பிப்ரவரி 21st, 2011 க்கான தொகுப்பு

மாயா நிலையம் – 21

பிப்ரவரி 21, 2011
மாயன் நாட்காட்டி மாயாத் தமிழில்

படம்

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 37

பிப்ரவரி 21, 2011

மெய்யுள்ளே சுத்த ஆவியாய் ஓடும்
எந்தையைச் சுட்டுஞ் சுதன்

மனவயப் பட்டாய் எண்ணச் சுழலில்
இருதயம் விட்டாய் நீ

இருதயம் பற்றியே எண்ணச் சுழலை
இருப்பினில் மொத்தமாய்க் கழி

சும்மா இருக்கலாஞ் சுகமாய் இருதயத்
துள்ளே சுருண்டால் மனம்

காலச் சுழற்சியுங் கரும வினையும்

ஞான யோகத்தால் கழியும்

பேதம் போற்றும் மனத்தை இருதய

நேசத் தூன்றித் திருத்து

இசங்களைத் தாண்டி இதத்தில் மனத்தை
இருத்தினால் இருதயந் திறக்கும்

உள்மெய் ஏகமே அநேகமாய் விரிந்தும்

மெய்யுள் ஆடுமோர் உயிர்

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 21, 2011

232

What is the Heart’s Secret? The Heart Secretes Nectar of Divine Love Which Circulates throughout the Body-Mind! Heart Is the Inmost Core of Soul veiled by the fictitious personality of ego(the illusion of arrogance & ignorance). Ignore ego and Be Mindful of the Heart to Unravel the Heart’s Secret! If you ignore the Heart in mindless slavery & servitude to the ego, you cannot Unravel the Heart’s Secret.

BE HEART & BREATHE THE NECTAR OF DIVINE LOVE NOW-HERE! KNOW WHERE THE HEART IS! HEART IS THE CENTER OF YOUR BEING THAT IS EVERYWHERE! NOWHERE CAN YOU FIND THE HEART BUT WITHIN! KNOCK WITH FULL-BLOODED MINDFULNESS IN FULL EARNESTNESS THE CENTER OF YOUR CHEST AND GOD WILL SURELY OPEN HIS BOSOM SO THAT YOU EARN THE NEST OF GOD, YOUR OWN HEART, THE VERY ABODE OF LOVING GRACE & MERCIFUL COMPASSION!

இருதய ரகசியம் யாதோ இறையருட்
கனியது பிழிந்திடும் நேசம்

நேசச் சமரசம் மனமுடல் முழுதும்
ஆழப் பரவிடப் பரவசம்

ஆன்ம ஆழக் கருவே இருதயம்
ஆணவ மாயை மறைக்கும்

ஆணவத்தை அலட்சியஞ் செய்தே கவனம்வை
ஆன்மக்கரு இருதயம் மேல்

இருதயத்தை அலட்சியஞ் செய்தே ஆணவத்தின்
அடிவருட அவிழுமோ ரகசியம்

இருநீ இருதயமாய் நேசக் கனிரசத்தை
இழுநீ திருவருண்மூச் சது

நின்னிருப்பின் மையம் இருதயம் வியாபகமாய்
எங்குமுள்ள உண்மை அ(உ)து

நின்னுள் ளுள்ளே யன்றி வேறெங்கு
உள்ளம் உணர்வாய் சொல்

மார்பு நடுவைக் கவனமாய்த் தட்டு
வாஞ்சை முழுதுந் தேக்கி

தட்டத் திறக்கும் இறைவன் கருவறை
நெஞ்சம் நினதே அது

அன்பருள் தயாமயக் கருணை ரசமுள
நின்னிரு தயஞ்சிவக் கனி