மாயா நிலையம் – 2

முதல் படிமம்

ஈமீஷ்(IMIX) – அருட்தாய்

படம்
இந்தப் படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
உம் இருண்ட பக்கம்
வன்மனத்தால் திரிக்கப்பட்ட தாயாம் அருட்பொருளே
என்ற ஞாபகம் உம்முள் எழுந்து
மன இதத்தில்
நீர் மனந்திரும்ப உதவும்!

மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது!

2வது படிமம்
ஈக்(IK)- அருட்தந்தை

படம்
இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
அன்பாம் தந்தை சிவா அவரே
உம்முள் வாசி என்னும் உயிர் மூச்சாய் ஓடும்
இரகசியம் பகிரங்கமாகும்!

பரலோக வாசி அவரே
இகலோக வாசி நீர்
என்றே அறிந்தே
இரும் ஐயா நீரே!

தந்தை அவரை ஆழமாக
மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே
உள் வாங்கி
இலங்கைப் பிரச்சினை தீர
பரலோக வாசி அவரை
மூச்சை வெளிவிட்டுக் கொண்டே
வெளிவிடுங்கள்!
அதிசயத் தீர்வு உருவாகும்!
முதல் படிமத்தில்
உம் இருண்ட பக்கத்தை
அருட்தாயிடம் ஒப்புவித்தீர்!
2வது படிமத்தில்
உம் ஒளி முகத்தை
அருட்தந்தை உமக்கு
தயவாய் அளிப்பார்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்!

3வது படிமம்
அக்பல்(AKBAL) – சற்குரு

படம்
இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
உமது மெய்யுடம்பாம் குகையில்
தாயுந் தந்தையும்
சிவசத்தி ஒருமையாய் உறையும்
குருநடு ஞானம் உம்முள் ஓங்கும்!

முதல் படிமம் இடகலையாம் வாலை நாயகி
2வது படிமம் பிங்கலையாம் வாலறிவு நாயகன்
3வது படிமம் சுழிமுனையாம் குருநபி நடு நாயகம்
இம்மூவரின் ஒருமையே உம் ஆதி மூலம்!

சிவசத்தி ஒருமையாம்
நடு நிலை விட்டு நழுவுதாலேயே
அருட்தாயின் திரிபாக ராஜசமும்
அருட்தந்தையின் திரிபாக தாமசமும்
(ராஜசமும் தாமசமும் அசுத்த மாயை)
சற்குருவின் திரிபாக சத்துவமும்(சுத்த மாயை)
ஆகிய திரிகுண மாயைப் படலம் உருவாகிறது!
முதல் மூன்று படிமங்களைத் தியானிப்பதன் மூலம்
அசுத்த சுத்த மாயைப் படலம் கரைந்து
திரிபுகள் யாவும் நீங்கி
சச்சிதானந்த மாயா நிலையில்
நீர் நிலைபெற முடியும்!

இம்மூன்று படிமங்களையும் சுட்டும் மகாமந்திரம்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
வழி = குரு
சத்தியம் = தாய்
ஜீவன் = தந்தை
நானே = திரித்துவ ஒருமை
இருக்கிறேன் = இக உலகில் அவ்வொருமையின் உறுதியான வெளிப்பாடு

4வது படிமம்
கன்(KAN) – குரு வித்து

படம்

சச்சிதானந்த அருவம்
இச்சக திடமாய் உருவாக
வழி வகுக்கும் வித்தான
மூலாதாரம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
திரிகுண மாயையின் மாயாஜால
மரண பயத்திலிருந்து மீண்டு
சச்சிதானந்த திடமாய்
இச்சகத்தில்
மூல கணபதி குருவாய்
நீர் விளங்கலாம்!

முதல் மூன்று படிமங்களும்
ஆறாதாரத்துக்கு ஆதி மூலமான
நிராதாரத்தையும்
நான்காவது படிமம்
ஆறாதாரத் தொடக்கத்தையும்
குறிக்கின்றன.
அருவம் உருவமாகும்
அற்புதத் தொடக்கம்!

தியான இடம் – முதுகடி – மூலாதாரச் சக்கரம்

5வது படிமம்
சிக்சன்(CHICCHAN) – குண்டலி நாகம்

படம்
குரு வித்திலிருந்து
நாபியடியில்
சுவாதிட்டான சக்கரத்தில்
எழும் ஜீவ விருட்சம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
கட்டுக்கடங்கா அவ காம உணர்விலிருந்து மீண்டு
மட்டுப்படாத சிவ காதலை உணரலாம்!

இக குண்டலி ஏற்றத் தொடக்கம்!
இல்லறத்தில் அர்த்தமுள்ள காமத்தால்
உண்டாகும் ஞாலக் குடும்பம்!

6வது படிமம்
கீமி(CIMI) – மறு பிறப்பு

படம்
ஜீவ விருட்சமாய் எழும்
குண்டலி நாகம்
நாபியில் மணிபூரக சக்கரத்தில்
ஆணவத்தைக் கொத்தி நசிக்க
ஆண்டவத்துள் மறு பிறப்பு!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
ஆணவ அனந்த முகங்கள் யாவும்
ஒவ்வொன்றாய் உரியும்!
ஆண்டவ முகம் பிறக்கும்!
பிறவிச் சுழலிலிருந்து
மீட்கும் மறு பிறப்பு
இப்போதே இங்கேயே
எல்லார்க்கும்!

7வது படிமம்
மணீக்(MANIK) – அருட்கரம்

படம்

மார்பின் கீழ் உதரவிதானத்தில்
சூரிய சக்கரத்தில்(Solar Plexus)
எழும் ஆண்டவத்தின் அருட்கரம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
மனக் குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கி
மன இதமாம் இருதய நேர்மையை நோக்கித்
தெளிவுடன் உம் ஏற்றம்!

8வது படிமம்
லமட்(LAMAT) – அருட்பெருஞ்ஜோதி

படம்

நடு மார்பில் அனாகதத்தில்
அன்பெனும் இருதய நேர்மையாம்
மன இதப் பேரொளி உதயம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
வன்பின் எச்சங்கள் தீர்ந்து
அன்பில் இருதயங் கனியும்!

9வது படிமம்
முலூக்(MULUK) – தனிப்பெருங்கருணை

படம்

தொண்டையின் கீழ் அமுத கலசத்தில்
பெருக்கெடுத்தோடும் பேரருள் வெள்ளம்!

இந்த படிமத்தைத் தியானிப்பதன் மூலம்
பேத பாவங்களின் எச்சங்கள் நீங்கி
ஆன்ம நேய ஒருமை விளங்கும்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: