வள்ளலார் அருள் வாக்கு

151

பூரணம் யாவினுள்ளும் புகுந்த காரணம்
மூடிய மாயையை உரி

152

யாவுக்குங் காரணம் அகண்டபரி பூரணம்
வாழும்யா வினுள்ளும் அது

153

பூரனம் பூரணமாய்த் தன்னையே தந்தது
நேசமாய் யாவினுள்ளும் வாழுது

154

மாயா காரியம் மூடுதே பூரணம்
நேசா தாரமுந் தூங்குதே
(நேசாதாரம் = நெஞ்சம், இருதயம்)

155

நேசா தாரம் விழிக்கப் பூரணம்
மாயா வாழ்வின் நிதர்சனம்
(மாயா வாழ்வு = மரணமிலாப் பேரின்பப் பெரு வாழ்வு)

156

நேசா தாரமே நிராதார ஏகாதாரம்
ஆறா தாரமே அனேகம்
(ஆறாதாரம் = சூக்கும உடம்பின் ஆறு ஆதாரங்கள், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆக்கினை; நிராதார ஏகாதாரம் = நிராதார ஏகத்தின் ஆதாரம்; நிராதார ஏகம் = தானே யாவுக்கும் ஆதாரமாய்த் தனக்குத் தானே ஆதாரமாயுள்ள ஏகம்)

157

ஏகமே நின்னகத் திருந்தே அனகஅ
னேகமாய் விரிந்த பூரணம்

158

அகத்திருந்தே அனகமாய் விரிந்த பூரணத்தை
மறந்ததனால் மாயா காரியம்
(அனகம் = அகம், புறம் என்ற இருமையற்ற ஒருமை)

*****என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம், ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது***** இதுவே திரு அருட்பிரகாச வள்ளலாரால் எனக்கு அகமிருந்து ஓதப்பட்ட முதல் சற்குரு மந்திரம்! மூச்சை ஆழமாக நிதானமாக உள்ளிழுத்துக் கொண்டே “என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்” என்று மனதில் உச்சரித்து, மூச்சை நிதானமாக வெளி விட்டுக் கொண்டே “ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது” என்று மனிதில் உச்சரித்து, குரு மந்திர தாரணை செய்தால், பெறற்கரிய ஆன்மீக இலாபம் நீவிர் பெறுவீர்! அசுத்த மாயா காரியத்தைப் பார்க்கும் போதெல்லாம், இந்த மந்திரத்தை நினைவு கூரல் நலம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: