வள்ளலார் அருள் வாக்கு

189

கற்பூர தீபம் மெய்த்தேக ரூபம்
மெய்ஞ்ஞான போதஞ் சாரம்

190

சாரம் மறந்த ரூபத் திரிபேவெண்
காயம் மறைக்கும் வெங்காயம்

191

மெய்ஞ்ஞான போதம் ஞாபகங்கொள் உரியும்
வெங்காயம் தெரியும் வெண்காயம்

192

வெண்காயச் சுத்த தேகங் கொண்டே
கற்பூரச் சுகந்தம் வீசு

193

வெண்தயத் திருத்தலம் இருதயச் சீரகம்
உய்ந்திடத் திருந்திடும் வெங்காயம்

வெண்தயத் திருத்தலம் இருதயச் சீரகம்
உய்ந்திடப் பொருந்திடும் வெண்காயம்

194

இருதயப் பெருமையை வாய்ப்பறை யறைந்தோம்
அருந்தயா நிதியைச்சேர் மகவே

195

உண்*மை அன்பை உண்டால் மெய்ம்மைத்
திண்மை சொன்னோம் வாய்மை

196

வாய்மை புகன்றிடும் வள்ளன்மை அன்பின்
தாய்ப்பால் பருகிடு மகவே

197

ஆறாம் அறிவைத் தாண்டி முகிழும்
ஏழின் கனிவே இருதயம்

198

ஏழாந் திருமுறை இருதயப் பிழிவே
பேராப் பெருநிலை சேர்க்கும்

199

வஞ்ச நாக வாயில் பிழிந்தோம்
நஞ்சு முறித்தோம் யாம்

200

நல்ல பாம்பின் இருதய வாய்மை
வள்ள லார்எம் அருண்*மை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: