Archive for the ‘கட்டுரைகள்’ Category

மாயா நிலையம் – 21

பிப்ரவரி 21, 2011
மாயன் நாட்காட்டி மாயாத் தமிழில்

படம்

Advertisements

மாயா நிலையம் – 19

பிப்ரவரி 19, 2011

மாயாத் தமிழ் வரி வடிவம் – தொன்மையான கலாசாரங்களை இணைக்கும் புது முயற்சி

மாயர்களின் எண்-படிமக் குறியீடுகளில் நற்றமிழ்

உயிர்கள்

படம் = அ(1)
படம் = ஆ(2)
படம் = இ(3)
படம் = ஈ(4)
படம் = உ(5)
படம் = ஊ(6)
படம் = எ(7)
படம் = ஏ(8)
படம் = ஐ(9)
படம் = ஒ(10)
படம் = ஓ(11)
படம் = ஔ(12)

ஆய்தம்

படம் = அஃ(13)
இப்பதின்மூன்றும் ஒவ்வொரு சக்கரத்திலும் ஓடும் சுழியத்தின்(‘ஹுனாப்-கு’வின்) உயிர்மை

மெய்கள்

படம் = க்(1)
படம் = ங்(2)
படம் = ச்(3)
“க், ங், ச்” மூன்றும் யாவுக்கும் ஆதி மூலமான திரித்துவ ஒருமையைக் குறிக்கின்றன.
முதல் மூன்று மெய்களும் அகரமுதல் சுழியத்தின்(“ஹுனாப்-கு”வின்) பெருமை!
படம் = ஞ்(4) = மூலாதாரம்(முதுகடி)
படம் = ட்(5) = சுவாதிட்டானம்(நாபியடி)
படம் = ண்(6)= மணிபூரகம்(நாபி)
படம் = த்(7) = சூர்ய சக்கரம்(உதரவிதானம், மார்படி)
படம் = ந்(8) = அனாகதம்(நடு மார்பு)
படம் = ப்(9) = அமுத கலசம்(தொண்டையடி, தைமஸ் சுரப்பி)
படம் = ம்(10) = விசுத்தி(தொண்டை)
படம் = ய்(11) = ஆக்கினை(நெற்றி நடு)
படம் = ர்(12) = சஹஸ்ராரம்(தலை உச்சி)
ஞ் முதல் ர் வரை இகக் குண்டலி ஏற்றம்
படம் = ல்(13) = நிராதாரப் பாலம்(தலைக்கு மேல்)
ல் நிராதாரம் ஆறாதாரத்தில் இறங்கும் மெய்வழிச் சாலை!
படம் = வ்(14) = நிராதார முதல் நிலை(தலையுச்சியில் பொருந்தும்)
படம் = ழ்(15) = நிராதார 2ம் நிலை(நெற்றி நடுவில் பொருந்தும்)
படம் = ள்(16) = நிராதார 3ம் நிலை(தொண்டையில் பொருந்தும்)
படம் = ற்(17) = நிராதார “நான்”காம் நிலை (நடு மார்பில் பொருந்தும்)
படம் = ன்(18) = நிராதார “ஐ”ந்தாம் நிலை(நாபியில் பொருந்தும்)

அசபை(சிறப்பு மெய்கள்)
(அஜபா காயத்ரி-ஜெபியாமலே வாசியில் ஓடும் மந்திரம், உள்மூச்சில் “ஸ” என்றும் வெளி மூச்சில் “ஹ” என்றும் – ஹம்ஸம் – மெய்ஞ்ஞானக் குறியீடான அன்னம்)

படம் = ஸ்(19) = நிராதார ஆறாம் நிலை(நாபியடியில் பொருந்தும்)
படம் = ஹ்(20) = நிராதார ஏழாம் நிலை(முதுகடியில் பொருந்தும்)

இவ்விருபதும் சுழியத்தால்(“ஹுனாப்-கு”வால்) தயவாய் வழங்கப்படும் தத்தம் சக்கரங்களின் மெய்மை!

மாயா நிலையம் – 17

பிப்ரவரி 17, 2011
சிவப்புப் படிமங்கள் ஐந்தும் கிழக்கு திசையைக் குறிக்கின்றன

படம்அருட்தாய்(ஈமிஷ் – IMIX)
படம்குண்டலி நாகம்(சிக்சன் – CHICCHAN)
படம்தனிப்பெருங்கருணை(முலூக் – MULUK)
படம்நிராதார மேம்பாலம்(பென் – BEN)
படம்இருதயத் திரு பூமி(கபன் – CABAN)


வெள்ளைப் படிமங்கள் ஐந்தும் வடக்கு திசையைக் குறிக்கின்றன.

படம்அருட்தந்தை(ஈக் – IK)
படம்மறு பிறப்பு(கீமி – CIMI)
படம்நாயகம்(ஆக் – OC)
படம்பரஞான போதம்(ஈஷ் – IX)
படம்சத்திய தரிசனம்(எட்ஜ்னாப் – ETZNAB)

நீலப் படிமங்கள் ஐந்தும் மேற்கு திசையைக் குறிக்கின்றன.

படம்சற்குரு(அக்பல் – AKBAL)
படம்அருட்கரம்(மணீக் – MANIK)
படம்இறை மகவு(ஷ்வென் – CHUEN)
படம்தூய நோக்கம்(மென் – MEN)
படம்அதிசயப் பரிமாற்றம்(கவாக் – CAUAC)

மஞ்சட் படிமங்கள் ஐந்தும் தெற்கு திசையைக் குறிக்கின்றன.

படம்குரு வித்து(கன் – KAN)
படம்அருட்பெருஞ்ஜோதி(லமட் – LAMAT)
படம்அமர மனித எழுச்சி(எப் – EB)
படம்குரு மந்திர அக தீட்சை(கீப் – CIB)
படம்ஜோதி ஸ்வரூபம்(அஹாவ் – AHAU)

மாயா நிலையம் – 16

பிப்ரவரி 16, 2011

கண்ணெனத் தகும்
எண்ணும் படம்
எழுத்தும் படம்
உம் பார்வைக்கு!



மாயா நிலையம் – 15

பிப்ரவரி 15, 2011

மாயர்களில் இரண்டு சாரார் உண்டு, ஒரு சாரார்(மரபு வழியினர்) அக்டோபர் 28, 2011 முடிவு நாள் என்றும், இன்னொரு சாரார்(நவீனர்) டிசம்பர் 21, 2012 என்றும் சொல்கின்றனர்! நான் மரபு வழியினரைப் பின் பற்றியே தமிழாக்கம் செய்திருக்கிறேன், நவீனரின் பங்கீடும், மாயன் நாட்காட்டியை உலகப் பிரசித்தி செய்த அவர்களின் முயற்சியும் போற்றுதலுக்குரியதே! முடிவு நாள் உலக அழிவைக் குறிப்பதல்ல, மனித உணர்வில் நிகழவிருக்கும் பரிணாமப் பாய்ச்சலையே முடிவு நாள் குறிக்கிறது! அந்தப் பாய்ச்சலைத் தாக்குப் பிடிக்க நாம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்! எனவே தான் “நான் இன்னொரு நீ!” என்று ஒவ்வொருவரையும் பார்த்து சொல்ல முடிந்த மன இதத்தில் நாம் கனிவது மிகவும் அத்தியாவசியம்!

“ந”கர மெய்ஞ்ஞானம்!

பிப்ரவரி 11, 2011

படம்
மேலே வட்டத்துக்குள் எழுந்தருளியிருக்கும் ‘ந’ என்னும் தமிழுக்கே உரித்தான சிறப்பெழுத்து, நடம் ஆடும் ‘ந’டராசர் போல் தெரிகிறதல்லவா! பழந்தமிழன் சொல் முதலில் வரும் ‘ந’வுக்கும் வேறு இடங்களில் வரும் ‘ன’வுக்கும் உச்சரிப்பில் இருக்கும் சூக்கும வித்தியாசத்தை உணர்ந்து இரண்டிற்கும் தனி வரி வடிவங்கள் வழங்கியிருப்பது அதிசயம் தானே!

நான் = ந்+ஆன்

ந் = பரமான்மா(நடராசன்) = பதி

ஆன் = பசு = ஜீவான்மா = பசு

நான் = பொய்ப்பாசங்கள் யாவும் களைந்து பதியோடு இரண்டற ஒன்றிய பசு, பரமான்மா-ஜீவான்மா ஒருமை = அத்வைதம்

‘ந்’ என்ற மெய்யெழுத்தில் மேற்புள்ளி அசையா நிலை ஆதி சிவத்தையும், ‘ந’ அசையும் நிலை அருட்சத்தியையும் குறிக்கிறது!

நான் = ந்+ஆ+ன்
ந் = சிவம்
ன் = சக்தி

சிவமும் சக்தியும் வெவ்வேறல்ல என்று ‘ந்’ மற்றும் ‘ன்’ உச்சரித்தால் விளங்கி விடும், ஆதி முதலாகச் சிவம் “நான்” சொல் முதலாய்!(சொல் மட்டுமல்ல ‘நான்’ எனும் உம் உணர்வின் முதலுங் கூட!)
ஆதி முதல் சிவத்தின் அருள் விளைவாய் ‘ன்’ சொல் முடிவில்!(சொல் மட்டுமல்ல ‘நான்’ எனும் உம் உணர்வின் முடிவுங் கூட!)
ஆ = நந்தி = குரு = சிவசக்தி மெய்கள் உயிரில் ‘ஆ’ என்ற நெடிலாய் ஓங்கும் ஒருமை, நடு நிலைமை, சிவசக்தி ஐக்கியம் உணர்த்தும் நெடிய உயிர்ப்பாய் ‘ஆ’ சொல் நடுவில்!( (சொல் மட்டுமல்ல ‘நான்’ எனும் உம் உணர்வின் நடுவுங் கூட!)

இதுவே நாயேன் அறிந்த நாயகனைச் சுட்டும் “நான்” என்ற நற்றமிழ்ச் சொல்லின் மெய்ப்பொருள் விளக்கம்!

“நானே முதலும்(ந்), நடுவும்(ஆ), முடிவுமாய்(ன்) இருக்கிறேன்”
குரு கண்ண பிரானின் அருள் வாக்கு விளங்க, உமக்குள் “நான்” என்ற நாயகனை அறிவீர்!

நாயாரின் “லொள், லொள், லொள்” என்ற லொள்ளு, “நான், நான், நான்” என்ற தெள்ளுதமிழின் நாய்மொழிப் பெயர்ப்போ!

நந்தி

பிப்ரவரி 11, 2011

நந்தி என்று சற்குரு தத்துவத்தைச் சுட்டும் நற்சொல்
சிவத்தைச் சேரத் திறந்திருக்கும் மெய்வழியைச் சுட்டும் அருஞ்சொல்
சிவத்துக்குக் குறுக்கே தடையாகத்
தன் மெய்ப்பொருள் திரிக்கப்பட்டாலும்
நந்தியார் எழுந்து
தம் கொம்புகளால் தன் மெய்ப்பொருள் திரித்த மனிதரை
முட்டப் போவதில்லை!
நந்தி சிவத்தின் பேர்களிலும் ஒன்று!
எண் “11” போல் விளங்கும் நந்தியின் கொம்புகள் ஒருமையுணர்வில் கடவுளின் தூய ஊடகமாகும் மெய்ஞ்ஞானத்தின் குறியீடு.

11 ஐ கவனியுங்கள்!

11

மேலும் கதவு திறந்திருக்கிறது, சஹஸ்ரார சக்கரம் வழியே சிவத்தோடு உமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை அறிவுறுத்துகிறது!

கீழும் கதவு திறந்திருக்கிறது, மூலாதார சக்கரம் வழியே சக்தியோடு உமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை அறிவுறுத்துகிறது!

ஆக சிவ இறக்கமும் இரக்கமும், சக்தி எழுச்சியும் ஏற்றமும் உம்மில் நிகழ நீரே நந்தி குரு!

மேலே கதவை மூடி அஞ்ஞானமே கதியென்று
கீழே கதவை மூடி அச்சமே விதியென்று கிடந்தால்
நந்திக் கொம்புகள் வழியே(It is an Always Open Portal, Window to see Godhead) சிவனைப் பார்க்கும்
சடங்கின் மெய்ப்பொருள் எவ்வாறு விளங்கும்!

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என் வழியாக அல்லது எவரும் பரமபிதாவை அடைய முடியாது
என்ற குருநாதர் இயேசு கிறிஸ்துவின் வாசகத்தை, அமைதியாக எருதுருவில் சிவப் பிதா முன் அமர்ந்து உணர்த்தும் நந்தி குரு சிவத்துக்குக் குறுக்கே ஒரு தடையா! “ஒருமையுணர்வன்றி வேறெந்த ஆறறிவுத் தாஜா வேலைகளால், தந்திரங்களால் சிவத்தைச் சேர முடியாது” என்பதே நந்தி தத்துவம், அதன் விளக்கம் மேலிருக்கும் இயேசு நாதரின் குரு வாசகமே!

நந்தி = நான்தான்’ஐ’
பின்னதை வெகு வேகமாக மொழிந்தால் முன்னது வரும்!
முன்னதன் பொருள் புரிந்து ஒருமையுணர்வில் தயவாய் நீர் நின்றால் நீரே சிவம்!

திருமூலர் எனக்கு உபதேசித்த அதிசயம்!

பிப்ரவரி 11, 2011

ஆங்கிலத்தில் நான் எழுதியிருந்த சமர்ப்பண தியானத்தை, நான் தமிழ்ப்படுத்த முயன்ற போது மிகவும் சிரமப்பட்டேன். பல மாதங்கள் முயன்றும் முடியவில்லை. ஆனாலும் முயற்சியை விடவில்லை. ஒரு நாள், அண்ணா சாலையிலுள்ள “ஹிக்கின்பாதம்ஸ்” புத்தகக் கடையில், திருமந்திரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ஐயன் திருமூலரிடம் வேண்டினேன்: “எனக்கு 3000 மந்திரங்களைப் படிக்க நேரமில்லை. இந்த “நான்” பற்றிப் பட்டென்று விளங்குமாறு ஒரு மந்திரம் அருள மாட்டீரா?” சட்டென்று வந்தது பதில், நான் புரட்டிய புத்தகப் பக்கத்தில்:

நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென்று இரண்டில்லை யென்பது
நானென்ற ஞான(ல) முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

என்ன அருமையான விளக்கம். அன்றிரவே தமிழில் இத்தியானத்தை எழுதி முடித்தேன்.

நான் ஆணவமில்லை. நான் என்ற இறைப் பொருளை, “இன்னது” என்ற ஒரு குறுகிய அடையாளமாக மனிதன் மாற்றும் போது, சிறுமைப் படுத்தும் போது, உருவாகும் தான் என்பதே ஆணவம். “இன்னது” என்று எண்ணற்ற பல குறுகிய அடையாளங்கள் இருப்பதால், ஆணவம் போடும் ஆர்ப்பாட்டக் கோலங்கள் எண்ணிலடங்கா.

இந்த நான்கு வரிகளில் ஒரு ஞானியின் சுய சரிதம் அடங்கி விடுகிறது.

பல பிறவிகளாக நான் என்ற இறை நிலை, தான் என்ற ஆணவ நிலை என்ற இருமை அதாவது துவைத நிலையில் நாடினேன். இவ்வாறு பல பிறவிகளாக நாட, ஒரு பிறவியில் நான் பக்குவமடைந்த போது, நான் என்ற இறை நிலை, தான் என்ற ஆணவ நிலை என்ற இருமை அதாவது துவைதம் பொய்யென்றும், நான் என்ற இறை நிலை ஒருமையே அதாவது அத்வைதமே மெய்யென்றும், ஞானத்துக்கும் ஞாலமாகிய இவ்வுலகத்துக்கும் தலைமைப் பொருளாகிய நான் என்ற இறை நிலை ஒருமையே எனக்கு அறிவித்தது. தான் என்ற ஆணவ நிலையாகிய எல்லா ஆர்ப்பாட்ட நினைப்புகளையும்(திருமூலர் என்ற நினைப்பையும் கூட) ஒழித்து நான் நானே என்ற பேருணர்வுப் பேரிருப்புப் பேரறிவு நிலையில் நான் அடங்கினேன்.

இவ்விளக்கம் திருமூலர் எனக்கு அருளியது. இது எந்தப் புத்தகத்திலும் உங்களுக்குக் கிடைக்காது. “நான் என்ற நினைப்பையே நான் விட்டேன்” என்ற முற்றிலும் முரணான கடைசி வரிக்கான விளக்கம் பல புத்தகங்களில் இருக்கும். அதற்கு முந்தைய வரியைப் படியுங்கள், “நான் என்ற ஞான(ல) முதல்வனே நல்கினான்” என்று உறுதியாகக் கூறுபவர், அம்முதல்வனை எப்படி விட்டு விடுவார், யோசிக்க வேண்டும். திருமூலர் வாசகத்தை அறிந்தால் உண்மை விளங்கி விடும்.

“நானென்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதே அது. இவ்வாசகம் திருமந்திரத்தில் இல்லை. என் முதிர்ந்த உறவினர் ஒருவர், எம் உறவினர் ஒருவரது திருமணத்தின் போது, திருமூலர் வாசகம் உனக்குத் தெரியுமா என்று கேட்டு, நான் தெரியாதே என்ற போது, இவ்வாசகத்தை எனக்கு அருளினார். அம்முதியவர் சில மாதங்களுக்குப் பின் இறைவனைச் சேர்ந்தார். நான் என்ற மெய்ப்பொருளைப் பற்றி எனக்கிருந்த ஐயங்கள் யாவும் அறவே நீங்கின, திருமூலர் வாசகத்தால். அதுவும் அம்முதியவர் எனக்கு அறிவிக்கவில்லை என்றால், இவ்வரிய வாசகத்தை நான் அறியாமலே இருந்திருப்பேன்.

மாயா நிலையம் – 12

பிப்ரவரி 11, 2011

மாயா காலச் சக்கரம்

படம்

மாயர்களின் மூன்று நாட்காட்டிகள்

ட்ஜோல்கின் = 260 நாட்கள்
ட்யூன் = 360 நாட்கள்
ஹாப் = 360+5(6) நாட்கள்

நானே

பிப்ரவரி 10, 2011

நானென்றும் தானென்றும் நாடினேன்! நாடலும்
நானென்று தானென்று இரண்டில்லை என்று
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே – திருமூலரின் திருமந்திரம்

தன்முனைப்பு “நான்” தன் வேர்மூல இருப்பிலிருந்து விலகும் போது நான், தான் என்ற இருமை மருள் ஏற்படுகிறது! தன்முனைப்பு “நான்” தன் வேர்மூல இருப்பில் நிலை கொள்ளும் போது, “இருக்கிறேன்” என்ற தன்னுணர்வுத் தெருளுக்கு முதலாகிறது, அப்போது இருமை மருள் நீங்கி “நானே” என்ற ஒருமைப் பேருணர்வு எழுகிறது. இதையே நானென்று நான் என் மெய்யுணர்ந்து, இருப்பில் உய்ந்து எல்லா நினைப்புகளையும், திருமூலர் என்ற நினைப்பையுங் கூட விட்டு விட்டேன்! “சும்மா இரு சொல்லற” என்ற அருணகிரி நாதரின் வாசகத்தின் பொருள் இதுவே!

நான் என்றிருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே! இது திருமூலர் வாசகம்!

நானென்று நான்” என்ற சொல் பரம்பிதா மோசேவுக்கு அறிவித்த தன் பெயர், “I AM THAT I AM(விவிலியம்-பழைய ஏற்பாடு)” “இருக்கிறவனாய் இருக்கிறேன்” அதாவது “நான் நானே தான்“, இரத்தினச் சுருக்கமாக “நானே“! இதுவே பரமபிதா சுத்த சிவத்தின் பெயர்!

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் – இயேசு கிறிஸ்து
நானே முதலும் நடுவும் முடிவுமாய் இருக்கிறேன் – சற்குரு கண்ணன்

எனவே “நானே” என்ற நற்றமிழ்ச் சொல் இறைப் பேருணர்வாம் ஒருமையை ஆன்ம நேயத்தைக் குறிக்கிறது!