வள்ளலார் அருள் வாக்கு

169

உன்மத்தம் மூடிய உச்சியைப் பிளக்கும்
நெஞ்சின்கண் விழிக்கும் பூரணம்
(உன்மத்தம் = அஞ்ஞான மயக்கம்)

170

நெற்றிக்கண் விழித்தே நெஞ்சின் கண்மையை
உண்ணத்தான் வெளுக்குங் கருமனம்

171

நெற்றிக்கண் அழுகை மூச்சினில் இழைந்தே
எச்சிலில் கலக்க அமிழ்தம்

172

தித்திக்கும் அமிழ்தம் நாவாய் மணக்க
உண்மைதான் கண்டத் திறங்கும்

173

கண்டத் திறங்கும் அமிழ்தம் கரும
நஞ்சு முறித்துக் கலசம் நிரப்பி
நெஞ்சு வாழ்பூ ரணத்தை வாழ்த்தி
நெஞ்சங் கீழ்த்தா ழுமே
(கலசம் = அமுத கலசம் என்னும் தைமஸ் சக்கரம்)

174

அமிழ்தோ டிழைந்தே பூரணம் இற(ர)ங்கும்
மயக்கோ டிணைந்த இருள்வாய் விடியும்
பூரண நிறைவாய்ப் பொருந்துஞ் ஞானம்
நாபியில் சச்சிதா னந்தம்
(இருள்வாய் = உதரவிதான சூரிய சக்கரம்)

175

உந்தியில் பூரிக்கும் அருட்பெரு வல்லபம்
சச்சிதா னந்தம் சத்திசித்தி பூரணம்
உந்திக்கீழ் கருணைத் தந்தையாய் அருளாம்
அம்மையாய் அமரும் ஐக்கியம்

176

முதுகடிப் பொருந்தும் பூரண ஒளியுரு
முழந்தாள் நீளும் அருளர சாட்சி
திருவடி பதியும் நானே பூரணம்
அடிமுடி நடுவும் நானே

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: