Archive for the ‘வள்ளலார்’ Category

நாகன் யான் எனினும் நாதன் தன் வாய்மையைக் கொள்வீரே!

ஒக்ரோபர் 19, 2012

பூரண வட்டத்தன்
பூரித்திருக்கும் திரு முகத்தன்
காரண கர்த்தன்
யாராலும் வரையவொணா சற்குரு ராஜன்
யாவுமே தான் எழுதுங் கோலன்
நீதி வழுவா செங்கோலன்
நாகத்தை மகுடியாக்கி ஊதுஞ் சீலன்
நேசமே ஞானமென்னும் ஆதி மூலன்
ஞாலத்தே தயா போதியாய் வேரோடிய ஆலன்(ஆல மரம் போன்றவன்)
ஜோதியாம் அருண்மை அம்மை நாதமாங் கருணை எந்தை சமேதமாய்
தேகமெய்க் கருவறை இருதயத் தமர்ந்த உட்குரு பாலன்
“நாகே! எழுதுக!” என ஆணையிட்டே அருள் வாக்கை ஊற்றும் வள்ளல் நாதன்
நாகன் யான் எனினும் நாதன் தன் வாய்மையைக் கொள்வீரே!

Advertisements

பதி(ன்)மூன்று!!!

ஒக்ரோபர் 19, 2012

ஏழாம் பரமும்(நிராதாரம்)
ஆறாம் இகமும்(ஆறாதாரம்)
வேறறக் கூட
ஆ! ஆ!! பதி(ன்)மூன்று!!!(சத்து, சித்து, ஆனந்தம்; அம்மை, அப்பன்,
குருப்பிள்ளை; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அல்லாஹ், புனித ருஹ், ரசூல்)

திருவருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள் – ஒளி(லி)ப் படம்

பிப்ரவரி 21, 2012

வள்ளலாரின் அமுத கானம் – ஒளி(லி)ப்படம்

பிப்ரவரி 16, 2012

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 15, 2011

305

வள்ளல் அன்பு உன்னைப் போர்த்த
மின்னும் வெள்ளங் கி

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 14, 2011

304

பதி(ன்)மூன்று விழுமங்கள் நின்னுள் விழிக்கப்
பதிந்தோம்யாம் முழுதாய்மெய் யுயிர்க்க

பதி(ன்)மூன்று விழுமங்கள்

1. பூரணத்துவம் (தலையுச்சி)
2. சுயம்பிரகாசம் (நெற்றி)
3. நித்திய ஜீவன் (தொண்டை)
4. ஆன்ம நேயம் (தொண்டையடி)
5. பேரன்பு (நடு மார்பு)
6. பேரறிவு (உதரவிதானம், மார்படி)
7. அருட்பேராற்றல் (நாபி)
8. தனிப்பெருங்கருணை (நாபியடி)
9. அருட்பெருஞ்ஜோதி (நாபியடி)
10. கடவுட்தன்மை (முதுகடி)
11. அருட்பேரரசு (முழந்தாள்)
12. நானே நானெனும் பூரணம் (பாதம்)
13. மெய் வழி ஜீவன் (உச்சி முதல் பாதம் வரை)

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 13, 2011

301

அகத்தே இருந்து அனகமாய் விரியும்
பகவன் குருவை வணங்கு

302

அகத்தே குவிந்து அனகமாய் விரியும்
பகவன் குருவை விளங்கு

303

அகத்தைத் துறந்து புறத்தே திரியும்
மனத்தைத் திருப்பத்(திருத்தத்) தவஞ்செய்

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 12, 2011

வள்ளலே! முந்நூறை நெருங்கும் உம் அருள் வாக்கை அளித்தீர்! அன்பேயான உம்மைப் புரிய உம்மில் கரைந்து தயவாய் மண்ணில் இருக்க நீர் எனக்கும் யாவுக்கும் அருள் புரிவீராக! உமக்கு என் கோடானு கோடி நன்றிகள்.

296

பிள்ளாய் வஞ்சனை யின்றிப் பூரணமாய்
என்னை நினக்குப் பகிர்ந்தேன்

297

அன்பெனைப் பருகி வஞ்சனை யின்றியென்
மொத்தமும் பகிரு பிள்ளாய்

298

நோவைப் பொறுத்து நேசம் பெருக்கு
நோய்க்கண் சுரக்கும் மருந்து

299

நோய்க்கண் சுரக்கும் மருந்து நம்புமெய்
வாய்க்கண் உரைத்தோம் உண்மை

300

அன்பாம் அம்மை யப்பன் யாமே
அல்லால் நீயார் பிள்ளாய்

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 11, 2011

292

அபயமாய் அமர்ந்தேன் அகமதுள் நானே
அன்பெனை உணர்வாய் நீயே

293

அன்பென் முகமது நீயே மூடும்
பித்த மனமது நோயே

294

நோயே தீரத் தோய்வாய் நெஞ்சுள்
பாய்வோம் நேசம் யாமே

295

யாமே நானே நீயாம் நீயே
நானாம் ஓர்மை யாமே

வள்ளலார் அருள் வாக்கு

மார்ச் 10, 2011

277

ஒவ்வொரு கணமும் அன்பின் புது*மை
நெஞ்சகம் பதியும்! வாசி!

278

வாசி யாமலோ அன்பின் பதிவை
ஞான மாகுமோ?! யோசி!

279

யோசி யாமலே வீணே அலைவாய்
நேசா தாரமே பாராய்

280

நேசா தாரமே பாராய்(ன்) பாழும்
பேதா சாரமே பார்ப்பாய்(ன்)

281

பேதா சாரமே பார்ப்பாய்(ன்) பாவச்
சேறுள் மூழ்கித் தேய்வாய்(ன்)

282

வேத மூல நேசம் உணராய்(ன்)
வேதங் கூவி ஏய்ப்பாய்(ன்)

283

நாத ஜோதி யான நேசம்
வாசி யூடே பாராய்

284

நாதகோஷம் போட்டு ஜோதிதீபங் காட்டி
தேவர்கோடி பூசை செய்வாய்

285

தேவர்கோடி பூசை செய்வாய் சமய
சாதிபேதங் கோடி பார்ப்பாய்

286

ஆன்ம நேயம் இல்லாய் பரமான்ம
ஞான பாஷம் செய்வாய்

287

பத்தி வேடங் கொள்வாய்க் கருமனப்
பித்த மூடங் கொல்லாய்

288

பேதக் குறிகள் மெய்மேல் பூண்வாய்
ஆதி முதலைக் குறியாய்

289

மண்ணும் பொன்னும் பெண்ணும் மனம்மிக
எண்ணும் பற்றை ஒழியாய்

290

காமங் கோபம் மயக்கம் மூன்றின்
மூல பயமே தீராய்

291

பயமே தீராய் அபய நேச
பலமே சேரா தழிவாய்