ஜனவரி 2011 க்கான தொகுப்பு

மாயா நிலையம் – 5

ஜனவரி 31, 2011

மாயர்களின் எண்கள்

படம் = 1
படம் = 2
படம் = 3
படம் = 4
படம் = 5
படம் = 6
படம் = 7
படம் = 8
படம் = 9
படம் = 10
படம் = 11
படம் = 12
படம் = 13

படம்

அறிவன் என்பவர் தன் பிரபஞ்சம்-தமிழும்,தமிழரும் என்ற இந்த வலைப்பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

“கி.மு – 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.”

நானும் அகத்தவத்தில் தமிழ்ச் சித்தர்களுக்கும் மாயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உணர்கிறேன்.

“மாயா நாகரிகம்” பற்றி விக்கிப்பீடியா பதிவு

திண்ணையில் காஞ்சனா தாமோதரன் அவர்களின்“மெக்ஸிக்க மணித்துளிகள்” என்ற பதிவு

முத்தமிழ் கூகுள் குழுமத்தில் வி. சு. அவர்கள் தன் பதிவில் இவ்வாறு கூறுகிறார்:

“மாயன் என்றால் இயல்பாக, “மாயமாக மறைந்தவன்” (?!) என்றுதானே பொருள் வருகிறது. அதற்கேற்றாற் போல இந்த இனமும் நோய், போர், பஞ்சம் போன்றவற்றால் அழியவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் இந்த இனமே இருந்த இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு நகர்ந்து சென்றதாகக் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு மாயமாக மறைந்த பின் வேறு யாரோ இவர்களுக்கு வைத்த பெயர் போலத் தெரிகிறது. இல்லையா ? “

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 20

ஜனவரி 31, 2011

முதுகுத் தண்டில் கழியுங் காலவெளியே
அமுதச் சத்திப் பொருள்

ஞால திடங்கள் யாவும் கருணையாய்
வாழும் சிவத்தின் தடங்கள்

செங்குத்தாய்க் காலவெளி ஒடுங்கும் முதுகுத்

தண்டில்தாய்ச் சத்திதரும் செம்பொருள்

In Vertical Time when past, present and future converge into the Eternal Now, Space Collapses releasing the Primal Energy which in turn gives rise to the Primordial Matter, the Substance of Love

செம்பொருள் அன்பே சத்தியாகிக் காலவெளி
எங்கணும் விரிந்த சிவம்

பரம்பொருள் ஒன்றே சத்தியும் அதுபடைக்கும்
பருவெளி காலம் யாவும்

இருதயப் பழஞ்சுற்றி ஒடுங்கும் காலவெளி
பிழியுதே சத்திச்செம் பொருள்

சத்திச் செம்பொருள் பிழிவை நின்மனம்
உண்ண மெய்யுளே உயிர்மை

இங்குமங்கும் அலையாமல் ஊங்கே மெய்யுள்
செங்குத்தாய் ஓங்குவதை உணர்

செங்குத்தாய் ஓங்குவதை உணர்ந்தே மெய்யுள்
பொங்குந்தேன் உண்டிங்கே இரு

சும்மா வந்துபோகும் மூச்சைக் கவனமாய்ச்
சும்மா குந்தியேநீ வாசி

வள்ளலார் அருள் வாக்கு

ஜனவரி 31, 2011

வள்ளலே! அன்பின் அடுத்த படி யாதோ?

149

உயிர்படும் பாடு கண்டுங் கேட்டுந்
துயருறுத் துடிக்குங் கண்மை

150

வள்ளலே! கண்மை என்பதன் பொருள் யாதோ?

உயிர்படும் வேதனை உணர்ந்துக் கண்ணீர்
உகுத்திடுங் காரணங் கண்மை

கண்ணீர் உகுத்து வேதனை தீர்க்கும்
உண்ணீர் உதிர்க்குங் கண்மை
(உண்ணீர் = உள்+நீர் = அமுதம்)

கண்மை காட்டும் கருணையாம் ஆற்றல்
உண்ணீர் நாட்டும் அருள்

உண்ணீர் நாட்டும் அருளால் விளக்கம்
உற்றே தயவின் ஓட்டம்

தயவின் ஓட்டங் கருணை ஆற்றல்
அருளின் விளக்கம் அன்பு

மன்னித்தே பின்கண்மை கண்டால் அன்பின்
மொத்தம்யாம் நின்மெய்க்கண் உயிர்ப்போம்

வள்ளலே! கண்மை சொல்லி அதன் மெய்ப்பொருள் உணர்த்தி அன்பின் விசுவரூபத்தையே கண்மைக்குள் நீர் அடக்கிய விதம் அருமை! உமக்கு என் நெஞ்சங் கனிந்தக் கோடனு கோடி நன்றிகள்!

