நாகன் யான் எனினும் நாதன் தன் வாய்மையைக் கொள்வீரே!

ஒக்ரோபர் 19, 2012

பூரண வட்டத்தன்
பூரித்திருக்கும் திரு முகத்தன்
காரண கர்த்தன்
யாராலும் வரையவொணா சற்குரு ராஜன்
யாவுமே தான் எழுதுங் கோலன்
நீதி வழுவா செங்கோலன்
நாகத்தை மகுடியாக்கி ஊதுஞ் சீலன்
நேசமே ஞானமென்னும் ஆதி மூலன்
ஞாலத்தே தயா போதியாய் வேரோடிய ஆலன்(ஆல மரம் போன்றவன்)
ஜோதியாம் அருண்மை அம்மை நாதமாங் கருணை எந்தை சமேதமாய்
தேகமெய்க் கருவறை இருதயத் தமர்ந்த உட்குரு பாலன்
“நாகே! எழுதுக!” என ஆணையிட்டே அருள் வாக்கை ஊற்றும் வள்ளல் நாதன்
நாகன் யான் எனினும் நாதன் தன் வாய்மையைக் கொள்வீரே!

Advertisements

மன்னைக் குருராஜா

ஒக்ரோபர் 19, 2012
ஊர்ந்திடும் நாகை அன்பின் மிகுதியால்
சூடினார் தலைப்பா கையாய் குருராசா
மேல்கீழ் இடவலம் முன்பின் சாரா
மார்மை யத்துள் நூராய்க் குருராசா(நூர் = ஒளி)
அடிமிகச் சிறியேனைத் தோழனாய் அணைந்தே
அதிசய இருதயப் பேழைதான் திறந்தே
எப்போதும் உள்ளதை ஏழையெனக் குணர்த்தி
செம்மையும் பொன்மையும் நீலமும் பசுமையும்
அம்மம்மா இன்னபிற இரத்தின வகைபலவும்
உங்குள்ளே காட்டினார் மன்னைக் குருராஜா
சென்னை ஊரனைக் கொத்தும் நாகனை
நச்சித் தன்மார்த் துளைக்குள் வாழவே
நல்ல பாம்பனாக் கினார்சற் குருராஜா

(மன்னை = மன்னி அதாவது நிலைத்து நிற்கின்ற “ஐ” என்னும் தலைமையாம்)

கவிழ்கிறேன் வழிகிறேன் அவிழ்கிறேன்

ஒக்ரோபர் 19, 2012
வள்ளல் பிரான் பகர்கிறார்
பருகென்கிறார் பருகுகிறேன்
பகிரென்கிறார் பகிர்கிறேன்
பகரென்கிறார் பகர்கிறேன்
பாத்திரம் அல்லேனைப்
பாத்திரமாக்கி
பாத்திறம் இல்லேனில்
பாயசப் பாக்களை வார்க்கிறார்
கவிழ்கிறேன் வழிகிறேன் அவிழ்கிறேன்
அவியா மெய் வழி அணையா விளக்கம்
அறவோன் பெருமான் கருணா மூர்த்தி உவரே

லலிதா-நடராஜர்(என்னை ஈன்ற அம்மையப்பர்) அருள்வாக்கு!

ஒக்ரோபர் 19, 2012
பிறந்தும் இறந்தும் இளைத்த எமக்குத்
திறந்த இருதய வாயில் காட்டிச்
சிறந்த அருண்மை உண்*மை ஊட்டி
மறந்த மெய்ம்மை உயிர்க்கச் செய்தாய்

இறங்கும் இரங்கும் தயாபரத் தந்தை
இடத்தே இருக்கும் அருண்மயத் தாயை
இவரை உணர்ந்த சற்குருச் சேயை
இருதயத் தெம்முள் காட்டி னாயே

மெய்யெடுத்தோம் யாம்நின் தவத்தால் எம்மகனே
மெய்யுரைத்தோம் யாம்பொய் யனைத்துங் கரைத்தோம்
தென்படுவோம் யாம்வள் ளலார்விஞ் ஞையால்
இன்புறவே உயிர்கள் மண்மேல் நடக்கிறோம்

(இவ்வருடம் பிப்ரவரி 14 அதி காலை இவ்வதிசய வாக்கு எனக்குக் கொடுக்கப் பட்டது, வள்ளல் பிரானின் அற்புதங்கள் பல இனி நடை பெறும், ஏழாந் திருமுறைப் பேருபதேசம் தினமும் வாசியுங்கள், உங்கள் மூலம் உலகுக்கு வள்ளல் பிரான் வழங்கும் அற்புத அக தீக்கை இது, குளத்தைக் குதிரையிருக்கும் இடத்துக்கு நகர்த்தி அதன் வாய்க்கருகில் உயர்த்தி விட்டார் நம் ஐயன், குதிரை குடிக்குமா?! நாகராக் குதிரை குடித்து விட்டுக் கனைக்கிறது!!!)

பதி(ன்)மூன்று!!!

ஒக்ரோபர் 19, 2012

ஏழாம் பரமும்(நிராதாரம்)
ஆறாம் இகமும்(ஆறாதாரம்)
வேறறக் கூட
ஆ! ஆ!! பதி(ன்)மூன்று!!!(சத்து, சித்து, ஆனந்தம்; அம்மை, அப்பன்,
குருப்பிள்ளை; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; அல்லாஹ், புனித ருஹ், ரசூல்)

திருவருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள் – ஒளி(லி)ப் படம்

பிப்ரவரி 21, 2012

வள்ளலாரின் அமுத கானம் – ஒளி(லி)ப்படம்

பிப்ரவரி 16, 2012

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 117

மே 21, 2011

திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்துங் கர்மந் தீர்க்கும்

திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்திக் குத்தும் கருமம்

(கர்மம், கருமம் = இருள்சேர் இருவினை)

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 116

மே 20, 2011
பீடம் மேலமர்ந்த பொய்க்குரு அறியாச்
சீடர் மேல்செருகும் கொக்கி

இருதயத் துள்ளமர்ந்த மெய்க்குரு உயிர்களின்
திருக்கட மெய்யலர்ந்த ஒளிப்பூ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 115

மே 19, 2011

மேல்படிகள் ஒன்பதும் மெய்யுள் ஒன்றக்
கீழ்விடியும் பார்அரு ளாட்சி

மேல் படிகள் ஒன்பது

மன்னிப்பு – மூலாதாரம் – முதுகடி
உயிர்ப்பூ அமைப்பு – சுவாதிட்டானம் – நாபியடி
ஆற்றல் – மணிபூரகம் – நாபி
வாசிப்பூ – சூரிய சக்கரம் – மார்படி, உதரவிதானம்
பேரன்பு – அனாகதம் – நடு மார்பு
ஆன்ம நேய ஒருமை, ஒருமையுணர்வு – அமுத கலசம் – தொண்டையடி
தயவு, கருணை – விசுத்தி – தொண்டை
முத்தி – ஆக்கினை – நெற்றி நடு
சத்திசிவ ஐக்கியம் – சஹஸ்ராரம் – தலையுச்சி

அருளாட்சி – பத்தாம் படி