அவ்வூரும் இவ்வூரும்
எவ்வூரும் கடந்தே
உவ்வூராம் உன் கடவூரில்
உய்ந்தேனே தோழா!
இனி உனையன்றி எனக்கு
வேறெந்தக் கடவூரும்
இல்லையடா தோழா!
உச்சி தொட்டுப் பாதம் வரை
உன் கடவூரில் நான் உய்ந்தேன!
நானன்றி உனக்கு
வேறு உயிரில்லை என்பேன்!
உண்மையடா தோழா!
நானும் நீயும் வேறின்றி
ஒன்றானதாலே
பெருவாழ்வு உனக்காகும்
உணர்ந்திடடா தோழா!
அவ்வாழ்வை யாவர்க்கும்
அள்ளியள்ளித் தரவே
பெருந்தயவாய்த் தரணியில்
நீ இருந்திடடா தோழா!
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்