112
தலையாய அன்பின் தலைமைச் செயலகம்
தலைகாலின் ஆதி இருதயம்
113
தலைகால் உயிர்க்கும் வாசிப்புனல் அன்பின்
கொடையாய் எழுங்கண் இருதயம்
114
ஆதி இருதயத் திருப்பு சத்தியம்
தாழி டவியலா அன்பு
115
சத்திய இருப்பைத் தாழிட முயலும்
சத்துவ மயக்கே நோய்
116
சத்திய இருப்பை உணர்த்தும் சின்மயம்
நன்முதற் கருவே நான்
117
சத்திய இருப்பில் கரையுஞ் சின்மயம்
அன்பதை விளங்க இன்பம்
118
அன்பு நிர்க்குணம் சின்மயம் சகுணம்
இன்பம் இரண்டின் ஐக்கியம்
119
நானெனும் பேரில் பேரலா அன்பின்
ஞானமே காணல் யோகம்
120
யோகத்தே நின்றதும் யாமெனும் அபயமாய்
லோகத்தே நிற்பது நீயே
யாமெனும் அபயமாய் = “யாமிருக்க பயமேன்” எனும் மந்திரத் திரு உருவாய்
மறுமொழியொன்றை இடுங்கள்