நாயகனின் பேருபதேசம் 3

நாயகனே!
உம் குரல் என்னில்
உரத்து ஒலிக்கிறதே!

ஆம், அன்பு மகனே!
என்றாலும் உரத்து ஒலிக்கும் என் குரல்
உன் குரலில் வேறற ஒன்ற வேண்டுமே!

நம் குரல்கள் வேறற ஒன்றும்
வழியைச் சொல்வீரோ?

உன் தலையுச்சியில் என் பூரணத்துவத்தையும்
உன் நெற்றியில் என் சுயம்பிரகாசத்தையும்
உன் தொண்டையில் என் நித்திய ஜீவனையும்
உன் தொண்டையின் கீழ் என் ஆன்ம நேய ஒருமையையும்
உன் நடு மார்பில் என் இயல்பாம் பேரன்பையும்
உன் மார்பின் கீழ் என் நிறைவாம் பேரறிவையும்
உன் நாபியில் என் இருப்பாம் அருட்பேராற்றலையும்
உன் நாபியின் கீழ் என் பெருங்குணமாம் தனிப்பெருங்கருணையையும்
என் உள்ளொளியாம் அருட்பெருஞ்ஜோதியையும்
உன் முதுகடியில் என் பெருநிலையாம் கடவுட்தன்மையையும்
உன் முழங்கால்களில் என் அருளாட்சியையும்
உன் பாதங்களில் நானே நானெனும் பூரணத்தையும்
உன் மெய்யுடம்பாலயத்தில் என் மெய் வழி ஜீவனையும்
முழுமையாய் நீ உணர்வதே
நம் குரல்கள் வேறற ஒன்றும் வழி.

இதற்கென்றே அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றும் உபதேசித்தீரோ?

ஆம் மகனே!
குரு மந்திர தாரணையில் அயராது நில்
அதுவே உன் இருதய வாய் திறந்து
நிராதார மேனிலைக்கும் ஆறாதார உலக உயிர்த்திரளுக்கும் இடையே
மெய்ப்பாலமாய் உன்னை நிறுத்தும்.
இப்பதின்மூன்று மந்திரங்களின் இரத்தினச் சுருக்கமே
இரு தயவாய்” எனும் என் பேருபதேசம்.
தயவெனும் ஒருமையிலிருந்து நீ நழுவும் போதெல்லாம்
உன்னை எச்சரித்து மீண்டும் அவ்வொருமையில்
உன்னைச் சேர்க்குந் தாரக மந்திரம்.
இருதய ஒருமையிலிருந்து நழுவிய உன் மனத்தை எச்சரித்து
இருதயத்தில் மனமடங்கச் செய்யும் பரம தந்திரம்.
உன் இதய யந்திரத்தின் துடிப்பில்
இனி உரத்து ஒலிக்கும் இந்தப் பர நாதம்.
உச்சி முதல் பாதம் வரை
இரு தயவாய்
நீ இகத்தில்!
உன் மெய்யூடே
பதின்மூன்று படியிறங்கிப்
பராபர மெய் நான் பதிவேன் இகத்தில்!

குரு மந்திர தாரணையில் அயராது நிற்க
எளிய வழியொன்றைக் கூறுவீரா?

உள் மூச்சில் என் அருள் வெள்ளம்
உன் மெய்யெங்கும் பரவும் உயிர்நிலை
மற்றும்
வெளி மூச்சில் அது என் தயவாய்
உலகெங்கும் பரவும் மெய்யுணர்வு
இவ்விரண்டும் அன்பின் மிகுதியால்
நான் என் அன்பு மகனா(ளா)ம் உனக்கு
எப்போதும் அளித்திருக்கும் வரங்கள்!
இவ்வரங்களை மறந்த நீ
அவற்றை நினைவு கூர்ந்து
மூச்சில் கவனம் வை!
உள்ளே பாயும் என் அருளையும்
வெளியே வழியும் என் தயவையும்
உன் மூச்சில் கவனம் வைத்து
ஐயமின்றி அறிவாய்!
குரு மந்திர தாரணை எளிதாய் வாய்க்கும்!
என் வரங்களை நினைவு கூர்ந்து
மூச்சில் கவனம் வைக்க
இருதயத்தில் மனமடங்கும்!

இருதயம் யாதோ?

நிராதார மேனிலைக்கும் ஆறாதார உயிர்த்திரளுக்கும் இடையே
எப்போதும் திறந்திருக்கும் பாலம்.
நிராதார ஆறாதார ஒருமைக்கு மூலம்.
இகத்தில் மனித அவதாரமாய்
உன் மெய்க்குள் எழுந்தருளியிருக்கும்
நானே இருதயம்.
நடு நாயகமாம் அன்பே சிவம்!

நிராதாரம் யாதோ?

மேலே பரமானந்த அருள் விளக்கம்

ஆறாதாரம் யாதோ?

கீழே இகத்தோங்கும் தயவியக்கம்

மாயை யாதோ?

நிராதார ஆறாதார ஒருமைக்கு மூலமாம்
இருதயத்தை மறைக்கும் பனிப்படலம்

மாயையைக் களைய எளிய வழி?

குரு மந்திர தாரணை

நன்றி ஐயனே!

உனக்கும் நன்றி என் அன்பு மகனே(ளே)!
எப்போதும் மறவாதே
அருட்குரு மந்திரம் பத்தும் ஒரு மூன்றின்
இரத்தினச் சுருக்கமாம் என் பேருபதேசம்
இரு தயவாய்“!

கவனம்!
தயவே பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
மரணப் படுகுழி

எனவே
அதி கவனமுடன் எப்போதும்
இரு தயவாய்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: