ஏப்ரல் 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 101

ஏப்ரல் 30, 2011

மன்னிப்பால் கருமத் தளைகள் வெட்டி
மெய்க்குள்பார் உயிர்ப்பூ அமைப்பு

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 100

ஏப்ரல் 29, 2011

1. மன்னிப்பு = Forgiveness(Pink)
2. உயிர்ப்பூ அமைப்பு = Structure(Flower of Life)(Lavender)
3. ஆற்றல் = Power(Peach)
4. தயவு, கருணை = Compassion(Turquiose)
5. வாசிப்பூ = Breath of Life(Gold)
6. பேரன்பு = Non-conditionaal Love(Silver)
7. முத்தி = Freedom(Golden White)
8. ஆன்ம நேய ஒருமை = Unity Consciousness(Pale Pink)
9. சத்திசிவ ஐக்கியம் = Divine Union(Pale Lavender)
10. அருளாட்சி = Non-conditional Governance(Ivory, Pale Golden White)

ஒளிப்பூ பத்துமே மெய்க்கு உயிர்ப்பூ
வெளிசேர் மெய்வழி வாசி

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 99

ஏப்ரல் 28, 2011


அருளாட்சி = Non-conditional Governance

அருளாட்சி இற(ர)ங்கும் மெய்வழி நின்னுள்சற்
குருநாதர் திறக்க உயிர்ப்பூ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 98

ஏப்ரல் 27, 2011


சத்திசிவ ஐக்கியம் = Divine Union

சத்திசிவ ஐக்கியம் உச்சிமேல் உணர்த்தும்
சற்குருவைச் சார்நடு நின்னகம்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 97

ஏப்ரல் 26, 2011


முத்தி = Freedom

கரும வினைகள் கரைக்கும் மன்னிப்பால்
தரும நெறிசேர் முத்தி

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 96

ஏப்ரல் 25, 2011


ஆன்ம நேய ஒருமை = Unity Consciousness

ஒருமையில் ஊன்றி உயிர்களைப் பேணும்
இருதயத்தே தீரும் இரு(ண்)மை

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 95

ஏப்ரல் 24, 2011


தயவு, கருணை = Compassion

தயவாய் இருந்து இகத்தில் பரமே
சுயமாய் உணர்க அகத்தில்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 94

ஏப்ரல் 23, 2011

நிபந்தனைகள் ஏதுமற்ற பேரன்பில் தோய்ந்து
பவத்தளைகள் யாவுமற உய்


பேரன்பு = Non-conditional Love

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 93

ஏப்ரல் 22, 2011


வாசிப்பூ = Breath of Life

வாசிப்பூ வாசம் வாசியாமல் பரலோக
வாசியைச் சேரல் எப்படி

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 92

ஏப்ரல் 20, 2011


மெய்யுணர்வு = Consciousness

சிவக்கோளம் வலத்தே சத்தியது இடத்தே
குருக்கோளம் நடுவே முப்பூ

முப்பூ = Triple Sphere Flower Pattern