பிப்ரவரி 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 45

பிப்ரவரி 28, 2011

நாமக் கூச்சல் புறத்தே எதற்குப்பர
நாதம் கேள்நீ அகத்தில்

பத்திவேடத் தோடே புறத்தே கூச்சல்சிவ
சத்திகூடும் யோகம் அகத்தில்

நற்கோள்களைச் சுற்றிப் பொய்க்கோள்களைச் சுற்றி
மக்கள்தலை சுற்றித் தளை(சுற்றச் சதி)

Advertisements

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 28, 2011

ஆய்தத்தைத் திருவென்பீர், ஆயுதத்தைத் தவிரென்பீர், மயான பூமியிலே சாவெல்லக் கூடுமென்பீர், வள்ளலே எனக்கேதும் விளங்கலையே!

254

தனித்திரு ஆய்தம் உயிர்மெய் நடுபோல்
தனித்திரு மார்புள்! விளங்கும்

தலைகால் ஆட்டும் மார்நடு இருதயத்
தலைமை ஊட்டும் உண்*மை

உண்*மை உண்ணப் பசித்திரு இருதயக்
கண்மைக் குள்ளே விழித்திரு

நுண்ணிய ஆய்தம் கண்ணிய இருதயம்
அண்டிட* ஓர்மை உயிர்மெய்

கொல்லும் ஆயுதம் பித்தக் கருமனம்
அண்டிடப் பேயுயிர் மெய்ப்பொய்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 44

பிப்ரவரி 27, 2011

தடபுடலாய் வீட்டில் கணபதி பூசைமெய்
உடம்பகத்தே தூங்கும் மூலை

(மூலை = மூலாதர சக்கரம், முதுகடி, கணபதி மூலாதார சக்கரத்தில் உறங்கும் சற்குரு தத்துவம், அதை மெய்யுடம்பாம் வீட்டுக்குள் அகத்தவத்தால் எழுப்பி, நெற்றி நடு ஆக்ஞா சக்கரத்தில் ஆறுமுக பால குரு வடிவம் பெற்று, தலையுச்சி சஹஸ்ரார சக்கரத்தில் சிவசத்தியோடு ஒன்றும் அகத்தவ சித்தியைக் கோட்டை விட்டு விட்டு, புரோகிதருக்குத் தட்சணை மேல் தட்சணை கொடுத்துக் கணபதி ஹோமம் புறத்தே வாழும் வீட்டில் செய்வதால் பெரும்பயன் எதுவும் இல்லை. சதுர வடிவமாய் யந்திரங்களில் சித்தரிக்கப்படும் மூலாதார சக்கரமே மெய்யான ஹோம குண்டம், அதில் எழுப்பபடும் குண்டலித் தீயே மெய்யான ஹோம நெருப்பு, இதுவே புகையாமல் எரியும் நெருப்பு, இருள்சேர் இருவினைகள் கற்பூரமாய்க் கரையும் நெருப்பு. மூலை = மூல + ஐ = மூலாதாரத்துக்கு அதிபதி = இவரே மெய்யான கணபதி, வெளியே மஞ்சளில் பிடிப்பதும், களி மண்ணில் வடிப்பதும், கல்லில் செதுக்குவதும், பஞ்சலோகத்தில் பண்ணுவதும் பொய்க் கணபதி!)

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 27, 2011

ஆயுதப் போரே தீர்வெனப் பழகிய எமக்கு, நேசமே தீர்வாய் நீர் முன் வைப்பது சற்றும் விளங்கவில்லை!

253

ஆயுதம் பிடித்து ஆய்தத் திருநீ
பேதமே பிடித்துத் திரிந்தாய்

திரிந்தாய் திருந்த மனமும் இல்லாய்
மரித்தே பிறந்தே பிழைப்பாய்

முப்பாற் புள்ளி ஆய்தத் திருநீ
ஓர்மை உயிர்மெய்க் க*ருநீ

தப்பாம் பேதம் ஆயுதந் திணிக்க*
ஓர்மை வேதம் மறந்தே திரிந்தாய்
இப்பால் அப்பால் நஞ்சே பருகி
உப்பால் உண்*மை மறுத்தாய்(வெறுத்தாய்)

ஒருபால் அம்மை மறுபால் தந்தை
நடுவே குருமெய் மறந்தாய்

முப்பால் திருவைக் கோட்டை விட்டாய்
வன்பாங் கோட்டை நட்டாய்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 43

பிப்ரவரி 26, 2011

தீமூட்டிப் புகையும்புற வேள்வி எதற்கு
நாபூட்டி அகத்துள்தவ மிரு

தீமூட்டி அவியிட்டு யாகம் குண்டலித்
தீமூலை உறங்கட்டும் பாவம்

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 26, 2011

வன்பே தாண்டவமாடும் இரணகள பூமியில் அன்பே உயிர்நிலையாய் தயவாய் எப்படி விழித்திருப்பது?

