பிப்ரவரி 25th, 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 41

பிப்ரவரி 25, 2011

தீட்டெனும் மனக்காட்டம் நின்பால் ஆண்டவர்
ஓர்கணம் கொண்டால்நீ பிணம்

மனத்தில் தூய்மையைப் பேணாமல் விட்டு
சனத்தில் பார்ப்பானே தீட்டு

வாழுஞ் சனத்திலே பாழுந் தீண்டாமை
காணும் மனப்பிணி ஒழிக

உயிரில் ஒட்டாத் தீட்டு மெய்யுள்
உய்ந்தது எப்படிக் கூறு

பிறப்பிலொத்தநல் உயிர்களைச் சிறப்பிக்கும் மெய்களைப்
பிடித்ததெப்படிப் பொல்லாத் தீட்டு

காற்றுனைத் தான்தீண்ட மறுத்தால் நின்னுயிர்
போச்சலோ பார்ப்பாயோ தீட்டு

Advertisements

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 25, 2011

நீவிர் இராமலிங்கனா, வள்ளலாரா?

249

ராமலிங்கன் கரைந்தான் வள்ளலார் அன்பில்தான்
நாமரூபங் களைந்தான் ஒளிந்தான்

இது அனைவருஞ் செய்யக் கூடியதா? இடுவதும் சுடுவதும் வாடிக்கையாகிப் போன எம் பிழைப்பில் மரணமிலாப் பெருவாழ்வு சாத்தியமா? நம்ப முடியவில்லையே!

250

நாகராசன் விரைந்தால் வள்ளலார் அன்பில்தான்
ஞானமாகும் உரைத்தேன் கள்ளச்சா வெல்லத்தான்
பாரிலாரும் உய்ய லாகுமே அன்பில்தாம்
வேரிலாத மாயை மாயத்தான்

கேட்பதற்கு இனிக்கிறது, நடைமுறைப் படுத்த முடியுமா என்ற ஐயமும் எழுகிறது.

251

ஐயமின்றியே உணர்வாய்ப்பெரு வல்லபம் அன்பேதான்
ஜெயமுண்டடா நீவிழித்திரு தயவாய்