மாயா நிலையம் – 1

உயிரையும்
மெய்யையும்
பிரிக்கும் வன்மனம்

உயிர்மெய் ஒருமையை
உணர்விக்கும் மன இதம்

வன்மனம் மாயையின்
பொய்த்திரைப் படலம்

மன இதம் உட்போதகரின்
இருதயத் திருக்கமலம்

மன இதமே
மனித சுக சொரூபம்

மன இதமே
அன்பில் கனிந்த ஞானப் பழம்

மன இதமே
மனிதம் விட்டகலா ஆண்டவம்

மன இதம்
எப்போதும் விழித்திருக்கும் ஞாபகம்

மனிதம்
மன இதத்தில் விழிக்க மாயும்
வன்மனத்தின் மாயா ஜாலம்
அன்னை பூமியில் மலரும்
நவயுக உதயம்

மன இத வழியினூடே
இருபதாய்த் திருநடமாடும்
மெய் விட்டகலா உயிராய்
ஆண்டவத் தாண்டவம்

இருபதில் ஒவ்வொன்றும்
பதின்மூன்று தரம் அதிரும்

இருநூற்று அறுபதும்
உயிர்மெய் ஒருமையாம்
மாயா நிலையம்

வன்மனத்தின் மாயா ஜாலம்
தொட முடியா இம்மாயா நிலையம்
என்றும் எவர்க்குமாகும்
இன்ப வாழ்வின் வரம்

அருட்தாய் அருட்தந்தை சற்குரு
முதல் மூன்றும் நின் ஆதி மூலம்

நான்காம் குரு வித்து
மூலாதாரத்தே மூவரின் உபயம்

ஐந்தாம் குண்டலி நாகம்
சுவாதிட்டானத்தே எழும் ஜீவ விருட்சம்

ஆறாம் மறு பிறப்பு
மணிபூரகத்தே நிகழும் ஆணவ மரணம்

ஏழாம் அருட்கரம்
சூரிய சக்கரத்தே எழும் ஆண்டவ உதயம்

எட்டாம் அருட்பெருஞ்ஜோதி
அனாகதத்தே எழும் பேரொளி மயம்

ஒன்பதாம் தனிப்பெருங்கருணை
அமுத கலசத்தே பாயும் பேரருள் வெள்ளம்

பத்தாம் நாயகம்
விசுத்தியில் முழங்கும் பேருபதேசம்

பதினொன்றாம் இறை மகவு
ஆக்கினையில் விளங்கும் ஆண்டவ மகத்துவம்

பன்னிரண்டாம் அமர மனித எழுச்சி
சஹஸ்ராரம் தாண்டிப் பாயும் பரிணாமம்

பதின்மூன்றாம் நிராதார மேம்பாலம்
உச்சி மேல் தாவ இறங்கும் ஏழ்நிலை நிராதாரம்

பதிநான்காம் பரஞான போதம்
உச்சி பிளக்கும் மெய்வழி உதயம்

பதினைந்தாம் தூய நோக்கம்
திருவிழி திறக்கும் நெற்றிப் பிரளயம்

பதினாறாம் குரு மந்திர அக தீட்சை
தொண்டைக்குள் இறங்கும் தேன்மொழிப் பரவசம்

பதினேழாம் இருதயத் திரு பூமி
அன்பெனும் ஒருமையின் தேவாலயம்

பதினெட்டாம் சத்திய தரிசனம்
நாபியில் விளங்கும் சச்சிதானந்த விசுவரூபம்

பத்தொன்பதாம் அதிசயப் பரிமாற்றம்
நாபியின் கீழ் நிகழும் இரசவாதம்

இருபதாம் ஜோதி ஸ்வரூபம்
முதுகடியில் பொருந்திப்
பாதந் தாண்டிப்
பூமிக்குள் இறங்கும்
உச்சி மேல் நீளும்
அருட்ஜோதிக் கம்பம்

மேலேறிக்
கீழிறங்கும்
இருபதின்
பதின்மூன்று தரமும்
குரு வள்ளல் பராபரம்
தராதரம் பாராமல்
தராதலத் தெவர்க்கும்
தயவாய் வழங்கும்
தன் வெள்ளங்கி வெளிச்சம்

வள்ளல் பிரானின் வழி நடத்துதலில் தமிழாக்கம் செய்யப்பட்ட “மாயர்களின் நாள்காட்டி”(MAYAN TZOLKIN)யை அடிப்படையாகக் கொண்ட நவயுக உதய தீர்க்கதரிசனம்! “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வாக்கின்படி என் சிறு முயற்சி. மாயர்களின் நாள்காட்டியின் படி என் பிறந்த நாள் 12 தனிப்பெருங்கருணை(12 MULUK).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: