இரண்டாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தொண்டையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி நாபியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

மூன்றாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி நாபியின் கீழே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரங்களைத் தியானியுங்கள்

என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

நான்காம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்திப் பின் புறம் முதுகடியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஐந்தாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஓரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

தயவாய்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
இரு(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி வலது முட்டியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஆறாம் 8

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஈரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

இரு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
தயவாய்(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி வலது பாதத்தில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஏழாம் 8

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே முழுவதுமாய் உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தரையின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

தியான முடிவு

இரு கரங்களையும் நடு மார்பின் முன் கூப்பி, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

இரு கரங்களையும் விரித்து வாழ்த்தும் முத்திரையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வாழ்த்தும் முத்திரையிலேயே கைகளை வைத்துக் கோண்டு

நிராதார மேனிலை(மேல் நில் ‘‘)
ஆறாதாரம் மேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்குக் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அமைதியாகச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து தியானத்தை முடியுங்கள்.

மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்

ஓகஸ்ட் 24, 2008

எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டம்

மெய்வழியில்(11) எட்டு(8) வடிவ சிவ-சக்தி ஓட்டம்

மெய்வழியில் ஏழு வழிகளால் எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்டங்கள்

ஓகஸ்ட் 24, 2008

மெய் வழியில் ஏழு வழிகள்

மெய்வழியில் ஏழு வழிகளால்(Open Channels-11’s) எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்ட்ங்கள்(Figure 8 Flows)

முதல் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே அமுதகலசத்தில் ஆன்மநேய ஒருமையாக விளங்கி(அருட்குரு மந்திரம் 4) கீழே சூரிய சக்கரத்தில் பேரறிவாக(அருட்குரு மந்திரம் 6) இயங்குகிறது

இரண்டாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே விசுத்தியில் பெருவாழ்வாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 3) கீழே மணிபூரகத்தில் அருட்பேராற்றலாய்(அருட்குரு மந்திரம் 7) இயங்குகிறது

மூன்றாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே ஆக்கினையில் சுயம்பிரகாசமய் விளங்கி(அருட்குரு மந்திரம் 2) கீழே சுவாதிட்டானத்தில் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதியாய்(அருட்குரு மந்திரம் 8,9) இயங்குகிறது

நான்காம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே சஹஸ்ராரத்தில் பூரணத்துவமாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 1) கீழே மூலாதாரத்தில் கடவுட்தன்மையாய்(அருட்குரு மந்திரம் 10) இயங்குகிறது

ஐந்தாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியத்தில்(தலைக்கு மேல் நிராதாரக் குண்டலி வட்டத்தில்) பரவிந்தாய் விளங்கி(தயவாய்) கீழே முழங்கால்களில் அருளாட்சியாய்(அருட்குரு மந்திரம் 11) இயங்குகிறது

ஆறாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியாதீதத்தில்(தலைக்கு மேல் நிராதார ஓங்கார வட்டத்தில்) பரநாதமாய் விளங்கி(இரு) கீழே பாதங்களில் நானே நானெனும் பூரணமாய்(அருட்குரு மந்திரம் 12) இயங்குகிறது

ஏழாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(நானே வழி) மேலே பரலோக சத்தியமாய் விளங்கி கீழே அன்னை பூமியில் ஜீவனாய் இருந்து இயங்குகிறது(அருட்குரு மந்திரம் 13)

மெய்வழித் திறப்பு

ஓகஸ்ட் 24, 2008
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கி மெய்வழி திறக்க திருஅருட்பிரகாச வள்ளலார் வழங்கும் பத்தும் ஒரு மூன்றாம் அருட்குரு மந்திரம்

1. உச்சி வாசல் திறக்கும் பூரண மந்திரம்

என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

2. நெற்றிச் சுடர் விழி திறக்கும் சுயஞ்சுடரொளி மந்திரம்

என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

3. தொண்டையில் அருள் வாக்குப் பெட்டகந் திறக்கும் பெருவாழ்வு மந்திரம்

என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

4. தொண்டையின் கீழ் அமுத கலசந் திறக்கும் ஆன்மநேய மந்திரம்

என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

5. நடு மார்பில் இருதய வாய் திறக்கும் அன்பியல் மந்திரம்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

