சூஃபிப் பாடல்(Sufi Song) – 2

அல்லாஹ் என்றதோர் நாமம்
எல்லா நோயுமே தீர்க்கும்
நல்லான் நபியவன் ரூபம்
நெஞ்சாங் கண்தனில் தோன்றும்

அல்லாஹ் என்றுமே அன்பேதான்
நல்லான் நெஞ்சுளே மின்னேதான்
குர்ஆன் வல்லான் சொல்லேதான்
எல்லாம் அல்லாஹ்வின் பிள்ளைதாம்
(மின் = ஒளி)

இஸ்லாம் என்றால் சமரசமே
எல்லாம் இங்கே சரிசமமே
பாழும் பேதங்கள் சரிந்தனவே
யாம்ஓர் குலந்தான் புரிந்ததுவே

யாதுமே நம்மூர் பூமியிலே
யாருமே நம்மாள் தானிங்கே
அல்லாஹ் நேசமே ஆயுதமாய்
பொல்லாப் போர்களை வென்றோமே
(நம்மாள் = நம் நெருங்கிய உறவு)

ஏக தேவன் அருளாலே
பாப ரோக மருளாதி
நாச மாகத் தெருளோடே
வாழச் செய்தார் குருநபியே
(பாப ரோக = பாவம் மற்றும் நோய், மருள் = மயக்கம், தெருள் = தெளிவு)

மெய்யாந் தேகத் துள்ளேயே
உள்ளான் தூய நெஞ்சுள்ளே
அல்லாஹ் ஏகன்(நேசன்) என்றுண்மை
நல்லான் பீரே ஊட்டினாரே
(பீர் = நபிகள்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: