சஹஜ நிலைக் குண்டலினி யோகம்

மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல்
 
சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல்
 
மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல்
 
சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம நேய ஒருமையில் நிலைபெறல்
 
இந்த ஏற்றம் அனாகதமாம் இருதய மையத்தினூடே எட்டு வடிவச் சிவ-சக்தியோட்டமாகத்(Figure Eight Flow) துவங்கி, கீழ்ச் சக்கரங்கள்(உஷ்ணம்) சுத்திகரிக்கப்பட்டு, மேல் சக்கரங்களின்(குளிர்ச்சி) இறக்கத்தில்(இதுவே கடவுளின் இரக்கமோ) முடிகிறது.
 
உமது மெய்க் குண்டத்தில் நிகழும் வேள்வியில், கீழ்ச் சக்கரங்களை, மேல் சக்கரங்களுக்கு ஆகுதியிட்டு அர்ப்பணிப்பதாக பாவித்து, அனாகதமாகிய இருதய மையத்தில் அமர்ந்து நீவிர் செய்யும் சஹஜ நிலைக் குண்டலினி யோகத்தில், நிராதார மேனிலை மேல் சக்கரங்களில் நிலை கொண்டு, இருதயத்தினூடே கீழ்ச் சக்கரங்களைச் சுத்திகரித்து, அவற்றை அருட்பேராற்றலின் இயக்கக் களமாக்கி, இவ்வாறாக ஆறாதாரம் வந்தடையும்.

சஹஜ நிலைக் குண்டலி யோகம் நேரங் கிடைக்கும் போதெல்லாம் நீவிர் செய்யலாம், இதுவே உம் சஹஜ நிலை என்று முழுதாயுணரும வரை,  இந்த எட்டு வடிவச் சக்தியோட்டத்தை தினமும் பல முறை நினைவு கூருங்கள், எட்டில் ஏற்றம் சக்தி, இறக்கம் சிவம், சக்தி வெம்மை, சிவம் குளிர்ச்சி, இரண்டின் சங்கமம் தண்மை
 
சத்தி அருள்தரச் சத்தன ருளுண்டாம்
சத்தன் அருள்தரச் சத்திய ருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்க
சத்தியம் எண்சித்தி தண்மை யுமாமே 
 
குருநாதர் திருமூலர் ஏற்கனவே உபதேசித்ததே இது.

மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
சுவாதிட்டானம் ஆக்கினை ஏற
ஆக்கினை சுவாதிட்டானம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
மணிபூரகம் விசுத்தி ஏற
விசுத்தி மணிபூரகம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
சூர்ய சக்ரம் அமிர்த கலசம் ஏற
அமிர்த கலசம் சூர்ய சக்ரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி
 
அனாகத இருதய மையமே
மூலாதார சஹஸ்ரார ஒருமை
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
மணிபூரக விசுத்தி ஒருமை
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
 
மூலாதார சஹஸ்ரார ஒருமை
பிறப்பு இறப்புச் சுழலறுக்கும்
பேரின்பப் பெருவாழ்வு
 
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
ஆண் பெண் காமத்தினவறுக்கும்
சிவ சக்தி காதற்புணர்வு
 
மணிபூரக விசுத்தி ஒருமை
ஆணவ ஆர்ப்பாட்ட வன்பறுக்கும்
சச்சிதானந்த அருட்பேராற்றல்
 
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
மருண் மயக்க இருமையறுக்கும்
ஆன்ம நேய ஒருமை
 
அனாகத இருதய மையத்தில் அமர்ந்தே
செய்வாய் சஹஜநிலைக் குண்டலி யோகம்
எட்டு வடிவச் சிவசக்தியாய் ஓடும்
சிவாமய வாசியை நீபக்தியாய் நாடி
 
கீழ்மேல் இடவலம் முன்பின் இருமையெலாம்
மாய்ந்தே போகும் ஒளிக்கோளப் பேருணர்வை
நினக்க ளிக்கும் குண்டலி யோகத்தின்
கணக்கு சொன்னேன் சஹஜநிலை இதுவாமே!

10 Comments »

  1. 1
    kumar Says:

    I want to know how enlight make awakening in ajna it is too dificult to concentrate…I want to awake the enlight in ajna give your suggestion please!

  2. 2
    iamnaagaraa Says:

    Thanks for your comment, Shri. Kumar. Forget ajna chakra, focus Your attention to Your Sacred & Immaculate Heart by mindful breathing, whatever need to happen in ajna chakra will happen spontaneously, Let Your mind Descend Into the Heart, Let Your body Ascend Into the Heart, And You Be Poised in the Heart!

  3. 3
    Siva Ranjan Says:

    மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
    சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
    அனாகத இருதய மையத்தினூடே
    எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி//

    அய்யா யார் இந்த பாடலை இயற்றியது என்று கூற முடியுமா… 🙂 தெரிஞ்துக்கொள்ள விருப்பப்படுகிறேன்… 🙂

  4. 5
    Siva Ranjan Says:

    ஒஹ்… 🙂 தங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா.. தங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே….. 🙂

  5. 6
    ganapathy Says:

    Your site is very good for yoga .Pls mail us your address.

    Regards
    Ganapathy
    Tirupur
    cell7373132060

  6. 8
    ராமராஜன் Says:

    அய்யா மிகவும் அருமை.
    நீங்கள் தவம் செய்கிரீர்களா.?
    தீட்சை வழங்குவீர்களா.?
    நான் தீட்சைப் பெற்றுள்ளேன்.எனக்கு ஆக்கினைதான் முதலில் தரப்பட்டது. ஆனால் அந்த அதிர்வுகள் சரியாக இல்லை. ஆனால் ஒரு அழுத்தம் மட்டுமே உணர்கிறேன்.ஆனால் தவம் செய்பவர்கள் அரிகில் வரும்போது, அவர்களீன் ஜீவகாந்த சக்தியினால்அதிர்வலைகள் உணரமுடிகிறது.
    தனிமையில் நன்றாக அதிர்வுக்கு என்ன செய்ய வேண்டும். மனமும் தற்போது கட்டுப்பட்டுள்ளது.
    உதவி தேவை.
    -ராமராஜன்
    :8124818767
    ramarajan257@ymail.com

  7. 9
    iamnaagaraa Says:

    உம் பதிவிற்கு நன்றி திரு. ராமராஜன், நடு மார்பில் இருதய கவனமே சாலச் சிறந்தது. ஆக்கினை சஹஸ்ராரம் தாண்டிய துரியம் என்னும் அதீத விழிப்பும், துரியாதீதம் என்னும் அதி அதீத விழிப்பும், இருதய தளத்தில் உணர முடியும். நம் தலை கால்களின் மூலம், வேர் ஆதி இருதயம். மேலும் அறிய தொடர்பு கொள்ளவும்: 9566021578
    iamnaagaraa@gmail.com


RSS Feed for this entry

பின்னூட்டமொன்றை இடுக