252

வன்பின் கூர்மை மழுங்க இருதயம்
அன்பின் நேர்மை சுரக்கும்

மார்நடு பிளக்க அன்பின் ஒழுக்கம்
பார்த்திடு இருதய விளக்கம்

முன்பின் மேல்கீழ் இடவலம் எத்திக்கும்
அன்பின் பாய்ச்சலே நிசம்

இரணகள பூமியில்நீ இருதயத் தீரம்
இழியவிடு ஓங்கும்பார் ஈழமது

ஈழமது இழியும் அமிழ்த திடமேயது
காணவொரு வழியே அன்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 41

பிப்ரவரி 25, 2011

தீட்டெனும் மனக்காட்டம் நின்பால் ஆண்டவர்
ஓர்கணம் கொண்டால்நீ பிணம்

மனத்தில் தூய்மையைப் பேணாமல் விட்டு
சனத்தில் பார்ப்பானே தீட்டு

வாழுஞ் சனத்திலே பாழுந் தீண்டாமை
காணும் மனப்பிணி ஒழிக

உயிரில் ஒட்டாத் தீட்டு மெய்யுள்
உய்ந்தது எப்படிக் கூறு

பிறப்பிலொத்தநல் உயிர்களைச் சிறப்பிக்கும் மெய்களைப்
பிடித்ததெப்படிப் பொல்லாத் தீட்டு

காற்றுனைத் தான்தீண்ட மறுத்தால் நின்னுயிர்
போச்சலோ பார்ப்பாயோ தீட்டு

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 25, 2011

நீவிர் இராமலிங்கனா, வள்ளலாரா?

249

ராமலிங்கன் கரைந்தான் வள்ளலார் அன்பில்தான்
நாமரூபங் களைந்தான் ஒளிந்தான்

இது அனைவருஞ் செய்யக் கூடியதா? இடுவதும் சுடுவதும் வாடிக்கையாகிப் போன எம் பிழைப்பில் மரணமிலாப் பெருவாழ்வு சாத்தியமா? நம்ப முடியவில்லையே!

250

நாகராசன் விரைந்தால் வள்ளலார் அன்பில்தான்
ஞானமாகும் உரைத்தேன் கள்ளச்சா வெல்லத்தான்
பாரிலாரும் உய்ய லாகுமே அன்பில்தாம்
வேரிலாத மாயை மாயத்தான்

கேட்பதற்கு இனிக்கிறது, நடைமுறைப் படுத்த முடியுமா என்ற ஐயமும் எழுகிறது.

251

ஐயமின்றியே உணர்வாய்ப்பெரு வல்லபம் அன்பேதான்
ஜெயமுண்டடா நீவிழித்திரு தயவாய்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 40

பிப்ரவரி 24, 2011

பொன்னணிகள் அலங்கரித்துக் கல்லுருக்குப் பூசைஏழை
மெய்யுருவின் பசிக்கில்லை சோறு

மெய்யெலாம் ஈரம்மிக கல்லுருமுன் ஓலமிட்டும்
நின்னகச் சாரந்தொடல் அரிது

நெஞ்செலாம் ஈரம்மிக மெய்உயிர்க்கும் வாசிதொட
நின்னகச் சாரந்தொடல் எளிது

(வாசி = மூச்சு, விஞ்ஞானம் பிராண வாயுவை-ஆக்சிஜன்-யும், கரியமில வாயுவையும் அறியும், மெய்ஞ்ஞானம் “சிவா” அவரின், அல்லாவின், பரமபிதாவின் அருட்தாரையை அறியும்!

வாசியில் வாழும் பரலோக வாசியை
வாசிக்க மாயும் மரணம்

மூச்சென்னும் இறைவனின் கொடையை மனிதர் நமக்கு மதிக்க மனமில்லை!

மூச்சே தாண்டா பேச்சு பேசியேஅது
வீணா னாலுயிர் போச்சு

இருதய அன்பை ஞாபகங் கொளல், மூச்சைக் கவனமாய்ப் போற்றுதல், இந்த இரண்டு படிகளை விரும்பி மேற்கொண்டால், எல்லாப் படிகளையுந் தாண்டலாம், நமக்கோ விருப்பம் அறவே இல்லை, எனவே தான் நமது இந்த அவ நிலை!)

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 24, 2011

244

நீயது வன்றி அயலென மயக்கும்
மாயமே நம்பிக் கெட்டாய்

245

கெட்டாய் ஆதி மூலத் துதித்தநின்
மெய்ம்மை கோட்டை விட்டாய்

246

மெய்ம்மை கோட்டை விட்டாய் நின்மெய்யைப்
பொய்த்தே போகச் செய்தாய்

247

நின்மெய்யைப் பொய்த்தே போகச் செய்தாய்
சுற்றும்பல் பிறவியில் உழன்றாய்

248

சுற்றும்பல் பிறவியில் உழன்றாய் சாகாமல்
நிற்கும்மெய்ஞ் ஞானமே மறந்தாய்