ஓகஸ்ட் 6th, 2008 க்கான தொகுப்பு

சுடுங் கேள்வி!

ஓகஸ்ட் 6, 2008
அன்பெனும் இருதய நெறியான
உயிரின் நியதியான உனக்குத்
தலையாக அறிவு விளங்கக்
காலாக ஆற்றல் இயங்க
இருதயம் உணராமல்
தலை கால் தெரியாமல்
நீ திரிவதெப்படி?
விளக்கம்
1
இருதயம் உணர்ந்தால்
அன்பின் அமரத்துவம் அறிவில்
அதுவே சாகாத் தலை
அதாவது சாக்காட்டுப் பிரமையை வென்ற தலை
(சத்துவம் என்ற சுத்த மாயையும்
ராஜசம், தாமசம் என்ற அசுத்த மாயையும்
ஆகிய திரிகுண மாயை
தலையாகிய அறிவை மறைத்து
நம்மை அஞ்ஞானத்தில் ஆழ்த்துவதாலேயே
மரணப் பேய்
நம்மைத் துரத்துகிறது)

இருதயம் உணர்ந்து
சாகாத் தலையாம் அறிவு
இருதய அன்பில் வேரூன்றி எழ
அன்பின் செந்தண்மை ஆற்றலில்
இறங்கும்
அதுவே வேகாக் கால்
அதாவது வன்பின் சூடு தணிந்த கால்

இருதய அன்பே போகாப் புனல்
அதாவது தீர்ந்து போகாத பரசிவ வெள்ளம்.

நனி மிகச் சுருக்கமாக
அன்பின் பூரண விளக்கம் சாகாத் தலை(மெய்யறிவு, மெய்ஞ்ஞானம்)
அன்பின் வீரிய இயக்கம் வேகாக் கால்(அருட்சத்தி, அருட்பேராற்றல்)
அன்பெனும் வற்றாப் பெருக்கே போகாப் புனல்(பரசிவ வெள்ளம், ஜீவனுள்ள தண்ணீர்)

நடு நாயக அன்பே
மேலே தலையெனும் அறிவாய் விளங்கி
கீழே காலெனும் ஆற்றலாய் இயங்கி
நம்மை வழி நடத்துகிறது.

2
இரு தயவாய்
இரண்டே சொற்களில் வள்ளலின் பேருபதேசம்
இருதயம்” என்ற சொல்லில்
இரு” மற்றும் “தய” இருப்பது புரிந்தால்
நம் இருதய இயல்பாம்
அன்பெனும் தயவு
தெற்றென விளங்கும்!
ரு‘ (Ruh) என்னும் அரபு மொழிச் சொல்
அல்லாவோடு எப்போதும் ஒன்றியிருக்கும் தாய்மையாம்
பரிசுத்த ஆவியை
ஆதி சக்தியைக்
குறிக்கிறது.
இந்த ‘ரு‘ இல்லையென்றால்
இதயம் வெறும் மாமிசப் பிண்டம்
ருள் ஒருமை மற்றும் கருணை
என்ற தமிழ்ச் சொற்களில்
ரு‘வின் மந்திர நாதம்
உரத்தே ஒலிக்கிறது.
இந்த ‘ரு‘வெனும் தயவே
அன்பே
நம்மில் வாசியெனும் மூச்சாய் ஓடி
நம்மை வாழ வைக்கிறது.
ரு‘வெனும் அன்பின்றிப்
பெருவாழ்வு அறவே இல்லை.
Advertisements

உயிர் போகும் கேள்வி?

ஓகஸ்ட் 6, 2008

இருதயத்தின் உள்ளேயிருந்து
மனக் கதவைக்
கிறிஸ்து
ஓயாமல் தட்டிக் கொண்டேயிருக்கிறார்.
மனிதம்
அதைத் திறந்து
உள்ளே போக மனமின்றி
வெளியே வீணே திரிகிறது.
வாழ்வின் கணங்கள்
கழிந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்துவின் தட்டலுக்கு
செவி மடுத்து
மனக் கதவைத் திறந்து
இருதய வீட்டில்
அவரோடு கூட
மனிதம் மனந்திரும்ப
இன்னும் மிச்சமிருப்பவை
சில கணங்களே!
வன்பின் ஆர்ப்பாட்டம்
மனித வீடுகளை
மொத்தமாய்ச் சீரழிக்குமுன்
அன்பின் எளிமைக்கு
மனந்திரும்பி
இருதயத்தில் மனமடங்கிக்
கிறிஸ்துவோடு மன்னா உண்ண
மிச்சமிருக்கும் சில கணங்கள்
பயன்படுமா?
மனிதம் உய்யுமா?

தமிழ் மன்றத்தில் ஷிப்லி அவர்களின் “கதவு தட்டப்படும் சப்தம்… என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

ஞானயுக ஆத்திச்சூடி???!!!

ஓகஸ்ட் 6, 2008

ன்பு அறிவில் விளங்க
ற்றலாய் அறிவு இயங்க
றைவனாய் நீயே எழுக!
ட்டும் பொருள் எல்லாம்
ருவிலா அருளாளன் தயவேயென
ரார்க்கு உதவ ஓடுக!
ல்லோரும் ஓர் குலம் என்றே
ற்றமிகு அன்பெனும்
யாம்”(I AM) சங்க
ருமையில் நீ
ங்குக! ஓங்குக! ஓங்குக!
டதம் அன்பேயாதலால் நீ “இரு தயவாய்
தே மரணப்பிணி தீர்க்கும் மாமருந்து

நாயகனின் பேருபதேசம் 4

ஓகஸ்ட் 6, 2008
என் அன்பு மகனே(ளே)!
தலையுச்சியில் பதிந்து
உன் விழிகளில் அருள் விளக்கும்
அறிவாய்ச் சிவந்து
இருதயத்தில் பதிந்து
உன் கரங்களில் கருணைக் கனியாம்
அன்பாய்ச் சிவந்து
முதுகடியில் பதிந்து
உன் பாதங்களில் தயவு இயங்கும்
ஆற்றலாய்ச் சிவந்து
வாடாத செஞ்சுடர்ப்பூவாம்
பராபர வள்ளல் நான்
உன் மெய்க்குள் உயிராய்
வேறற ஒன்றி
இகத்தில் புகுந் தருணம்
இதுவே!

ஐயனே! வள்ளல் உமக்கு
எப்படி ஆற்றுவேன் கைம்மாறு?

என் அன்பு மகனே(ளே)!
எல்லாந் தழுவிய
முழுமையாம் அன்பெனும்
ஒருமையில்
எப்போதும் ஊன்றி நின்று
இரு நீ தயவாய்!
இதுவே
நீ எனக்கு
ஆற்றும் கைம்மாறு!
அன்பறிவாற்றலாம் உயிராய்
உன் மெய்க்குள்
வாடாது பூத்திருக்கும்
என்னை விளங்கி நேசித்து
என் போல் ஆகவும் இயங்கவும்
தயவொன்றே மெய் வழி!
ஐயமின்றி இதை அறி!
தயவெனும்
மெய்வழிச் சாலையாய்
பராபர நான்
இகத்தில் நீளும்
உண்மை தெளி!
பிறப்பிறப்புப் பொய்ம்மாயச் சுழல் தாண்டி
பேரின்பப் பெருவாழ்வில்
ஆனந்தமாய் ஆடிக் களி!
என் அன்பு மகனே(ளே)!
என்றும் நீ
இரு தயவாய்!
உன் செவிப்பறைகள் அதிர
உன் செவிகளில்
இனி எப்போதும்
தப்பாமல் ஒலிக்கும்
“இரு தயவாய்” என்ற
இருதய நாதம்,
மாயை நள்ளிரவைக் கீறும்
பரவிந்துப் பட்டப்பகல் வெளிச்சமாய்!

கவனம்!
அதி கவனம்!
அன்பெனும் தயவே பேரின்பப் பெருவாழ்வு
அவ்வொருமை நழுவிய கணமே
கடுந்துன்பச் சாக்காடு!
எனவே கவனமுடன்
எப்போதும் நீ
“இரு தயவாய்”