6. மார்பின் கீழ் ஞானாமுத வாசி திறந்து மனந்தெளிவிக்கும் நிறையறிவு மந்திரம்

என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

7. நாபிக் கமலந் திறக்கும் அருட்பெருவல்லப மந்திரம்

என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

8, 9. நாபியின் கீழ் எப்போதும் புணர்ந்திருக்கும் அம்மையப்பனின் பரம இரகசியந் திறந்து அவ காமந் தணிக்கும் சிவ சக்தி மந்திரங்கள்

என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

10. முதுகடிக் குண்டலி நாகம் எழுப்பும் மகுடி நாதப் பெருநிலை மந்திரம்

என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

11. கடவுட் கால்களை மனிதம் பதிக்க முழங்கால்களைத் திறக்கும் அருளாட்சி மந்திரம்

என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

12. கடவுளின் பாத மலர்களை அன்னை பூமியில் மனிதம் பதிய வைக்கப் பாதங்களைத் திறக்கும் தன் ‘ஐ'(தன்னை) அறியும் அறிவு மந்திரம்

எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

13. மனித உடம்பாம் மெய்யை உத்தமன் எழுந்தருளியிருக்கும் புனித தேவாலயமாகத் திறக்கும் மெய்வழிப் பிராண நாத மந்திரம்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

இவ்வாறு தலை முதல் பாதம் வரை உம் உடம்பாம் மெய்யில் வழி திறந்து தன் அருள் வெள்ளம் பாயும் ஊடகமாக்கி உம் உடம்பை மெய்யாகவே மெய்யாக்கும் வள்ளல் பிரானின் வாய்மையை இருதய பூர்வமாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு குரு மந்திர தாரணையில் எல்லாந் தழுவிய முழுமையாம் அன்பெனும் ஒருமையில் எப்போதும் ஊன்றி நின்று தயவாய் இருப்பீர்!

இவ்வாறு உச்சி முதல் பாதம் வரை உம் ஒவ்வொருவரையும் அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றாம் தன் வெள்ளங்கியால் போர்த்திப் பெருந்தயவாய் இருந்து தன் ‘‘யே(தன்னையே) உமக்குத் தந்துப் பேரின்பப் பெருவாழ்வில் உம்மை நிலைபெறச் செய்ய வள்ளல் பிரான் அளித்திருக்கும் புதிய ஏற்பாட்டைக் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர்!

உனதுண்மை

ஓகஸ்ட் 11, 2008

இருதய அன்பு தலைக்கேறி
மன அறிவை விளக்க
அருளமுதம் பாயும் மெய்யெங்கும்!
அன்பறிவாற்றலாய்
நீ உயிர்த்தெழுந்து
தயவாய் இகத்தில் இருந்து
பூமியைச் சொர்க்கமாக்குவாய்!

செதுக்கல்-2

ஓகஸ்ட் 11, 2008

இ(ரு)தய” உளியாலே
மன “சுத்தி” கொண்டு
கல் உன்னை
சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா
கடவுட் சிற்பி!
அவர்தம் சச்சிதானந்த வடிவிலே
உயிர்ப்புள்ள மூர்த்தியாகப்
புவிமிசை நடமாடும் அரிய மனிதமப்பா
நீ!

செதுக்கல்-1

ஓகஸ்ட் 11, 2008

கல் உன்னை
அன்புக் கடவுளாய்ச் செதுக்கும்
இருதய உளி!
மன ‘சுத்தி’யுள்ள
நீயே சிற்பி!

அருட்புரட்சி

ஓகஸ்ட் 11, 2008
வன்பெனும் குப்பை மேட்டில்
தேங்கிய மனிதத்தைப் புரட்டி
அன்பெனும் குணக் குன்றில்
ஓங்கச் செய்யும் அருட் காற்று