நிலை – 2

வலவன் ஆரோ உலகில் ஒருவனே
நலவன் பேரா முதல்வன்
(வலவன் = வல்லவன், நலவன் = நல்லவன்)

மனிதன் ஆரோ வலவன் தூதன்
மறந்(த)தால் தீரா வலி

தவமது யாதோ வலவன் நலவன்
சிவமதில் தோய்ந்தே வாழல்

சிவமதில் தோய்ந்தே வாழக் கரும
அவமெலாந் தேய்ந்தே தீரும்

வலவன் அன்பே யாவுஞ் செய்வான்
வழக்க வன்பே நோவு

நோவுஞ் சாவும் ஈட்டிக் கொண்டாய்
நோற்கும் நேசம் இன்றி

நேசம் இன்றேல் வாழ்வு இல்லை
ஊச லாடும் பிழைப்பு

நேசம் பாயக் காலி யாகு
நாச மாகும் பாவம்

காலி யாகக் காவி வேண்டாம்
வாழ்வை யாக மாக்கு

யாவும் வலவன் நலவன் தாளில்
சேர்த்து நீகாலி யாகு

நாம் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும்
நம்மால் இயன்றது
நம் மொத்தத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
தான் செய்ய வேண்டியதை இறைவன் நன்கே அறிவான்.
நாம் எதையும் அவனுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எப்படி சஹஜமாக இதைப் பழகுவது? அது எல்லோராலும் சாத்தியமா?
நிச்சயம் சாத்தியமே!
வாழ்வே நோன்பாக வேண்டும்? எப்படி?
மூச்சை வெளி விடும் போது வலவனுக்கு நலவனுக்கு நம் மொத்தத்தையும் கொடுத்து விட வேண்டும், அதாவது நாம் முற்றிலும் இறந்து விட வேண்டும், அதாவது வலவனுக்குள் நலவனுக்குள் கடந்து விட வேண்டும். அவ்வாறு பாவிக்க வேண்டும். யத் பாவம் தத் பவதி, எதை நீ பாவிக்கிறாயோ, அதாகவே நீ ஆகி விடுகிறாய், இங்கேயே இப்போதே இறைமையுள் நாம் இறப்பதாக பாவிக்க வேண்டும்

“லா இலாஹா இல்லல்லாஹ்” அல்லாஹ்வுள் நாம் இறக்கிறோம்

மூச்சை உள்ளிழுக்கும் போது வலவன் நலவன் தன் மொத்த நலங்களையும் நமக்குத் தந்தான் என்று பாவித்து அவனுக்கு நன்றி சொல்லி அவன் தூதனாய் நாம் பிறப்பதாக பாவிக்க வேண்டும்

“மொஹம்மத்துர் ரசூலல்லாஹ்” நபிகளுள் நாம் பிறக்கிறோம்

ஒவ்வொரு மூச்சிலும் இந்த நோன்பை நாம் பழக முடியும், நாம் எதைச் செய்யும் போதும், ஒரு background awareness ஆக இந்த உணர்வு நாம் பழகப் பழகக் கனியும்.

வலவன் நலவன் போல் நாமும் யாவுக்கும் அன்பு செயல் வேண்டும், தயவாய் இருக்க வேண்டும், உயிர்களின் துயர் துடைக்க நம்மால் இயன்றதை நாம் செய்ய உணர்வு பூர்வமாக விழைய, வலவனே நலவனே நம்மூடே செயல்படுவான்.

1. உற்ற நோய் நோன்றல்
2. உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்குரு

1. வந்துற்ற துன்பத்தை எதற்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? அது நம் செய்வினை, ஆம் இந்த துன்பத்தை நானே வலிந்து தேடிக் கொண்டேன், வெளி மூச்சில் அதை அர்ப்பணிக்க வேண்டும், உள்மூச்சில் இறை மன்னிப்பு நமக்கு வழங்கப் பட்டு விட்டது

2. இனியும் எனக்கோ பிற யாவுக்கோ ஊறு விளைவிக்கக் கூடிய காரியங்களை(தன்வினை, பிறவினை) செய்யாமலிருக்க வேண்டும். அதற்கான உறுதியை இறைவனே நமக்குத் தருவான், நமக்குள் பூரண விழைவு, வாஞ்சை இருக்க வேண்டும்.

இதுவே என் நிலைப்பாடு, இதையே நான் பயின்று வருகிறேன். உயிர் மூச்சு நமக்கு இறைமையின் கொடை, அது அதிசயம், அற்புதம், அதுவே தியானமானால் சஹஜ யோகம். இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.

வலவன் நலவன் ஒருவன் காரணமாகவே யாதொன்றும் நிகழ்கிறது, அவனன்றி ஓரணுவும் அசையாது, அவனின்றி எந்தவொரு நிலையும் இல்லை, அவன் நிலை விட்டால் நமக்கு எஞ்சுவது வெறும் பாடு.

ஏகனை உணர முனையாத ஆத்திகத்தாலும், ஏகனே இல்லை என்னும் நாத்திகத்தாலும் எப்பயனுமில்லை. ஆன்மீகம் என்ற பெயரில் உலா வரும் ஆடம்பரங்களாலும் ஆரவாரங்களாலும் எப்பயனுமில்லை. நாகம் ஓலமிடும் வார்த்தைகளாலும் எப்பயனுமில்லை.

எது அத்தியாவசியமானதோ அதை நாம் நாட வேண்டும், அந்த அத்தியாவசியத்தை நாம் நாட ஆதி மூலத்தை அது காட்டி விடும்.

மூச்சு வெறும் வார்த்தை இல்லை, அது ஏகனின் உணர்வை நமக்குத் தருங் கொடை, அது பிராண வாயு எனப்படும் வெறுங் காற்று மட்டுமல்ல, அது ஏகனாம் அன்பின் இரசவாதம், தின்பது, புணர்வது, உறங்குவது, புறப் புலன் நாட்டமே கதியென்று இருக்கும் வரைக்கும் மூச்சின் அருமை நமக்கு எப்படித் தெரியும்? மூச்சு சரியாக இழுத்து விடுகிறோமா என்பது நமக்குத் தெரியுமா? அது எப்படி மேலோட்டமாக இருக்கிறது, மன இறுக்கத்திற்கு மூல காரணம் chest breathing என்று சொல்லப்படும் அதி மேலோட்டமான சுவாசம், அன்பின் இரசவாதம் இருக்கட்டும், பிராண வாயுவையாவது நாம் முழுமையாகப் பயன் படுத்திக் கொள்கிறோமா? இப்படி விரிந்து கொண்டே போகும், ஆழமாக அணுகினாலன்றி உண்மை காண முடியாது. என் தனிப்பட்ட ஞானப் பயணத்தில் நான் உணர்ந்து தெளிந்தவைகளைப் பகிர முயல்கிறேன், அவ்வளவே, நான் ஆழ்ந்த விழைவுடன் வாஞ்சையுடன் முனைகிறேன், வலவன் நலவனே செய்கிறான் என்பதே சாலப் பொருந்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: