2. அருட்தந்தை

தாய்மையுள் தந்தையும் தந்தையுள் தாய்மையும்
சேர்ந்திருக்கும் வாய்மையை சிந்தையுள் என்றும்கொள்!
மாய்ந்திடும்மா மாயையும் நின்னுடம்பும் பொன்போல்ஆம்!
சார்ந்திருக்கும் ஒருமையே மெய்யென்னும் மாயாநிலை!

சிவத்துள் சத்தி அடக்கம்! அருட்சத்தி
சிவத்தின் ஆக்கம்! சத்தியே நின்வடிவம்!
சிவம்நின் மூலம்! சத்திசிவ ஐக்கியமறி
தவத்தில் மூல கணபதியாம் குருமையம்!

சுத்த சிவத்தை பூமித்தாய் தன்னுள்
சத்தாய்த் தவத்தே தேடித்தான் கண்டாள்!
சித்தந் தெளிந்தே அருள்விளங்கி நின்றாள்!
புத்தம் புதிதாம் யுகமாற்றங் கொண்டாள்!

வெட்டவெளி சிவத்துள் கொட்டும் அருட்சத்தி!
உள்ளகத்தே தவத்துள் கிட்டும் இவர்உண்மை!
சத்தியைப் பற்றியே எட்டு நீசிவத்தை!
மண்ணிலே உற்றுநீ நாட்டு நாயகத்தை!

பின்னூட்டமொன்றை இடுக