பிப்ரவரி 6th, 2011 க்கான தொகுப்பு

மாயா நிலையம் – 7

பிப்ரவரி 6, 2011

புனித மாயா எண்-படிமப் பெட்டகத்தைக் கூர்ந்து கவனித்தால், குறுக்கு வரிசையில்
1-8, 2-9, 3-10, 4-11, 5-12, 6-13, 7 என்ற அமைப்பே எல்லாப் படிமங்களிலும் இடம் மாறி இருப்பதைக் காணலாம்!

1
1+7 = 8
8+7 = 15, 15-13 = 2
2+7 = 9
9+7 = 16, 16-13 = 3
3+7 = 10
10+7 = 17, 17-13 = 4
4+7 = 11
11+7 = 18, 18-13 = 5
5+7 = 12
12+7 = 19, 19-13 = 6
6+7 = 13
13+7 = 20, 20-13 = 7

இவ்வாறு முதல் எண்ணிலிருந்து 7 கூட்டி வரும் எண், அடுத்த எண்ணாக, அது 13ஐ விடப் பெரிய எண்ணாய் இருந்தால், 13ஐக் கழித்து வரும் எண் அடுத்த எண்ணாகிறது.

இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியது, அருட்தாய்(Dragon) நெடுவரிசையில் முதல் இரு 13 தொடர்களில் இருக்கும், மூன்றாவது 13 தொடரில் அது சுழியத்துக்கு அதாவது அசையா நிலையாம் சூனியத்துக்குச் சென்று விடுகிறது,

1-8, 0
2-9, 0
3-10, 0
4-11, 0
5-12, 0
6-13, 0
7, 0

என்று ஒவ்வொரு இரு தொடர்களுக்குப் பின்னும் அது இவ்வாறு 7 முறை சுழியம் செல்கிறது! இவ்வாறே ஒவ்வொரு படிமமும் இரு தொடர்களுக்குப் பின் இவ்வாறு 7 முறை சுழியம் செல்லும்! சுழியம் சென்று அது மீளும் போது, புத்துணர்ச்சியுடன் மீள்கிறது, எவ்வாறு நாம் உறக்கத்திற்குப் பின் தெம்பாக எழுகிறோமோ, அவ்வாறே!

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 23

பிப்ரவரி 6, 2011

குழம்பக் குழம்பத் தோன்றும் அமிழ்தம்
விழுங்கித் தெளிவைப் பெறு

பெறுவதுந் தருவதும் அன்பெனும் அரும்பொருள்
திறந்தநின் இருதயத் திருந்து

தூலகுரு தீட்சைக் கோடும்நீ நின்னகம்வாழ்
மூலகுரு நாடி நில்

நில்லாக் கடத்தை நிலைபெறும் பெருவாழ்வில்
பொன்மெய் யாக்கும் உட்குரு

உட்குருவை விட்டு அக்குரு இக்குருப்
பொய்யுருவைப் போற்றுவ தேன்

தேனாய் இனிக்கும் குருமொழி அகத்தே
கேளா தலையும் பேய்மனம்

தூலகுரு நாட்டம் விட்டு நின்னகத்தே

மூலகுரு நாடி இரு

இருக்கும் இடமாம் மெய்யேஉட் குருபீடம்
இருப்பார் அவரே உயிர்ப்பு

உயிர்ப்பாய் உள்ளுறை குருவார் தம்மை
உணர்ந்தால் பொன்னுடல் மெய்

மாயா நிலையைத் திரைகளால் மறைக்கும்
மாயை வெளிக்குரு பீடம்

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 6, 2011

164

தன்னிறைவுத் தன்மையாம் பூரணத்துவம் மீட்க
அன்பியற்கை உண்மையை நாடு

165

இருதய வெளியில் அருட்பேரொளி விளக்கம்
கருமன இருளோ மயக்கம்

166

புறவயப் பட்டே பூரணத்திட அகந்தனை
மறந்திடத் துன்பே கதி
(பூரணத்திட = பூரணத்து இடமான, பூரணத்திடமான என்றும் பொருள் கொள்ளலாம்)

167

அகவயப் பட்டே அனகமாய் விரியும்
பகவனாம் அன்பைப் புரி

168

அன்பைப் புரிந்திடு அருளாய் விரிந்திடு
இன்பைப் பகிர்ந்திரு தயவாய்