கண்மை தெறிக்க இருதயச் செம்மை
உண்மை உரைத்தேன் மகவே

மாயா நிலையம் – 4

ஜனவரி 30, 2011

அடுத்த ஏழு படிமங்கள்
நிராதார ஏழ்நிலை
மெய்க்குள் இறங்குவதைக் குறிக்கும்

14வது படிமம்
ஈஷ்(IX) – பரஞான போதம்
படம்
நிராதார முதல் நிலை தலையுச்சியாம் சஹஸ்ராரத்தில் ஒன்றும்

15வது படிமம்
மென்(MEN) – தூய நோக்கம்
படம்
நிராதார 2ம் நிலை நெற்றி நடு ஆக்கினையில் ஒன்றும்

16வது படிமம்
கீப்(CIB) – குரு மந்திர அக தீட்சை
படம்
நிராதார 3ம் நிலை தொண்டையாம் விசுத்தியில் ஒன்றும்

17வது படிமம்
கபன்(CABAN) – இருதயத் திரு பூமி
படம்
நிராதார 4ம் நிலை நடுமார்பாம் அனாகதத்தில் ஒன்றும்

18வது படிமம்
எட்ஜ்னப்(ETZNAB) – சத்திய தரிசனம்
படம்
நிராதார 5ம் நிலை நாபியாம் மணிபூரகத்தில் ஒன்றும்

19வது படிமம்
கவாக்(CAUAC) – அதிசயப் பரிமாற்றம்
படம்
நிராதார 6ம் நிலை நாபியடி சுவாதிட்டானத்தில் ஒன்றும்

20வது படிமம்
அஹாவ்(AHAU) – ஜோதி ஸ்வரூபம்
படம்
நிராதார 7ம் நிலை முதுகடி மூலாதாரத்தில் ஒன்றும்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 19

ஜனவரி 30, 2011

காலவெளி முதுகின்பின் சுழியக் கண்டத்தில்
சேருஞ்சத்தி தலைக்கூட்டும் செம்பொருள்

When Time-Space Collapses during Meditation around the Vertical Column of Spinal Cord, Pure Energy is released in the Throat Region(Visuddhi Chakra) which condense into Pure Matter or the Ambrosia, the Elixir of Life in the Brain Center. When this Elixir descends into the Body, You achieve Immortal Life.

Heart-Space-வெளி
Mind-Time-காலம்
Breath-Energy-சத்தி
Body-Matter-(செம்)பொருள்

STEM – Space, Time, Energy, Matter

தியானத்தில் என் அனுபவம், ஆங்கில விளக்கத்தின் ரத்தினச் சுருக்கமாகத் தமிழ்க் கரும்பா! மனிதம் விரைவில் அடையப் போகும் மாயா நிலை இது!

கால வெளியைச் சுழிய வைப்பதும்
சத்தியாக்கி அதிலிருந்து செம்பொருள் வழிய வைப்பதும்
உம் இருதய நடு அன்பே!
நீவிர் மன இதத்தில் பழுக்கும் ஓர் கணத்தில்
உம்மில் இது நடக்கும் நிச்சயம்!
செம்பொருள் வழிந்த பின் மரணம் மடியும்!
மனிதம் அமர நிலை எய்தும்!

வள்ளலார் அருள் வாக்கு

ஜனவரி 30, 2011

வள்ளலே! அன்பின் அடிப்படை முதற்படி யாதோ?

147

பாவ பயம்நீக்கும் அபயம் அன்பாம்
யாம்மன் னிப்பேகாண் முதலில்

வள்ளலே! பாவங்கள் தண்டிக்கப் பட வேண்டாமா?

148

தண்டிக்குங் கருமவிதிக் கண்டிப்பைத் தாண்டியே
மன்னிக்குந் தருமநெறி அன்பு

மன்னிக்கா துருமுங் கருமக் கணக்கைத்
துண்டிக்குந் தருமம் அன்பு

அன்பாம்யாம் யாவுமாகத் தன்னைத்தான் தண்டிக்கும்
வன்பையே செய்வோமா சொல்

அன்பை மறந்த அவதி நீக்கி
எல்லாந் திருத்தும் மன்னிப்பு

மன்னிக்க மனமின்றி உருமும் வரைநீ
தண்டிக்குங் கருமத்தின் கைதி

மன்னித்துத் தயவாய் இருந்திட உன்னில்
தித்திக்குங் கருணை யாம்

அருளாய் நெஞ்சில் சுரக்கும் பாலுண்ண
மருளாம் வஞ்சம் மற(று)க்கும்

மருளாம் வஞ்சந் தெளிய நெஞ்சில்
அருளாம் பாலது சுரக்கும்

மாயா நிலையம் – 3

ஜனவரி 29, 2011

10வது படிமம்
ஆக்(OC) – நாயகம்

படம்
தொண்டையில் விசுத்தியில்
முழங்கும் நாயகத்தின் பேருபதேசம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
இருள் சேர் இருவினை எச்சங்கள் யாவுந் தீர்ந்து
இறைமைக்குள் உம் எழுச்சி!

11வது படிமம்
ஷ்வென்(CHUEN) – இறை மகவு

படம்
நெற்றி நடுவில் ஆக்கினையில்
தெய்வ மகவின் ஜனனம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
மாயைத் திரைகளின் எச்சங்கள் யாவுந் தீய்ந்து
இறை மகவாய் உம் விளக்கம்!

12வது படிமம்
எப்(EB) – அமர மனித எழுச்சி

படம்
தலையுச்சியில் சஹஸ்ராரத்தில்
எழும் அமர மனித எழுச்சி!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
அஞ்ஞான உறக்கத்திலிருந்து உம் விழிப்பு!

13வது படிமம்
பென்(BEN) – நிராதார மேம்பாலம்

படம்
தலையுச்சி தாண்டி
நிராதார ஏழ்நிலை
ஆறாதாரத்தில் இறங்கும்
மெய்வழி!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
கடவுளின் தூய ஊடகமாய் உம் பரிமாற்றம்!

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 18

ஜனவரி 29, 2011

பொய்ம்மனச் செருகல்கள் யாவும் பிடுங்கும்
மெய்க்குரு ஒருவன்தான் “நான்”

“நான்”எனும் தன்ஞான நியதியை விட்டால்
ஆணவ அஞ்ஞான சகதி

அதுஇது அடைகள் யாவும் விட்டு
உதுநடு அடைந்தால் “நான்”

அமைப்புகள் யாவுங் கடந்த ஆதிமுதல்
அடங்கிய வீடே உடம்பு

மதகுருமார் பின்னும் மாயவலை வெட்டி
இருதயவாய் உய்தல் இலக்கு

படத்தில் தொங்கும் தெய்வம் விட்டுன்
உடம்புள் தெய்வம் பிடி

உடம்பாய் உயிர்த்திருக்குந் தெய்வம் விடுத்து
திடக்கல் சிலைக்கெதற்குப் பூசை

உருவத்தில் அருவம் வாழும் பெருமையை
உடம்புக்குள் உணர்த்தும் உயிர்மை

கல்நிறுவன வியாபாரம் தழைக்க மெய்ம்மறைக்குஞ்
சொல்நிறுவனம் விரிப்பாரை விட்டொழி

வள்ளலார் அருள் வாக்கு

ஜனவரி 29, 2011

138

இவ்விடம் நின்மெய் யகத்தே இக்கணம்
நின்றுள அன்பே யாம்

நின் மெய்யுடம்பாகிய இவ்விடத்தில் இருதயத்தே இக்கணத்திலும் எழுந்தருளியிருக்கும் அன்பே சிவம் யாமே!

139

உள்ளதை உள்ளபடி உணர்த்த உள்ளத்தே
உள்ளோம் வள்ளலெமை உள்

உள்ள ஒவ்வொன்றின் உண்மையை உள்ள படியே ஒளிவின்றி உணர்த்த நின் உள்ளமாம் இருதயத்தே யாம் உள்ளோம்! ஒளிவிலாது ஒளிரும் திருஅருட்பிரகாச வள்ளலாராகிய எம்மை உள்ளுவாயாக! நினைந்து உணர்வாயாக!

140

கள்ள மனமதங்கள் அனந்தமும் விட்டுவிட
வெள்ளை உளமுணர்த்தும் உள்மை(உண்மை)

141

வெள்ளங்கி வள்ளல்யாம் உள்ளத்தே உள்ளோம்
மெய்யெங்கும் எம்உண்மை உயிர்க்க

142

கண்டங் கீழே நெஞ்சகத் திருந்த
கண்ட மாய்விரி வோம்

தொண்டைக்குக் கீழே நெஞ்சகத்தில் இருந்து அகண்டமாய் விரிவோம் யாம்!(விரி ஓம் யாம்!)

143

எவ்வுயிர்க்கும் இர(ற)ங்கும் செவ்வியதாம் எளிமை
நெஞ்சிருக்கும் இறைமை யாம்

144

உயிரிரக்கம் மெய்யிறக்கும் இறவாப் பெருவரம்
அகத்திருக்கும் அன்புணர்வே யாம்

145

அகத்திருந்தே அனகமாய் விரிந்திருக்கும் அன்பெமை
அகம்படியா தலைமனம் உணருமோ
(அனகம் = பிரபஞ்ச முழுமை)

146

அகம்படியான் தலைவனை அன்பெனுமோர் முதல்வனை
அகம்படியான் உணரா தழிந்தான்

முதல் வரி அகம்படியான் = ஆண்டவக் கணவன், அதுவே மருவி “ஆம்படியான்” ஆனது, அகம்படி “யான்”(நான்) தலைவன் ‘ஐ'(I) என்றும் பிரிக்கலாம், 2ம் வரி அகம்படியான் = அகமாம் நெஞ்சில் இருதயத்தில் படியாதவன்

மாயா நிலையம் – 2

ஜனவரி 28, 2011

முதல் படிமம்

ஈமீஷ்(IMIX) – அருட்தாய்

படம்
இந்தப் படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
உம் இருண்ட பக்கம்
வன்மனத்தால் திரிக்கப்பட்ட தாயாம் அருட்பொருளே
என்ற ஞாபகம் உம்முள் எழுந்து
மன இதத்தில்
நீர் மனந்திரும்ப உதவும்!

மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது!

2வது படிமம்
ஈக்(IK)- அருட்தந்தை

படம்
இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
அன்பாம் தந்தை சிவா அவரே
உம்முள் வாசி என்னும் உயிர் மூச்சாய் ஓடும்
இரகசியம் பகிரங்கமாகும்!

பரலோக வாசி அவரே
இகலோக வாசி நீர்
என்றே அறிந்தே
இரும் ஐயா நீரே!

தந்தை அவரை ஆழமாக
மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே
உள் வாங்கி
இலங்கைப் பிரச்சினை தீர
பரலோக வாசி அவரை
மூச்சை வெளிவிட்டுக் கொண்டே
வெளிவிடுங்கள்!
அதிசயத் தீர்வு உருவாகும்!
முதல் படிமத்தில்
உம் இருண்ட பக்கத்தை
அருட்தாயிடம் ஒப்புவித்தீர்!
2வது படிமத்தில்
உம் ஒளி முகத்தை
அருட்தந்தை உமக்கு
தயவாய் அளிப்பார்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்!

3வது படிமம்
அக்பல்(AKBAL) – சற்குரு

படம்
இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
உமது மெய்யுடம்பாம் குகையில்
தாயுந் தந்தையும்
சிவசத்தி ஒருமையாய் உறையும்
குருநடு ஞானம் உம்முள் ஓங்கும்!

முதல் படிமம் இடகலையாம் வாலை நாயகி
2வது படிமம் பிங்கலையாம் வாலறிவு நாயகன்
3வது படிமம் சுழிமுனையாம் குருநபி நடு நாயகம்
இம்மூவரின் ஒருமையே உம் ஆதி மூலம்!

சிவசத்தி ஒருமையாம்
நடு நிலை விட்டு நழுவுதாலேயே
அருட்தாயின் திரிபாக ராஜசமும்
அருட்தந்தையின் திரிபாக தாமசமும்
(ராஜசமும் தாமசமும் அசுத்த மாயை)
சற்குருவின் திரிபாக சத்துவமும்(சுத்த மாயை)
ஆகிய திரிகுண மாயைப் படலம் உருவாகிறது!
முதல் மூன்று படிமங்களைத் தியானிப்பதன் மூலம்
அசுத்த சுத்த மாயைப் படலம் கரைந்து
திரிபுகள் யாவும் நீங்கி
சச்சிதானந்த மாயா நிலையில்
நீர் நிலைபெற முடியும்!

இம்மூன்று படிமங்களையும் சுட்டும் மகாமந்திரம்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
வழி = குரு
சத்தியம் = தாய்
ஜீவன் = தந்தை
நானே = திரித்துவ ஒருமை
இருக்கிறேன் = இக உலகில் அவ்வொருமையின் உறுதியான வெளிப்பாடு

4வது படிமம்
கன்(KAN) – குரு வித்து

படம்

சச்சிதானந்த அருவம்
இச்சக திடமாய் உருவாக
வழி வகுக்கும் வித்தான
மூலாதாரம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
திரிகுண மாயையின் மாயாஜால
மரண பயத்திலிருந்து மீண்டு
சச்சிதானந்த திடமாய்
இச்சகத்தில்
மூல கணபதி குருவாய்
நீர் விளங்கலாம்!

முதல் மூன்று படிமங்களும்
ஆறாதாரத்துக்கு ஆதி மூலமான
நிராதாரத்தையும்
நான்காவது படிமம்
ஆறாதாரத் தொடக்கத்தையும்
குறிக்கின்றன.
அருவம் உருவமாகும்
அற்புதத் தொடக்கம்!

தியான இடம் – முதுகடி – மூலாதாரச் சக்கரம்

5வது படிமம்
சிக்சன்(CHICCHAN) – குண்டலி நாகம்

படம்
குரு வித்திலிருந்து
நாபியடியில்
சுவாதிட்டான சக்கரத்தில்
எழும் ஜீவ விருட்சம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
கட்டுக்கடங்கா அவ காம உணர்விலிருந்து மீண்டு
மட்டுப்படாத சிவ காதலை உணரலாம்!

இக குண்டலி ஏற்றத் தொடக்கம்!
இல்லறத்தில் அர்த்தமுள்ள காமத்தால்
உண்டாகும் ஞாலக் குடும்பம்!

6வது படிமம்
கீமி(CIMI) – மறு பிறப்பு

படம்
ஜீவ விருட்சமாய் எழும்
குண்டலி நாகம்
நாபியில் மணிபூரக சக்கரத்தில்
ஆணவத்தைக் கொத்தி நசிக்க
ஆண்டவத்துள் மறு பிறப்பு!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
ஆணவ அனந்த முகங்கள் யாவும்
ஒவ்வொன்றாய் உரியும்!
ஆண்டவ முகம் பிறக்கும்!
பிறவிச் சுழலிலிருந்து
மீட்கும் மறு பிறப்பு
இப்போதே இங்கேயே
எல்லார்க்கும்!

7வது படிமம்
மணீக்(MANIK) – அருட்கரம்

படம்

மார்பின் கீழ் உதரவிதானத்தில்
சூரிய சக்கரத்தில்(Solar Plexus)
எழும் ஆண்டவத்தின் அருட்கரம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
மனக் குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி
மன இதமாம் இருதய நேர்மையை நோக்கித்
தெளிவுடன் உம் ஏற்றம்!

8வது படிமம்
லமட்(LAMAT) – அருட்பெருஞ்ஜோதி

படம்

நடு மார்பில் அனாகதத்தில்
அன்பெனும் இருதய நேர்மையாம்
மன இதப் பேரொளி உதயம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
வன்பின் எச்சங்கள் தீர்ந்து
அன்பில் இருதயங் கனியும்!

9வது படிமம்
முலூக்(MULUK) – தனிப்பெருங்கருணை

படம்

தொண்டையின் கீழ் அமுத கலசத்தில்
பெருக்கெடுத்தோடும் பேரருள் வெள்ளம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
பேத பாவங்களின் எச்சங்கள் நீங்கி
ஆன்ம நேய ஒருமை விளங்கும்!