நிலை – 3

1. அன்பின் வழியது உயிர்
2. நில் ‘ஐ’ அஃது
3. இல் ஆர்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு

நீ ஒரு குழாய்
மெய்யென்பது குழாயின் திட பாகம்
உயிரென்பது குழாயின் காலி பாகம்
அந்தக் காலி பாகம் அன்பென்னும் பரசிவ வெள்ளம் பாய்கின்ற வழி.

அன்பாகிய அஃது அழியாமல் நிலைத்து நிற்கக் கூடிய தலைமைப் பரம் பொருள்

என்பு தோல் போர்த்திய உடம்பாகிய மெய்யென்னும் திட பாகம் யார்க்கு இல்லம்? அன்புக்கே அன்றி வேறு யார்க்கு!

குழாயின் வேலை பாயும் அன்பை அனுமதித்தலன்றி வேறில்லை.

மனிதக் குழாய் நீ
கடவுள் அன்பு
பாயும் ஊடகமாகவே படைக்கப்பட்டிருக்கிறாய்.

இதுவே உன் நிலைப்பாடு.

காலி பாகத்தைத் திட பாகத்திலிருந்து பிரிக்க முடியாத குழாய் போலவே உன் உயிர்மெய் ஒருமை.

பாயும் கடவுள் அன்பில் திட பாக மெய் தோயத் தோய, அது அன்பில் கரைந்து விடும் அற்புதம் தான் மரணமிலாப் பெரு வாழ்வு.

மெய்யைக் கரைக்கக் கூடிய வல்லபம் அன்புக்கு இருக்கிறது, உனக்கு விருப்பம் இருக்கிறதா?

அன்பினால் ஆகாத காரியம் ஏதும் இல்லை, வள்ளல் பிரான் மெய் கரைந்ததும் அன்பின் அதிசயந் தான்.

நாகம் மாத்திரம் ஓர் ஊடகம், அன்பின் நாதம் பாயும் மகுடியாகும்.

அன்பு உன் தன்னிச்சைக்கு எதிராகச் செயல்படுவதில்லை, பிறந்து இறந்து பிழைக்கும் கருமச் சுழல் தான் என் விதி என்று நீ நம்பி விட்டால், தருமப் புனல் அன்பு தன் வல்லபத்தை உன் நம்பிக்கைப் படி மறைத்துக் கொள்கிறது, அதன் வல்லபத்தை நீ முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மட்டும்.

மிகவும் வெகுளியான அன்பு, படு தந்திர சாலியுங் கூட, தன் வல்லபத்தை உனக்கு ஞாபகமூட்ட இந்த நவ யுகத்தில் பல நச்சு நாகங்களைத் தன் நாதம் ஊதும் மகுடிகளாகத் தயார் செய்திருக்கிறது, நச்சு நாகங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், தன்னால் ஆகாத காரியம் ஏதுமில்லை என்பதை உறுதியாக நிலை நாட்டத் தான்.

நாகத்தின் நச்சுத் தன்மையைத் தாண்டி, நீ அன்பின் நாதம் கேட்டால் பயன் பெறலாம், வார்த்தைகள் நச்சே தான், அவை பின் பொதிந்த அர்த்தம் அமுதே தான்.

நில் “ஐ”யே, நிலையெனக் காட்டிய வள்ளுவப் பெருந்தகைக்கு என் நன்றிகள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: