வள்ளலார் அருள் வாக்கு

201

பேதபாவம் அசைவம் ஆன்மநேயஞ் சைவம்
ஆதிமூலம் அன்பே உண்*மை

202

வள்ளலே! சன்மார்க்கம் யாதோ?

சத்திய மார்க்கம் கருணைக் கடவுளெம்
அன்பருட் தயவை வார்க்கும்

உய்வழி யார்க்கும் மெய்வழி சேர்க்கும்
சத்திய மார்க்கம் சன்மார்க்கம்
(மெய்வழி = மெய்யுடம்பின் வாயிலாக)

மெய்யகம் ஒளிந்த ஆதி இருதயமாஞ்
சத்தியம் விளக்கும் மெய்வழி

உண்*மை விளக்கும் வாய்மை புகட்டி
மெய்ம்மை உணர்த்துங் குருநெறி

அன்பை ஊட்டி அறிவைஅருண் மயமாக்கிக்
கண்மை நாட்டுந் தயாமார்க்கம்

நெஞ்சக் கனிரசம் தலைக்குள் ஏற்றி
அன்பின் அனுபவந் தருமார்க்கம்

தலைகால் ஆட்டும் புனலென அன்பின்
தலை*மை காட்டும் நன்மார்க்கம்

வள்ளல் ஆரென உணர்த்த அன்பின்
துள்ளல் பாரெனுஞ் சன்மார்க்கம்

வற்றிப் போகாப் புனலது அன்பின்
உண்*மை ஊட்டுஞ் சன்மார்க்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: