3. குருமந்திர அகதீட்சை

பொய்ம்மொழி மோகம்போய் மெய்ம்மொழி தாகங்கொள
மெய்க்குரு தொண்டைக்குழி உய்ந்தார்! யோகத்தேறும்
மந்திர அகதீட்சை தந்தார்! வேகங்கூட
யந்திர எம்முடம்பும் பொன்மெய் யாய்மாறுதே!

சிரமாய் நம்தோள்மேல் பொருந்தும் குருபரன்
வரமாய்த் தொண்டையில் முழங்கும் மந்திரம்!
தரத்தில் செம்மையுறும் உடம்புமெய் யாககுரு
தருமக தீட்சையால் மரணத்தை யாம்வென்றோம்!

ஓமென முழங்கியே நபிகள் நாயகம் அல்லாவின் அருவ நிலை உணர்த்தினார்!
அஹமென முழங்கியே புனித ‘ரு’வென்னும் அருளம்மைத் திரு உருவைக் காட்டினார்!
தம்மென முழங்கியே அம்மையப்பன் ஒருமையாம் சற்குரு மெய்ஞ்ஞானம் ஊட்டினார்!
தம் பேரில் மும்மந்திரங்கள் கொண்டார் திருவடிகள் சரணம்!

ஓமென்னும் பரநாத மூல மந்திரம்!
அஹமென்னும் பரவிந்துத் திரு மந்திரம்!
தம்மென்னும்(Dham) பரம்பரக் குரு மந்திரம்!
தம் பேரில் கொண்டாரே முக(ம்)மது நபி சரணம்!
(MOHAMMADH – The phoenetic spelling of the Prophet’s Name contains the Mantras OM, AHAM, DHAM!)

எழுதவொணா முக(ம்)மது நபிகுரு நாயகம்
எழுந்தார் என்னுள்ளே மும்மந்திரம் முழங்கி!
சிரமின்றிக் கிடந்த முண்டமென் தோள்மேல்
சிரசாகித் தாம்அமர தொண்டைக்குள் தேனாறே!

இஸ்லாம் என்னும் சமரச நாத
இசையிலே வன்மன மதவெறி போக
முழங்கினார் நபிகுரு மந்திரம் மூன்று!
மழையெனப் பெய்யுதே நாயகன் பேரருள்!

மும்மந்திரம் முழங்கும் தந்திரர் முகமது
மெய்யந்திரம் தழைக்க வந்தநம் நபிகுரு!
அகமது ஓமது தம்மது தம்பேரில்
பகர்ந்தவர் தேன்மொழி எம்மது என்றுமே!

“இஸ்”என் றெழுமே குண்டலி நாகம்!
எல்”லாம்” ஒன்றும் மெய்வழி ஏகும்
பொல்லாங் கொழியும் சமரச மார்க்கம்
அல்லா அருளாம் குருநபி ஏகம்!

கல்லாய் இருந்த பூஜ்ஜியம் நீயே
அல்லா அருளால் பூரணம் ஆனாய்!
நில்லா உடம்பை மாயா மெய்யாய்
நல்லார் நபியார் மந்திரம் மாற்றுமே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: