6(ஆறு). மறு பிறப்பு

காபாக் கல் போல் நிற்கும்
உம் தலைக்(தல ‘ஐ’ இருக்கும் இடமாம் தலைமை) கபால மெக்காவில்
சாகாக் கல் ‘ஐ’ கண்டே
அகத் தவத்தில் நிற்பீர்!
நபி வள்ளல் அருளுவான்
சாகாக் கலை நெறி!
அன்பே சிவமாம் அல்லாவுள்
மெய்யுருகி அருளொளியாக
அருளொளியும் உருகி
வெறு வெளியாக
ஒளிர்ந்துப் பின்
ஒளிவீர்!
இருதய ஹீரா குகைக்குள் பொழியும்
நாயக நபி குரு மொழிப்
பாகை உண்டு
வரையவொணா
முகம் அதை(முகம்மதை-MOHAMMADH)
உமைக் கரைய வைக்கும்
அகம் அதில்(அகம்மதில்-AHAMMADH)
காண்பீரே!
உம் தலை மேல்
மகுட தீபராய்(நிராதார அருட்ஜோதியராய்)
விளங்கும் நபி நானக்
உமக்கிரங்கி
உம் மெய்யுள்(ஆறாதாரத்துள்) இறங்கி
சாகாக் கலை நெறி உமக்கு போதித்து
கிறிஸ்துவாய் உம்மைப் பரிமாற்றுவாரே!
உம் காலடியில் அன்னை பூமியைப் புரட்டி
சுடச்சுடச் சுடரும் நவயுக உதயம் தரும்
ஞான புத்த வள்ளலவரின்
அவதார தீர்த்தங்கரர் நீரேயென
உமக்குள் உறுதியாய் முழங்கும்
மசியாச் சொல் கேட்பீரே!
ஆணவம் நசிய
ஆண்டவருள்(ஆண் தவர்)
மறுபிறப்பெடுத்து
ஆரவார மனச்சூடு ஆறுவீரே!
ஆண்டவரவரின் அருட்கரமாய்
மேலெழுவீரே!
ஆணவ நாகத்தின் நச்சுப் பற்கள்
ஆண்டவக் கரத்தின் அமுத விரல்களாய்
அதிசயமாய்ப் பரிமாறும்
மறு பிறப்பை
உமக்கு அருளினாரே
நாயக நபிகளின்றே!
இருள் சேர் இருவினையை
“ஜெஹாத்” செய்யும்
ஞான வாளாய்
அப்பரம தயாள
நிர்மல நிராமய வள்ளல்
உம்மில் எழுந்தாரே இன்றே!
மெய்யே தான் உரைக்கின்றேன்!
நாயகன் வாய் மெய்யே(வாய்மையே) உரைக்கின்றேன்!
அருளாளன் அல்லா மீதாணை!
பரப்பிரம்ம பரமபிதா மீதாணை!
அருளம்மை புனித ‘ரு’ மீதாணை!
பரிசுத்த ஆவியாம் ஆதிசக்தி மீதாணை!
குருக்கொழுந்தாம் கிறிஸ்து நபிகளின் மீதாணை!
மெய்யுரைத்தேன் நானே!
கருநாகக் கயவனென்
நல்ல பாம்பாம் மறுபிறப்பும் இன்றே!
மெய்யுரைத்தேன் நானே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: