மாயா நிலையம் – 9

13 எண்கள்

0 = சுழியம், சூன்யம், வெட்டவெளி, அசையா நிலை, நிராதாரம், பேரிருப்பு, அன்பே சிவம் உறையும் இருதய மையம்.

1 = ஒருமை, அன்பே சிவம், ஞால முழுமைக்கும் ஆதாரமாம் தன்மை, நான், “க” என்னும் உயிர்மெய், தந்தை, “வெட்டவெளியில் ஒன்று”

2 = தன்மையிலிருந்தெழும், தன்மையோடு நெருங்கிய தொடர்புடைய முன்னிலை, நீ, நான் நீ என்னும் இருமை, “உ” என்னும் உயிர், இருமையிலும் உகரச் சுட்டு இருக்கும் சூட்சுமம், அருட்சத்தி, அருளொளி, தாய், “அன்பே சிவமாய் இரு”

3 = நானும், நீயும் எப்போதும் புணரும் ஒருமையின் பெருமையாய் உதிக்கும் “உவன்”, நானே நீ, நீயே நான் என்ற அத்வைத ஒருமையை அறியும் மூன்றாம் திரு விழி, சற்குரு உவனே, அவனாய், இவனாய், அதுவாய், இதுவாய்ப் படரும் பகவன், இறை மகவு. “சிவசத்தி ஒன்றும் நெற்றி நடுத் தீயாய் மூணு”

4 = “நான்”கு, திரு விழித் தூய நோக்கம் படைக்கும் திட பரிமாண ஞாலம், “நான்”முகமே ஞாலம்!

5 = திட பரிமாண ஞாலத்தைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று உணரும் ஐம்புலன்கள், ஒன்று முதல் ஐந்து வரையிலான ஐயறிவு உயிர்களின் பரிணாம வளர்ச்சி, ஐம்முகமே ஞால அறிவு! அஞ்சு பொறி வழி வரும் சிற்றின்ப வேட்கைக்கு அஞ்சு! அஞ்சடக்கும் ஆமை நீ மனித ஆறு!

6 = ஐயறிவில் ஐயாம் “நான்” தலைமையை அறியும் “ஐ” அறிவாம் ஆறாவது அறிவின் பரிணாமப் பாய்ச்சல், மனிதம், மன இதம், ஆறு மனமே ஆறு, வன்பின் சூடு நீ ஆறு, மன இதமாம் மனிதத் தண்மையிலே நீ சேரு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு! 1. தூய நோக்கம் காண், 2. மெய்க்குரு மொழி கேள், 3. பரமானந்த நவ அமுதை உண், 4. வாசியில் சிவாவை நுகர்ந்து வாசி, 5. பர உண்மையை இகத்தில் மெய்யுளே தொடு, 6. 6ஐப் போல் உள்ளே பரத்தில் சுழிந்து இகத்தில் தயவாய் இரு.

7 = ஒன்று முதல் ஐந்து வரையிலான ஐயறிவு உயிர்களும், ‘ஐ’ அறிவுள்ள ஆறறிவு மனிதனும் ஒன்றும் எல்லாந் தழுவிய முழுமையாம் எழுமை, ஏழாம் அறிவு, மெய்ஞ்ஞானம், தேவ மனிதம், ஐயறிவாம் மிருக நிலையில் நெளியும் மனிதப் புழு, ஆறறிவாம் கூட்டுப் பழுவாகி அகத் தவத்தில் ஆழ்ந்து தவ முடிவில் ஆறறிவின் முழுமையில் பரிணாமப் பாய்ச்சலாய் ஏழாம் அறிவு தேவப் பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும் அதிசயம். வன்பின் சூடு ஆறு! அன்பெனும் தண்மையில் எழு!

8 = இசைவை இணக்கத்தை சமரசத்தை எட்டு! ஏழாம் அறிவின் மெய்ஞ்ஞானம் எட்டு வடிவ சிவசத்தி ஓட்டமாய் மெய்யெங்கும் பரவுதல், நிராதார ஆறாதார ஒருமை.

9 = 8ன் மைய இருதயப் புள்ளியில் குவிந்து அன்பே சிவமாம் தன்மையுணர்ந்து, தயவாய் வெளியே வழியும் இயக்கம், அருட்பேராற்றல்.

10 = அன்னை பூமியில் சொர்க்கம் வெளிப்படுதல், அன்பே சிவமாம் ஒருமை வெட்டவெளியில் பட்டப்பகல் வெளிச்சமாய் அன்னை பூமியெங்கும் வெளிப்படுதல்.

11 = தான் கடவுளின் தூய ஊடகமே என்று தன்னையறிந்த முத்தி நிலை, இசைவு, இணக்கத்தின் உச்சம், 11க்குள் 8 வடிவ சிவசத்தி ஓட்டம் தங்கு தடையின்றிப் பாயும் நிலை. அருளாட்சி

12 = ஞால வட்டத்தின் பரிதி நிறைவுறுதல், ஞால முழுமை, குரு வல்லபம், சித்தி

13 = ஞாலத்தில் குரு மையம் நானே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: