பிப்ரவரி 10th, 2011 க்கான தொகுப்பு

நானே

பிப்ரவரி 10, 2011

நானென்றும் தானென்றும் நாடினேன்! நாடலும்
நானென்று தானென்று இரண்டில்லை என்று
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே – திருமூலரின் திருமந்திரம்

தன்முனைப்பு “நான்” தன் வேர்மூல இருப்பிலிருந்து விலகும் போது நான், தான் என்ற இருமை மருள் ஏற்படுகிறது! தன்முனைப்பு “நான்” தன் வேர்மூல இருப்பில் நிலை கொள்ளும் போது, “இருக்கிறேன்” என்ற தன்னுணர்வுத் தெருளுக்கு முதலாகிறது, அப்போது இருமை மருள் நீங்கி “நானே” என்ற ஒருமைப் பேருணர்வு எழுகிறது. இதையே நானென்று நான் என் மெய்யுணர்ந்து, இருப்பில் உய்ந்து எல்லா நினைப்புகளையும், திருமூலர் என்ற நினைப்பையுங் கூட விட்டு விட்டேன்! “சும்மா இரு சொல்லற” என்ற அருணகிரி நாதரின் வாசகத்தின் பொருள் இதுவே!

நான் என்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே! இது திருமூலர் வாசகம்!

நானென்று நான்” என்ற சொல் பரம்பிதா மோசேவுக்கு அறிவித்த தன் பெயர், “I AM THAT I AM(விவிலியம்-பழைய ஏற்பாடு)” “இருக்கிறவனாய் இருக்கிறேன்” அதாவது “நான் நானே தான்“, இரத்தினச் சுருக்கமாக “நானே“! இதுவே பரமபிதா சுத்த சிவத்தின் பெயர்!

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் – இயேசு கிறிஸ்து
நானே முதலும் நடுவும் முடிவுமாய் இருக்கிறேன் – சற்குரு கண்ணன்

எனவே “நானே” என்ற நற்றமிழ்ச் சொல் இறைப் பேருணர்வாம் ஒருமையை ஆன்ம நேயத்தைக் குறிக்கிறது!

Advertisements

மாயா நிலையம் – 11

பிப்ரவரி 10, 2011
ஹுனாப்-கு(Hunab Ku)

படம்

சுழியத்தை மாயர்கள் ஹுனாப்-கு(Hunab Ku) என்று அழைப்பார்கள், அதன் படம் மேலுங் கீழும்!

படம்

நன்றி: மாயன் மேஜிக்ஸ்.காம்

ஹுனாப்-கு(Hunab Ku) படிமங்களோடு கூடிய அசையும் வண்ணப் படம்

படம்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 27

பிப்ரவரி 10, 2011

அன்றெனக் கடந்தவனே உண்டென இறைந்தவனாம்
தெற்றென விளங்கிடலே ஞானம்

Transcendental Godhead(Father Most High) is the Immanent Godhood(Divine Primordial Mother). Full Realization of this Unity is Wisdom(Gnosis)

கடவுள்(நிர்க்குணப் பிரம்மம்) = இறைவன்(சகுணப் பிரம்மம்)

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 10, 2011

வள்ளலே! நெஞ்சின் கண்சலம் எப்படிச் சுரக்கும்? வன்மனப் பிடியில் சிக்கித் தவிக்கும் எமக்கு நீவிர் செய்தருளியுள்ள தந்திர மெய்வழி எப்படி விளங்கும்?

179

அன்பின் சமரசம் என்றும் விழித்துள
நெஞ்சம் அதிசயம் செய்யும்

நெஞ்சம் மறைக்கும் வஞ்சச் செயற்கை
விட்டால் திறக்கும் மெய்வழி

அன்பே இயற்கை உண்மை! விளங்க
நெஞ்சே சுரக்கும் உண்*மை!
(உண்*மை! = உண்ணும் மையாகிய அமுதம்)

உண்!மை புன்னோய் தீர்க்கும் அன்பே
உண்*மை! சொன்னோம் உண்மை!
(உண்!மை = உண்பாயாக மையாகிய அமுதத்தை)