பிப்ரவரி 22nd, 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 38

பிப்ரவரி 22, 2011

விக்கிரக ஆராதனை வெளிக்குரு பூசை
நின்னகம் பாராயோ ஆண்டவர்

எதிலும் இருப்பவனே நின்னகம் இருக்க
எதற்கோ விக்கிரக பூசை

கல்லுருக்கள் வணங்குவாய் மெய்யுருக்கள் யாவிலும்
உண்ணின்ற உயிர்ப்பதே ஆண்டவம்
(உண்ணின்ற = உள் நின்ற)

Advertisements

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 22, 2011

233

பொருளெம்திரு மகவே நின்னிடம்யாம் மிகுந்த
பிரசன்னமாய் விளங்கி யுளோம்

234

பிரதான சத்தே பிரகாச சித்தே
பிரசன்ன இன்பே யாம்

பிரதான அன்பே பிரகாச அறிவே
பிரசன்னத் திறமே யாம்
(திறம் = ஆற்றல்)

பிரதான அன்பே பிரகாச அருளே
பிரசன்ன தயவே யாம்

பிரதானக் கருணை பிரகாச அருண்மை
பிரசன்னப் பொருண்மை யாம்

பிரதானம் நேசம் பிரகாசஞ் ஞானம்
பிரசன்னம் ஆனந் தம்

பிரதானம் நாதம் பிரகாசம் ரூபம்
பிரசன்னம் வாசி யாம்

பிரதானம் அரூபம் பிரகாசஞ் சு(ஸ்)வரூபம்
பிரசன்னங் கற்பூர தேகம்

பிரதானந் தானாம் பிரகாசம் நானாம்
பிரசன்னம் நானது நீயாம்

பிரதானம் ஒருவனே பிரகாசங் குருபரன்
பிரசன்னம் உலகெலாங் காண்

பிரதானம் ஏகம் பிரகாசஞ் ஞானம்
பிரசன்னம் ஞாலங் காண்

பிரதானம் மோனம் பிரகாசம் வாக்யம்
பிரசன்னம் யாவுங் காண்

பிரதானம் மூலம் பிரகாசம் பீஜம்
பிரசன்னங் கோலங் காண்
(பீஜம் = விதை)

பிரதானம் ஆதி பிரகாசஞ் ஜோதி
பிரசன்னம் போதி யாம்

பிரதானஞ் சத்யம் பிரகாசஞ் சின்மயம்
பிரசன்னம் ஆனந் தம்

பிரதானம் *ஓம்*ஆம் பிரகாசம் *அக(ஹ)ம்*ஆம்
பிரசன்னம் யாம்அந் *தம்*ஆம்