பேர் முன்னே “நான்” போட்ட நாகரா, நீ ஆள் தாண்டி “நான்” பாரடா!
கூர்ந்துள்ளே “நான்” பாரு நாகரா, நீ வீண் பேச்சில் தேய்வதேனடா!
மார்க்குள்ளே “நான்” நேசத் தேனடா, நீ வாய் மூடித் தேனுண்ணடா!
ஆர்க்குள்ளே “நான்” இல்லை கூறடா, நாவாடாமல் நீ தேன் பகிரடா!
ஞான முதல் “நான்” மோனமே நாகரா, அம்மோனமே ஞால வேர் தானடா!
ஜோதி உரு “நான்” நேசமே தானடா, அந்நேசமே மார்க்குள் நீ பாரடா!
ஆதி முதல் “நான்” நாதமே நாகரா, அந்நாதமே மார்க்குள் நீ கேளடா!
போதத் திரு “நான்” வாசியே தானடா, அவ்வாசியே மார்க்குள் நீ வாசிடா!
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்