வள்ளலார் அருள் வாக்கு

வள்ளலே! தற்சமயம் நீவிர் எங்குள்ளீர்?

101

வடுஅல் ஊராய்ப் புவியை மாற்ற
மகவுன் இருதயத் துள்ளோம்

வள்ளலே! சுத்த வெளியாய்ப் புவியை மாற்ற முடியுமா? நம்புவதற்குக் கடினமாயிருக்கிறதே!

102

அன்பினால் கூடாத காரியம் எதுவுமில்லை
அன்புயாம் தேவாதி காரணம்

தேவாதி = தேவ ஆதி, இறை முதல்

103

வடுஅல் ஊரே யாவின் மெய்ம்மை
மறதி தானே மாயை

104

மறதி நீங்கி மெய்ம்மையின் ஞாபகந்
திறக்க மாயும் மாயை

105

மெய்ம்மையின் ஞாபகந் தோன்றும் இருதயத்
துய்ந்தேஎம் போதகங் கேள்

106

சுபம்மிகு இக்கணம் புனிதமாம் இவ்விடம்
இருதயத் துய்ந்திட அற்புதம்

107

அவரிவர் தேவரென அங்குமிங்கும் அலையா
தமர்ந்திடு நேசநுனி இருதயம்

108

உவரொரு தேவன் அன்பே யாமென
உணர்த்திரு பூமி இருதயம்

உவரொரு தேவன் = அவர் இவர் அல்லாத உகரஞ் சுட்டும் உன்னுள் உயிர்த்த இறைமை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: