வள்ளலார் அருள் வாக்கு

204

ஆட்கள் பின்னே ஓடாமல் மெய்யுள்
ஆன்ம உண்மை நாடு

205

ஆன்ம உண்மை ஒவ்வொன் றுள்ளும்
ஆழ்ந்த உயிர்மை யாம்

206

நாதர் குருநபி கிறிஸ்து நியதி
ஆன்ம உண்மை யாம்

207

சுட்டும் ஆட்களை விட்டு அவர்தாம்
சுட்டும் ஓர்நியதி பிடி

208

ஆட்கள் யாவரும் நியதியில் அடக்கம்
ஆன்ம உண்மை அது

209

நியதி அதிரும் நிர்மல இருதயம்
நினது புதிரை அவிழ்க்கும்

210

ஆன்ம உண்மை நியதி அன்பறி
வாற்றல் நெஞ்சின் நிசம்

211

நெஞ்சின் நிசத்தை மறைக்குங் கருமன
வஞ்ச விடத்தை முறி

212

கற்பனை கடந்ததாம் நெஞ்சின் நிசமது
கல்லிலும் படத்திலும் பிடிபடா

213

நெஞ்சின் நிசமது மெய்யுளே விழிக்கும்
விஞ்ஞை நிகழவே தவஞ்செய்

214

எவ்வுயிரும் நின்னுயிர்போல் போற்றுந் தவத்தால்
எள்ளளவும் துன்பமில்லை நினக்கு

215

நின்னுயிரும் எவ்வுயிரும் வருத்தாமல் தயவாய்
என்றுமிரு நித்தியமாய் வாழ்வாய்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: