மே 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 117

மே 21, 2011

திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்துங் கர்மந் தீர்க்கும்

திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்திக் குத்தும் கருமம்

(கர்மம், கருமம் = இருள்சேர் இருவினை)

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 116

மே 20, 2011
பீடம் மேலமர்ந்த பொய்க்குரு அறியாச்
சீடர் மேல்செருகும் கொக்கி

இருதயத் துள்ளமர்ந்த மெய்க்குரு உயிர்களின்
திருக்கட மெய்யலர்ந்த ஒளிப்பூ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 115

மே 19, 2011

மேல்படிகள் ஒன்பதும் மெய்யுள் ஒன்றக்
கீழ்விடியும் பார்அரு ளாட்சி

மேல் படிகள் ஒன்பது

மன்னிப்பு – மூலாதாரம் – முதுகடி
உயிர்ப்பூ அமைப்பு – சுவாதிட்டானம் – நாபியடி
ஆற்றல் – மணிபூரகம் – நாபி
வாசிப்பூ – சூரிய சக்கரம் – மார்படி, உதரவிதானம்
பேரன்பு – அனாகதம் – நடு மார்பு
ஆன்ம நேய ஒருமை, ஒருமையுணர்வு – அமுத கலசம் – தொண்டையடி
தயவு, கருணை – விசுத்தி – தொண்டை
முத்தி – ஆக்கினை – நெற்றி நடு
சத்திசிவ ஐக்கியம் – சஹஸ்ராரம் – தலையுச்சி

அருளாட்சி – பத்தாம் படி

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 114

மே 18, 2011

இறந்தகால இருள்சேர் இருவினை சேராமல்
இக்கணத்தை மீட்கவே மன்னிப்பு

பவக்கடல் தாண்ட ஆண்டவனின் மின்விசைப்
படகெனும் மன்னிப் பேறு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 113

மே 17, 2011


மன்னிப்பூ வின்றி மெய்க்கேது உயிர்ப்பூ
உன்னிப்பார் உள்ளே நீ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 112

மே 16, 2011

வெட்ட வெளியே தன்மெய் யுணரக்
கொட்டும் ஒளியே உயிர்ப்பூ

கருமச் சுழலை உயிர்ப்பூச் சுழலில்
கரைக்க மெய்யே ஒளிப்பூ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 111

மே 13, 2011

பருப்பொருளின் மெய்ப்பொருளாய் வாழும் அருளைஉட்
குருஒளிப்பூ மொழியால் அறி

பருப்பொருள் = matter
மெய்ப்பொருள் = true meaning
ஒளிப்பூ = language of light

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 110

மே 11, 2011

பரஞ்ஜோதி அளிக்கும் ஒளிப்பூ வாசம்
பரவதேக மெய்க்குள் உயிர்ப்பூ

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 109

மே 9, 2011


பழிக்குப் பழியென்னும் கருமச் சுழலை
அழிக்க மன்னிப்பே வழி

கடந்தகாலப் பாதகங்கள் இனியுந் தொடராமல்
கழுவும்வழி மன்னிப்பே அறி


அன்றின் பதிவுகள் இன்றுந் தொடராமல்
அன்பில் பதியவை மனம்

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 108

மே 8, 2011

மன்னித்து மேலேறி உயிர்ப்பூ வாசம்
மெய்யுள்ளே வாசிக்க ஆற்றல்